• TRENDING | பர பர

தண்ணீரில் இருந்து துள்ளிக்குதித்து கின்னஸ் சாதனை படைத்த எகிப்து வீரர்!





எகிப்து நாட்டைச் சேர்ந்த வீரர் ஒருவர், தண்ணீரில் இருந்து 2.30 மீட்டர் உயரம் துள்ளிக்குதித்து சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

எகிப்து நாட்டின் இஸ்மாயிலியாவைச் சேர்ந்த 21 வயதான பொறியியல் மாணவர் சயீத் ஷாபன். இளம் நீச்சல் வீரரான இவர் மோனோஃபின் அணிந்துகொண்டு நீரில் இருந்து மிக வேகமாக மேலே வந்து துள்ளிக் குதித்து உலக சாதனை படைத்துள்ளார். அவர் தாண்டுதலை 2.30 மீட்டர் உயரத்தில் பதிவு செய்துள்ளார். இதன் மூலம் 9 ஆண்டு கால சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

இதற்கு முன்னதாக 2011ல் 2 மீட்டர் உயரமே தாண்டுதலில் சாதனையாக இருந்துவந்தது. அதை முறியடிக்கும் வகையில் அதே நகரமான இஸ்மாயிலியாவைச் சேர்ந்த சோலிமான் சயத், இத்தாலிய நாட்டினரான சிசரே ஃபுமரோலா மற்றும் ஸ்டெபனோ ஃபிகினி ஆகிய மூவரும் இந்த சாதனையை செய்திருந்தனர்.

தற்போது சயீத் ஷாபன் 2.30 மீட்டர் உயரத்தை பதிவு செய்ததன் மூலம் 9 ஆண்டு கால சாதனையை முறியடித்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

Youtube link : : https://www.youtube.com/watch?v=wzIYK51tXJo




Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :