இப்போது யூடியூபில் பட்டையைக் கிளப்பி கொண்டிருக்கும் பாடல் “என்ஜாய் எஞ்சாமி”.தான்! இந்தப் பாடலைக் கேட்ட இயக்குனர் செல்வராகவன், பாடல் குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மியூசிக் டைரக்டர் சந்தோஷ் நாராயணனின் மகளும் பிரபல பாடகியுமான தீ மற்றும் தெருக்குரல் அறிவு சேர்ந்து பாடிய “என்ஜாய் எஞ்சாமி” பாடலானது சில நாட்களுக்கு முன்பு வெளியான கையோடு சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இந்தப் பாடலுக்கு, சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.
இந்தப் பாடல் யூ-டியூப்பில் கிட்டத்தட்ட 30 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு, 1.5 மில்லியன் பார்வையாளர்களால் லைக்ஸ் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் செல்வராகவன் என்ஜாய் எஞ்சாமி பாடலைக் கேட்டு மிகவும் உற்சாகமடைந்துள்ளார். அத்துடன், இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “என்ன பாடல் இது. இப்பாடலின் உருவாக்கம் மிகவும் பிடித்துள்ளது. தீ, அறிவு மற்றும் மொத்த குழுவுக்கும் வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார். தற்போது இந்த பாடல் வீடியோ வைரலாகி வருகிறது.
Twitter link :
https://twitter.com/selvaraghavan/status/1372044336553062400
Youtube link : : https://www.youtube.com/watch?v=eYq7WapuDLU

Comments