• JUST IN | சுட சுட

பெண்களின் உடை குறித்த பேச்சு: உத்தரகாண்ட் முதல்வருக்கு கடும் கண்டனம்!





பாஜக தலைமையிலான உத்தரகாண்ட் அரசின் முதல்வர் தீரத் சிங் ராவத் சமீபத்தில் பெண்கள் உடை குறித்து பேசியதற்கு கடும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தீரத் சிங் ராவத் பேசியதாவது:

தற்போது இளம் தலைமுறையினர் நாகரிகம் என்ற பெயரில் ஏதேதோ ஆடைகளை அணிகின்றனர். ஒரு. சில பெண்களும் அதையே பின்பற்றிக் கிழிந்து போன ஜீன்ஸ் அணிகின்றனர்.. சமீபத்தில் விமானத்தில் எனக்கு அருகில் அமர்ந்திருந்த பெண் கை நிறைய வளையல், முழங்காலில் கிழிந்த ஜீன்ஸ், பூட்ஸ் அணிந்திருந்தார். அவருக்கு இரண்டு சிறு குழந்தைகளும் இருந்தனர். அவர் ஏதோ தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்துவதாகச் சொன்னார். இப்படி கிழிந்த ஜீன்ஸ் அணிந்த ஒரு பெண்ணால் சமூகத்தில் என்ன மாதிரியான நல்ல தாக்கத்தை ஏற்படுத்த முடியும்?

-இவ்வாறு தீரத் சிங் ராவத் பேசியிருந்தார். இந்த உரை தேசிய அளவில் கடும் சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.

காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் இந்த பேச்சால் தாம் அதிர்ச்சி அடைந்துள்ளதாகக் கூறி உள்ளார். அம்மாநில காங்கிரஸ் தலைவர் பிரீதம் சிங், இத்தகைய பேச்சு அவமானகரமானது எனவும் இதற்காக தீரத் சிங் ராவத் பெண்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் ஆம் ஆத்மி கட்சி மற்றும் சமாஜ்வாடிகட்சியும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தியும் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார். அவர் தனது டிவிட்டரில் உத்தரகாண்ட முதல்வர் பேச்சைக் கடுமையாக விமர்சித்துள்ளார். அத்துடன் அந்த பதிவில் ஆர் எஸ் எஸ் தலைவர்கள் புகைப்படங்களைப் பகிர்ந்து, `அட கடவுளே இவர்களின் முழங்கால்கள் எல்லாம் தெரிகிறதே` எனப் பதிந்துள்ளார்.

Comments

பாமதிநாராயணன்,பெங்களூரு says :

உத்தரகாண்ட் முதல்வர் பேசியதில் எந்தத் தவறும் இல்லை.. நாகரிகம் என்ற பெயரில் கிழிந்த ஆடையுடன் வெளியில் செல்வது கேவலமில்லையா..ஆணோ ,பெண்ணோ,தங்கள் உடை ,மற்றும் தோற்றம் போன்ற விஷயங்களில் ஒரு டீசன்ஸி கடைப் பிடிக்க வேண்டும். .

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :