• JUST IN | சுட சுட

சீமான் வேட்புமனு நிராகரிப்பு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு.





நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் வேட்புமனு தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது

தமிழகம், புதுச்ரேி மற்றும் கேரளாவில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யும் பணி கடந்த 12-ம் தேதி தொடங்கியது.

இதையடுத்து, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அதன் மீதான பரிசீலனையை முடித்த தேர்தல் ஆணையம் இறுதி வேட்பாளர் பட்டியலை அறிவித்து வருகிறது.

அந்த வகையில், திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது வேட்புமனுவை சில தினங்களுக்கு முன்னர் தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில், அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :