• JUST IN | சுட சுட

பள்ளிகளை தொடர்ந்து கல்லூரிகளுக்கும் விடுமுறை? அரசு ஆலோசனை!





கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. தேர்வு நடத்த முடியாத நிலை ஏற்பட்டதால், பல மாநிலங்கள் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தன. அந்த வகையில் தமிழகத்திலும் 1 முதல் 9 வகுப்பு வரை மாணவர்களுக்கு, தேர்வு நடத்தாமலேயே, ஆல் பாஸ் வழங்கப்பட்டது.

கடந்த 10 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இந்த சூழலில் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ஜனவரி 19-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று முன் தினம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன.

இதனிடையே நாடு முழுவதும் பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு திடீரென உயர்ந்து வருகிறது.. தமிழகத்திலு மார்ச் மாதத்திற்கு முன்பு வரை 500-க்கும் குறைவாக பதிவான கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது 1000-ஐ தாண்டியுள்ளது.. இந்த சூழலில் தஞ்சையில் பல பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என 60-க்கும் மேற்பட்டோரு கொரோனா பாதிப்பு உறுதியானது.

இந்நிலையில் தமிழகத்தில் 9,10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் விடுமுறை என்று தமிழக அரசின் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அறிவித்துள்ளார். மறு உத்தரவு வரும் வரை, 9,10,11 வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது, கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக விடுமுறை விடப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.. ஏற்கனவே ஒரு சில தனியார் கல்லூரிகள் ஏப்ரல் 2-ம் தேதி முதல் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளன.. அரசுக் கல்லூரிகளை மூடுவது குறித்து அரசு விரைவில் அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :