• JUST IN | சுட சுட

விமானத்தில் பறக்கும்போதே உயிரிழந்த ஜனாதிபதி வேட்பாளர்! சோகத்தில் காங்கோ மக்கள்!





காங்கோ நாட்டின் எதிர்க்கட்சி வேட்பாளர் கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவான காங்கோ நாட்டைச் சேர்ந்தவர் கை பிரைஸ் பர்பைட் கோலஸ் (61 வயது). இவர் 1979 மற்றும் 2016 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்துள்ளார். இந்நிலையில் இந்த ஆண்டில் கடந்த ஞாயிற்று கிழமை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் எதிர்க் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டுள்ளர்.

இதனிடையே இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரை அவசர சிகிச்சைக்காக மருத்துவ விமானத்தில் பிரான்ஸ் நாட்டிற்கு கொண்டு சென்றனர். ஆனால், விமானத்தில் செல்லும்போதே பாதி வழியிலே உயிரிழந்தார் கை பிரைஸ்.

இதனிடையே கை பிரைஸ் உயிரிழப்பதற்கு முன்பு தனது மோசமான நிலை குறித்து காட்சியாளர்களிடம் தெரிவித்த அவர் நடைபெறும் தேர்தல் வாக்குபதிவில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :