• TRENDING | பர பர

தங்கத்தை கடத்தும் எறும்புக் கூட்டம்! என்னடா நடக்குது இங்க?!





தங்கத்தின் விலை உச்சம் தொட்டுவரும் வேளையில், தங்கச் சங்கிலி ஒன்றை எறும்பு கூட்டம் அலேக்காக நகர்த்திச் செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

எறும்புகள் பொதுவாக கூட்டமாக சேர்ந்து இனிப்புப் பொருட்களை நகர்த்திச் செல்வதை நம் வீடு உட்பட பல இடங்களிலும் பார்த்திருப்போம். ஆனால், இங்கு எறும்புக் கூட்டம் ஒன்று தங்கச் சங்கிலி ஒன்றை கூட்டமாகச் சேர்ந்து பக்குவமாக இழுத்துச் செல்கின்றன.

தற்போது, தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டுவரும் இந்த வேளையில் எறும்புக்கூட்டம் தங்கச்சங்கிலியை இழுத்துச் செல்லும் வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. அடக் கடவுளே! எறும்புகளுக்கும் தங்க நகை மீது ஆசையா?!

Youtube link : : https://www.youtube.com/watch?v=ypba7xje9dM&t=14s

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :