• SPARKLES | மினுமினு

எதிர்நீச்சல்!


சிறுகதை : ஸ்ரீநிவாஸ்

ஆபீசிலிருந்து தமிழ் வீட்டுக்கு கிளம்பவே லேட். ஆகிவிட்டது! கிளம்பும் சமயத்துக்கு அட்டெண்டர் வந்து ’’மேடம்! இந்த மாச சேல்ஸ் ரிப்போர்ட் மும்பைக்கு மெயில் பண்ணிட்டு உங்களை மேனேஜர் கிளம்பச் சொன்னார்." என்று நீட்டினார்.

முகம் கழுவி துப்பட்டாவை சரி செய்து, ஆபீசிலிருந்து கிளம்பினேன். பாஸ்கர் நினைவு அலைமோதியது!

’’இனி உனக்கு சுடிதார்தான். புடைவை, ஒரு ரூபா சைஸ் பொட்டு, மஞ்சள் கேள்வி கேக்காமே அம்மன்னு ஒத்துக்கலாம். ஆனா, ராத்திரிக்கு மட்டும் புடைவைதான்" என அவன் கண் சிமிட்ட அரை மணிக்குப் பின்தான் எனக்குப் புரிந்தது! சட்டென்று மனதை திசைதிருப்பினேன்.

குளிர்காற்று வீச மழையின் அறிகுறி. பஸ்கள் நிறுத்தாமல் செல்ல ஷேர் ஆட்டோவை நிறுத்தினேன். 25 ரூபா தண்டம்.

கழுத்தில் பட்டை, உதட்டில் அலட்சியமென இரு பெண்கள்.

கவி! ஆண்ட்டிக்கு இடம் கொடு!"

ஆண்ட்டியாம்! உன்னைவிட 7 வயதுதான் அதிகம் இருப்பேன்!"

திடீரென்று கண்ணில் நீர் வர ஆண்ட்டி, எனிதிங் ராங்?"

ஒண்ணுமில்லே. கண்ணிலே பூச்சி."

எப்படி சொல்வேன்? எவரிதிங் இஸ் ராங். புயல் போல வந்து என்னைக் கவர்ந்து, தாயாக்கி பனி போல மறைந்தானென்று?

*********

பக்கத்து வீட்டு மாமா அடிக்கடி வருபவர்தான். ஆனால் அன்று வந்திருந்தது விசேஷக் காரணத்துக்காக! அவர் வீட்டு விசேஷத்தில் என்னை பார்த்துப் பிடித்துப் போன அவர்கள் உறவினர் ஒருவர் தன் பையனுக்கு என்னைப் பெண் கேட்டார்களாம்.

’’ஒரே பையன். டாக்டருக்குப் படிச்சிருக்கான். சொந்த வீடு இல்லைங்கிற குறை தவிர வேற ஒண்ணும் இல்லை."

************

ஆறு மாதத்தில் திருமணம்.

இளம் டாக்டரின் வாழ்க்கை எதிர்நீச்சல் என்பதை அறிந்துகொண்டேன். மேற்படிப்புக்காக அறுவை சிகிச்சை டி.என்.பி. படிக்க அரசாங்க மருத்துவமனையில் காலை முதல் மாலை வரையிலும் பிறகு சீப் நடத்தும் சொந்த கிளினிக்கில் மாலையிலும் வேலை.

’’நாள் முழுக்க போர் அடிக்குதுங்க. நான் கம்ப்யூட்டர் கிளாஸ் போறேனே"

‘’கொஞ்சம் பொறு. அப்பா அம்மாவோட பழகு. ஆறு மாசம் ஆகட்டும்"

’’மாமா காலையிலே வெளியே போனா மதியம் வந்து சாப்பிட்டு தூங்கறார். அத்தை எப்பவும் டிவி முன்னாடிதான். எனக்கு ரொம்ப போரடிக்குதுங்க."

ஆறு மாதம் கழித்து அனுமதி கிடைத்தது. தலை தீபாவளிக்கு அழைக்க வந்த அம்மா அப்பாவிடம் ’’கம்ப்யூட்டர் கிளாஸ் அட்மிஷன் முடிச்சிட்டு வரேன்" என்று சொன்னேன் சந்தோஷமாக!

அன்று இரவு 10 மணிக்கு புறப்பட்டு பைக்கில் 100 மைல் பயணம் செய்து அம்மா வீட்டுக்கு விடியும்போது வந்து சேர்ந்தோம். செம ஜாலி ரைடு!

தலைதீபாவளி முடிந்த கையோடு கிளம்ப வேண்டியிருந்தது.

’’மாப்பிள்ளை.. தமிழ் இன்னும் 2 நாள் இருக்கட்டுமே?" பாஸ்கரிடம் அப்பா கேடக்,

’’சாரி மாமா! அம்மாவுக்கு கால் வலி. கொஞ்சம் பொறுங்க. கொஞ்சநாள் கழிச்சு நானே அனுப்பறேன்."

அவன் யதார்த்தமாக அப்படி சொன்னது, விபரீதமாக அப்படியா பலிக்க வேண்டும்?!

***********

’’என்னங்க, மூணு மணிக்கே வந்துட்டீங்க? உடம்பு சரியா இல்லையா?" சோர்வாக வீட்டுக்குள் நுழைந்த பாஸ்கரிடம் கேட்டேன்.

’’கொஞ்சம் டயர்டா இருக்கு. தூங்கினா சரியாயிடும். சீப் கிட்ட சொல்லிட்டு வந்துட்டேன்."

மறுநாளும் எழாமல் படுத்திருந்தான்.

’’என்னங்க, கால் இப்படி வீங்கியிருக்கு. மூச்சும் வாங்குது, வாங்க ஆஸ்பத்திரிக்குப் போகலாம்."

ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட அடுத்த அரை மணிக்குள் ICUவில் அனுமதிக்கப்பட்டான்.

வெளியே வந்த டாக்டர், ’’ ஏம்மா.. உன் புருஷன் சரியானபடி மாத்திரை சாப்பிட்டாரா இல்லையா? பிபி எகிறி இருக்கு. ஆறு மாசத்துக்கு முன்பே சொன்னேனே. அவரோட இருதயக் கோளாறு பத்தி! ஒரு நாள் கூட மாத்திரையை தவறக்கூடாதென்று..."

’’ஐயையோ.. அதுபத்தி எனக்குத் தெரியாதே டாக்டர், சீரியஸ் இல்லையே?"

ட்ரை பண்ணலாம்."

மூன்று நாளைக்குப் பிறகு ஒரே வார்த்தை ‘சாரிம்மா"’

ஐந்து மாதத்திற்குப் பின் தாயானேன்.

************

’’தமிழ் உன்னோட கண்ணைப் பார்த்த உடனே விழுந்திட்டேன். நமக்கு பெண் பிறந்தால் மான்விழி"

பையனாய் இருந்தால்?"

சிம்பிள், கமலக்கண்ணன்!"

***************

லஸ்ஸில் இறங்கி வீடு போய் சேர எட்டு மணி ஆகிவிட்டது.

‘’ஏழு மணியிலிருந்து கையில் நிற்காமல் அழுதான். இப்போதான் பால் குடிச்சிட்டு தூங்கறான்." -சொல்லிவிட்டு அம்மா சீரியல் பார்க்கப் போனாள். நிஜ அழுகை போதாதென்று நிழல் அழுகையும் தேவை அவளுக்கு.

வீதியே சீரியலில் மூழ்கியிருக்க மொட்டை மாடியில் நிலவும் நினைவும்.

அழைப்பு மணி ஒலித்தது. சீப்!

பக்கத்து தெருவில் கல்யாணத்துக்கு வந்தேன். அப்படியே உன்னையும் குழந்தையையும் பார்த்துட்டுப் போக வந்தேன்" ஒரு பரிசை நீட்ட,

என்ன சார் இதெல்லாம்?"

பாஸ்கர் ரொம்ப உழைப்பாளி. அவனைப்போல ஒருத்தர் கிடைப்பது ரொம்ப கஷ்டம். ஆண்டவன் கருணை காட்டலே. முன்பே குழந்தையைப் பார்க்க வந்திருக்கணும். நான் யு.கே. போயிட்டு போன மாசம்தான் வந்தேன். என்னம்மா, ஒண்ணும் பேசாம இருக்க?"

அய்யா, இதோட உங்க கடமை முடிஞ்சுது. இனி எப்போதாவது அவரைப் பற்றி நினைப்பீங்க. அவர் போன ரெண்டாவது மாசம் அவங்க அப்பா, அம்மா ஊருக்குப் போய்ட்டாங்க. என் மகன் போனப்பறம் இங்க எங்களுக்கு என்ன வேலைன்னு சொல்லிட்டு. இன்னும் குழந்தையைப் பார்க்கக்கூட வரல்லே. எங்க அப்பாவுக்கு அவர் கழனிதான் முக்கியம். எங்க அம்மா மட்டும் என்கூட இப்போ இருக்காங்க. தரையில் போட்ட மீனைப்போல. அவங்க காலம் ஒரு பத்து வருஷமா என்னவோ? எனக்கும் என் மகனுக்கும் ஆயுள் தண்டனை. எனக்கு ஒரு முறை, ஒரே ஒரு முறை அவரைப் பார்த்து நான் உனக்கு என்ன துரோகம் செஞ்சேன், வியாதியை மறைச்சு கல்யாணம் கட்டினேன்னு கேக்கணும்."

-மன ஆற்றாமையை கட்டுப்படுத்த முடியாமல் சீஃபிடம் கொட்டித் தீர்த்தேன். மனம் சற்றே லேசானது மாதிரி இருந்தது.

Comments

Lathananth says :

பாஸ்கர் மீது கோபமும் தமிழ் மீது அனுதாபமும் பொங்குகிறது.

Meenakshi Balganesh says :

பொறுப்பற்ற டாக்டர் எப்படி நோயாளிகளை குணப்படுத்துவான்? அன்பற்ற கணவனாகத்தான் தெரிகிறான். கடமை தவறிய மகன். பெற்றோரின் குணமும் அதுவே. விசித்திர உலகம்!!!

Sujatha Venkatakrishnan says :

எல்லோருக்கும் அவரவர் சுயநலம்தான் பெரிதாக இருக்கிறது.தமிழின் நிலைமையை யாரும் புரிந்து கொள்ளவே இல்லை

Sukumar says :

சிறுகதை அருமை.

Thulasi kannan says :

பொதுநலம் காத்து கடவுளாக இருக்க வேண்டிய மருத்துவர் சுயநலமாக இருந்ததின் வி ளைவு ஒரு பெண்ணின் வாழ்க்கை கேள்விகுரியாக இருக்கிறது கைய்யில் குழந்தையுடன்..........?

சுசீலா says :

முகமூடி அணிந்த மனிதர்கள்.இயந்திர உலகம் ... பொய்யுலகினுள் தத்தளிக்கும் எத்தனையோ தமிழ்கள்... தங்கள் முதுகில் அன்பெனும் மூட்டையை சுமந்து கொண்டு... இனியாவது எதிர்நீச்சல் போட கற்றுக் கொள்ளட்டும் ...

Jayanti Sundar Rajan says :

It`s a beautiful story.. Heart felt heavy and sad about Tamizh`s future ! Pathetic....

Dr.r.mani says :

I am sorry many stories have come like this but the hero is a doctor. Once again sorry my honest opinion

Mala says :

கதை சொன்ன விதம் அருமை.

Dr.D.Sankar says :

Very nice sirukathai

Dr Vijayaraghavan says :

தமிழ் நினபது தவறு. எல்லாம் கடவுள் விருப்பம் என்று‌ நினைக்க வேண்டும். குழந்தையை காக்க வேண்டும்

Mani says :

Nicely presented touching short story.

ஸப்தரிஷி says :

அருமையான சிறுகதை படைத்த ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!

Dr Vijayaraghavan says :

Tamizh should think differently. Should not blame her husband. ( Even in dreams also should not think that she has been cheated) Now should concentrate on her child. Leave everything to God .

குரு.அழகரசன் says :

நிறைய மருத்துவர்கள் தங்கள் உடல்நிலையை சரியாக பேணுவதில்லை என்ற உண்மையை உறக்கச் சொன்னீர். கதை சொன்ன விதம் அருமை, நிறைய, அடிக்கடி பல சிறுகதைகளை எதிர்பார்க்கிறோம், வாழ்த்துக்கள்.

Narayanakumar says :

Story presentation is superb. Realistic story. However, doctor concealing his illness to his wife is not acceptable.

Rukmini R says :

Very touching story.Felt very sorry for Thamizh

Krishnamurthy says :

Really good story.Will a doctor hide such a serious illness?Will he fail to take his medicines?She should have facef the world boldly. Very good story

Dr.Rathnamala says :

Nice short story.Unfortunate Tamizh.

Kalyani sridharan says :

I can`t agree. Husband depicted as a good doctor.how could he get married without telling his illness and no proper treatment taken.

REMADEVI says :

சிறுகதை அருமை.

Mahesh says :

Nice one Sir, please write more stories

Sridharan says :

Sri Super short story.

KSRavishankar says :

Why this wicked pleasure Let the stories at least be pleasant and positive

G Rangarajan says :

மிக அருமையான சிறுகதை வாழ்த்துக்கள்! படித்ததும் கண் கலங்கி விட்டது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :