• TRENDING | பர பர

பல வருடத் தோழிகள்: டிஎன்ஏ ரிப்போர்ட்டால் தெரியவந்த ஆச்சரிய உண்மை!





ஒரு உணவகத்தில், பல வருடங்களாக தத்தெடுக்கப்பட்ட இரு பெண்கள் சேர்ந்து பணிபுரிந்துவந்த நிலையில், இருவரும் உண்மையிலேயே உடன்பிறந்த சகோதரிகள் என டிஎன்ஏ டெஸ்ட் மூலம் தெரியவந்துள்ளது இச்சம்பவம் அவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு, ரஷ்யாவில் உள்ள ஒரு ஹோட்டலில் கஸ்ஸாண்ட்ரா மேடிசன் மற்றும் ஜூலியா டினெட்டி. ஆகிய இரு இளம்பெண்களும் சேர்ந்து வேலை செய்ய ஆரம்பித்தனர். இருவர் ரசனை மற்றும் பழக்கவழக்கங்கள் ஒரே மாதிரி இருந்ததால், நாளடைவில் உடன்பிறவா சகோதரிகளாக ஒன்றாக காணப்பட்டனர்.

இரு பெண்களும் தத்தெடுக்கப்பட்டவர்கள் என்ற காரணத்தால், எதேச்சையாக தங்களது தத்தெடுக்கப்பட்ட சான்றிதழை ஆர்வமாக எடுத்துப் பார்த்தனர். அதில் டொமினிகன் குடியரசுடன் தங்கள் இருவருக்கும் பரஸ்பர தொடர்பு இருப்பதை புரிந்து கொண்டனர். பின்னர், வேலை காரணமாக இரு பெண்களும், 2015 ஆம் ஆண்டு வெவ்வேறு நகரங்களுக்கு பிரிந்து சென்றனர். இருந்தாலும் சமூக வலைதளங்களில் இருவரும் இணைந்திருந்தனர்.

இந்நிலையில் மாடிசன் தன் தந்தையை டிஎனே பரிசோதனையின் மூலம் டொமினிகன் குடியரசில் வாழ்ந்த அவரது தந்தையை கண்டுபிடித்தார். மாடிசன் அவரைத் தொடர்பு கொண்டு பேசினார். அவரிடம் மேற்கொண்டு விசாரித்ததில், தன்னைப் போலவே தன்னுடன் பிறந்த இன்னும் ஒன்பது குழந்தைகளை அவர் தத்து கொடுத்த விஷயம் தெரிய வந்தது.

இதையடுத்து தன் ஆருயிர்த் தோழி டினேட்டியும் தன் சொந்த சகோதரியாக இருப்பாரோ என்ற சந்தேகம் மாடிசனுக்கு எழுந்தது. அதை உறுதிப் படுத்திகொள்ள டினேட்டியை டிஎன் ஏ டெஸ்ட் எடுக்கும்படி அவரும் அச்சோதயை மேற்கொண்டார். அதில் இருவரும் உடன்பிறந்த சகோதரிகள் என்பது தெரிய வந்தது.

இப்போது மாடிசனும், டினெட்டியும் தங்கள் தந்தையுடன் வீடியோ காலில் பேசி வருவதோடு, எல்லோரும் நேரில் சந்தித்துப் பேசும் அந்த தருணத்திற்காக மகிழ்ச்சியுடன் காத்திருக்கின்றனர்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :