• TRENDING | பர பர

71வது பிறந்தநாளைக் கொண்டாட, 13 ஆயிரம் அடி உயரத்திலிருந்து குதித்த இ]ந்தியர்!





தனது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக, 71 வயதான முதியவர் ஒருவர் துபாயில், ‘ஸ்கை டைவிங்` பயிற்சியாளருடன் இணைந்து 13 ஆயிரம் அடி உயரத்திலிருந்து கீழே குதித்து சாகசம் புரிந்துள்ளார். அவரது வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியாவைச் சேர்ந்தவரான ஹரிநாராயண் நாயர் என்பவர் துபாயில் வசித்து வருகிறார். தனது 71-வது பிறந்த நாளன்று ‘ஸ்கை டைவிங்’ மூலம் 13 ஆயிரம் அடி உயரத்திலிருந்து கீழே குதித்து கொண்டாட திட்டமிட்டார். 70 வயதிற்கு மேலே உள்ளவர் என்பதால் இந்த சாகசத்துக்குமுன் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டியிருந்தது. அதில், ரத்த அழுத்தம் சற்றே அதிகமாக இருக்க, உடனடியாக யோகா உள்ளிட்ட பயிற்சிகள் மூலம் நார்மலுக்கு ரத்த அழுத்தத்தின் அளவை கொண்டுவந்தார் ஹரிநாரயண்.

அவரது பிறந்தநாளன்று விமானம் மூலம் ‘ஸ்கை டைவிங்` முறைப்படி குதிக்க அனுமதியும் கிடைத்தது. இதனைத்தொடரந்து 13 ஆயிரம் அடி உயரத்திலிருந்து, ‘ஸ்கை டைவிங்’ பயிற்சியாளருடன் இணைந்து கீழே குதித்து, மிகவும் மகிழ்ச்சியுடன் தனது பிறந்தநாளைக் கொணடாடினார். அவர் குதித்து தரையிறங்குவதை, அவரது குடும்பத்தில் உள்ள அனைவரும் பார்த்து ரசித்தனர்.

தற்போது இந்த வீடியோவானது வைரலாகி வருகிறது.

Youtube link : : https://www.youtube.com/watch?v=ap1D-V2I8ww

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :