• JUST IN | சுட சுட

திரைப்பட தேசிய விருது பெற்ற தனுஷ், விஜய் சேதுபதிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!





2019ம் ஆண்டிற்கான தேசிய விருது பெற்ற தமிழ் திரைப்பட கலைஞர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2019ம் ஆண்டிற்கான தேசிய விருது அறிவிப்புகள் நேற்று வெளியாகின அதில் சிறந்த நடிகருக்கான விருதுக்கு தனுஷ், சிறப்பு இணைநடிகருக்கான விருது விஜய் சேதுபதி, சிறந்த சிறப்புப் படத்துக்கான விருது நடிகர் பார்த்திபன், இசையமைப்பாளர் இமான் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்டோருக்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ட்விட்டரில் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் `அர்ப்பணிப்புடன் - முழுமையான உழைப்பைச் செலுத்துகிறவர்களுக்கு விருது கிடைத்துள்ளது; மகிழ்கிறேன்! மென்மேலும் சிறப்புகளைப் பெறுக!` என வாழ்த்தியுள்ளார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :