சமீபத்தில், வாஷிங்டனில் இருந்து அட்லாண்டா செல்ல அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், விமானத்தில் ஏறும்போது, படிக்கட்டில் 3 முறை தொடர்ந்து தடுக்கி விழுந்தார். தற்போது அந்த வீடியோவை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ் க்ரியேட் செய்து கலாய்த்து வருகின்றனர்.
அமெரிக்காவின் அட்லாண்டா நகரில், சமீபத்தில் 3 மசாஜ் நிலையங்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக அங்குள்ள முக்கிய தலைவர்களை சந்தித்து பேசுவதற்காக, அமெரிக்க ஜனாதிபதி தனி விமானத்தில் வாஷிங்டனில் இருந்து அட்லாண்டாவுக்கு புறப்பட்டார்.
இந்நிலையில், அவர் விமானத்தின் படிக்கட்டுகளில் ஏறும்போது, கால் தடுமாறி முதல்முறை விழுந்தார். அதனை சமாளித்தபடி மறுபடியும் ஏற முயற்சித்தபோது, மீண்டும் மீண்டும் தடுமாறி 3 முறை கீழே விழுந்தார். அவருக்குப் பின்னால் யாரும் செல்லாத காரணத்தால் அவர் கீழே விழுவதை யாரும் தடுக்கவோ உதவவோ முடியவில்லை.
பின்னர் சுதாரித்துக்கொண்டு, மேலே சென்றபின் அனைவருக்கும் கையைசைத்துவிட்டு, விமானத்தின் உள்ளே சென்றார். அதிவேக காற்று வீசியதால் ஜனாதிபதி தவறி விழுந்ததாகவும், தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இதுசம்பந்தமான வீடியோ வைரலான நிலையில், தற்போது, அவர் கீழே விழுந்த விஷயத்தை வைத்து மீம்கள் க்ரியேட் செய்து பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.
கோல்ப் பந்தை ஒருவர் அடிக்கும்போது அது தலையில் பட்டு அவர் கீழே விழுவது போலவும், வீல் சேரில் உட்கார்ந்தபடி விமானத்தில் ஏறுவது போலவும் மீம்கள் புகைப்படமாகவும், வீடியோவாகவும் ட்விட்டரில் தற்போது வலம் வருகின்றன. அதில சில…
Original Video Twitter link :
https://twitter.com/Pagemaster4Life/status/1372971005073838088
twitter link : : https://twitter.com/gril887/status/1372979205026242566

Comments