• TRENDING | பர பர

மணல் சிற்பம் மூலம் மாணவர்கள் தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம்.





தமிழகத்தில் நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலில் 100% வாக்களிப்பதை வலியுறுத்தி, மரக்காணம் அருகே அனுமந்தை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கடற்கரையில் மணல் சிற்பம் உருவாக்கினர்.

இந்த மணல் சிற்பத்தில் இந்திய வரைபடம், தமிழக தமிழக வரைபடம் மற்றும் தலைமை செயலகத்தின் முகப்புத்தோற்றம் ஆகியவை இடம்பெற்றிருந்தன. இந்நிகழ்ச்சியில் திண்டிவனம் சார் ஆட்சியர் அனு முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா, மாவட்ட கல்வி அலுவலர் சாந்தி, வட்டார கல்வி அலுவலர் சேகர், பள்ளி தலைமை ஆசிரியர் அன்னபூரணி, ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்கு அளிக்க வேண்டும். வாக்கு விற்பனைக்கு அல்ல உள்ளிட்ட வாசகங்கள் மூலம் மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர் அனைவரும் உறுதிமொழியும் எடுத்து கொண்டனர்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :