• TRENDING | பர பர

ஓடும் காரிலிருந்து கீழே விழுந்த குழந்தை! பக்.. பக்.. நிமிடம்! வைரல் வீடியோ!





பரபரப்பான சாலையில் ஓடிக் கொண்டிருந்த ஒரு காரிலிருந்து குழந்தை ஒன்று சாலையில் தவறி விழுந்த வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இது சம்பந்தமான வீடியோவை, ஷெரின் கான் என்பவர் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், பரபரப்பான சாலையில் சென்று கொண்டிருந்த வெள்ளை கார் ஒன்றிலிருந்து குழந்தை ஒன்று பின்பக்கமாக வெளியே விழுகிறது.

அதையடுத்து பின்னால் வரும் வாகனங்கள் சடன் பிரேக் அடுத்து வண்டிகளை நிறுத்த.. கீழே விழுந்த குழந்தை சுதாரித்து எழுந்து தூசியை தட்டிவிட்டு தனது கார் எங்கே என சுற்றும்முற்றும் தேடுகிறது.

இதனிடையே, அந்த குழந்தை வந்த கார் நிறுத்தப்பட்டு, அதிலிருந்து ஒருவர் ஒருவர் இறங்கி குழந்தையை நோக்கி ஓடி வருகிறார். அதே நேரம் அந்த குழந்தை அங்குமிங்கும் ஓடாதபடி, ஸ்கூட்டியில் வந்த பெண் ஒருவர், அதை கைபிடித்து காத்திருக்கிறார். இப்படி நேரவிருந்த விபத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிய அந்த குழந்தையின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

twitter link : : https://twitter.com/KhanShirin0/status/1371705074611859456

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :