• TRENDING | பர பர

கொரோனா எதிர்ப்பு சக்தியுடன் பிறந்த உலகின் முதல் குழந்தை!





உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் குறித்த முழுமையான விவரங்கள் அறிய முடியாமல் விஞ்ஞானிகள் தடுமாறிக்கொண்டிருக்க, நாளுக்கு நாள் அது உருமாறி உருமாறி பரவி இன்னமும் உலக விஞ்ஞானிகளை குழப்பமடையச் செய்துவருகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் எதிர்ப்பு சக்தியுடன் குழந்தை பிறந்துள்ள செய்தி, விஞ்ஞானிகளையும், மருத்துவர்களையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஒரு கர்ப்பிணி பெண் ஒருவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இந்நிலையில், தற்போது அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. பின்னர் அந்த பெண் குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், இயற்கையாகவே அந்த குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி உடம்பில் உருவாகியுள்ளதாக உறுதி செய்துள்ளனர்.

புளோரிடாவைச் சேர்ந்த சுகாதாரப் பணியாளரான அந்த பெண், கர்ப்பமடைந்த நிலையிலும், கொரோனா தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். மாடர்னா எனப்படும் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை தனது பிரசவத்திற்கு மூன்று வாரங்களுக்கு முன்பு போட்டுக்கொண்டார்.

தற்போது அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ள நிலையில், குழந்தையை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள், கொரோனா வைரஸுக்கான எதிர்ப்புசக்தி இயற்கையாகவே குழந்தையின் உடலில் உருவாகியிருப்பதைக் கண்டுபிடித்தனர்.

அந்தப் பெண் தடுப்பூசி செலுத்திக் கொண்டதால், அவரின் உடலில் உருவான எதிர்ப்பு சக்தி, நஞ்சுக்கொடி வழியாக பிற ஊட்டச்சத்துகளுடன் சேர்ந்து குழந்தைக்கும் கிடைத்திருக்கலாம் எனவும் மருத்துவர்கள் நம்புகின்றனர்.

twitter link : : https://twitter.com/CBSNews/status/1372214086461751306

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :