• TRENDING | பர பர

என்னால் முடியும் தம்பி: நிரூபித்துக் காட்டிய யானையின் வைரல் வீடியோ!





மனிதனிடத்தில் இருக்கின்ற சில குணங்கள் விலங்குகளிடத்திலும் பார்க்க முடியும். அப்படி சில விஷயங்கள் நமக்கு பிரமிப்பையும் ஏற்படுத்திவிடும். அப்படியொரு சம்பவம்தான் தற்போது வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் யானை பாகன் ஒருவர் யானையை குளிப்பாட்டுகிறார். அப்போது யானையின் பின்புறம் தண்ணீர் பீய்ச்சும்போது, அந்த யானை தலைகீழாக தனது பின்னங்கால்களை தூக்கியபடி, முன்னங்காலை தரையில் ஊன்றி தலைகீழாக நிற்கிறது. அந்த யானைப்பாகனும் அதனைக் குளிப்பாட்டுகிறார்.

டன் கணக்கில் எடையுள்ள யானை, அத்தனை எடையையும் தனது இரண்டு கால்களில் தாங்கி தலைகீழாக இவ்வாறு நிற்பது ஆச்சரியமான விஷயம்தான். இவ்வாறு நிற்பதற்கும் அதற்கு நல்ல பயிற்சியும் தேவை.

‘இங்கு யானைகளால் செய்ய முடியாத விஷயம் என்று ஏதாவது இருக்கிறதா?’ என்ற கேப்ஷனுடன் ட்விட்டரில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.

விலங்குகளின் வித்தியாசமான குறும்பு வீடியோக்கள், சண்டை போடும் வீடியோக்கள் என சமூகவலைதளத்தில் அனைவரையும் கவரும் வீடியோக்கள் மத்தியில், யானை தலைகீழாக நிற்கும் இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

twitter link : : https://twitter.com/TheSun/status/1373356166303129607

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :