• JUST IN | சுட சுட

இந்தியா-இங்கிலாந்து ஒன் டே கிரிக்கெட் போட்டி: நாளை புனேயில் துவக்கம்!





இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், புனேயில் நாளை துவங்குகிறது.

இதனையடுத்து, அகமதாபாத்திலிருந்து, தனி விமானம் மூலம் இந்திய அணியினர் புனே வந்தடைந்தனர். நாளையப் போட்டிக்கு தயாராகும் வகையில், இந்திய அணியினர் பயிற்சியைத் தொடங்கியுள்ளனர்.

இப்போட்டி, நாளை பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கி, மகாராஷ்டிர கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில், பகலிரவு போட்டியாக நடத்தப்படுகிறது. இத்தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இந்திய அணி விபரம் :

ரோகித் ஷர்மா

ஷிகர் தவான்

ஷ்ரேயாஸ்

ஷப்மன் கில்

சூர்யகுமார்

விராத் கோலி(கேப்டன்)

ஹர்திக் பாண்ட்யா

கருணால் பாண்ட்யா

வாஷிங்டன் சுந்தர்

ரிஷப் பண்ட்

கேஎல் ராகுல்

புவனேஷ்வர் குமார்

குல்தீப்

முகமது சிராஜ்

பிரசித் கிருஷ்ணா

ஷர்துல் தாகுர்

டி.நடராஜன்

யஸ்வேந்திர சஹால்

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :