• SPARKLES | மினுமினு

விஜய் சேதுபதியின் ‘வி.ஜே.எஸ் 46’ படத்தில் நடிக்கும் டிவி பிரபலம்!





விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் ‘வி.ஜே.எஸ் 46’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க டிவி பிரபலமான நடிகர் புகழ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பொன்ராம் இயக்கும் விஜய் சேதுபதி படத்தில் புகழ் நகைச்சுவை கலந்த குணசித்திர பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’. நிகழ்ச்சி வெற்றியடைந்ததை தொடர்ந்து, இதே நிகழ்ச்சியை வேற்று மொழிகளிலும் தயாரிக்க அந்த டிவி சேனல் முடிவெடுத்துள்ளதாம். அதன் முதல் முயற்சியாக கன்னடத்தில் ’குக் வித் கிறுக்கு’ என்ற பெயரில் அந்த சமையல் நிகழ்ச்சி தயாரகி, அதற்கான ப்ரோமோ வீடியோவும் வெளியாகியுள்ளது.

தமிழில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் புகழ். மெக்கானிக்கல் கடையில் வேலை பார்த்த புகழ், இன்று டிவி பிரபலமாக உருவாகியுள்ளார். அவரது வளர்ச்சி பலருக்கும் முன்னுதாரணமாக அமைந்துள்ளது. அண்மையில் ரூ. 20 லட்சம் மதிப்புள்ள ஹூண்டாய் கிரெட்டா காரை சொந்தமாக வாங்கினார் புகழ். அதற்கு அவருக்கு ரசிகர்கள் பெரியளவில் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.

தற்போது மற்றொரு நல்ல செய்தியாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பொன்ராம் இயக்கும் விஜய் சேதுபதி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் புகழ் நடிக்கவுள்ளார். அவருடைய கதாபாத்திரம் நகைச்சுவை கலந்த குணசித்திர வேடமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. அடுத்ததாக அருண் விஜய் நடிப்பில் ஹரி இயக்கும் படத்திலும் புகழ் நடித்து வருகிறார். மேலும், சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டான்’ படத்திலும் புகழ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ஷிவாங்கியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.




Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :