• JUST IN | சுட சுட

தேர்தலில் இருந்து விலகிய நடிகர் வேட்பாளர்: காரணம் என்ன?





தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலில் கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட நடிகர் மன்சூர் அலிகான் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அதுமட்டும் இல்லாமல் தனது தொகுதி மக்களை தினமும் சந்தித்து அவர்களிடம் தீவிர தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டுவந்தார். இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் தற்போது திடீரென தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மன்சூர் அலிகான் தெரிவித்ததாவது:

நான் தொண்டாமுத்தூர் தொகுதியில் தேர்தல் பிரசாரத்துக்கு சென்றபோது மக்கள் பலரும் என்னிடம் கேட்ட கேள்விதான், என்னை தேர்தல் போட்டியிலிருந்து விலக வைத்தது. ஓட்டுகளை சிதறடிக்க வேண்டும் என்பதற்காக எந்த கட்சியிடம் நீங்கள் பணம் பெற்றுகொண்டு, தேர்தலில் போட்டியிடுகிறீர்கள் என கேட்கிறார்கள். இது எனக்கு மிகவும் சங்கடமாகிவிட்டது. அதுவே நான் தேர்தலில் போட்டியிடாததற்கு காரணம்

-இவ்வாறு மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :