• TRENDING | பர பர

பல நூறு ஆண்டுகளாக காத்திருந்து வெடித்த எரிமலை!





ஐஸ்லாந்து நாட்டில் உள்ள எரிமலை ஒன்று, கடந்த 900 ஆண்டுகளகாக அமைதி காத்து, முதன் முறையாக வெடித்து நெருப்புக்குழம்பை உமிழ்ந்து வருகிறது.

ஐஸ்லாந்து நாட்டின் தலைநகரான ரெய்க்ஜாவிக்கிலிருந்து 40 கி.மீ தொலைவில் ஃபேக்ரதால்ஸ்ப்ஜால் எரிமலை உள்ளது. தற்போது இந்த எரிமலை வெடித்துள்ளதாக உலக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

900 வருடங்களாக அமைதியாக இருந்துவந்த ஃபேக்ரதால்ஸ்ப்ஜால் எரிமலை தற்போது முதன்முறையாக வெடித்து தீக்குழம்பை கக்கி வருகிறது. இதன் வாய் பகுதி 500 முதல் 700 மீட்டர் நீளமாகும்.

எரிமலை வெடிப்பின் காரணமாக, ஐஸ்லாந்தின் தலைநகரான ரெய்க்ஜாவிக் புறநகரில் உள்ள கெய்லிர் மலைக்கருகே நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அதோடு, கடந்த சில வாரங்களாகவே ஐஸ்லாந்தில் 40 முறை சிறியளவிலான நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஃபேக்ரதால்ஸ்ப்ஜால் எரிமலை வெடித்துச் சிதறியதால், அருகில் வசிப்பவர்கள் எல்லோரும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த எரிமலை வெடிப்பு காரணமாக பொதுமக்கள் யாருக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லை எனவும் அறியப்படுகிறது.

Instagram Link : : https://www.instagram.com/p/CMr3605Avt-/




Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :