காலதேவி கோயில்

வாசகர் ஜமாய்க்கிறாங்ககாலதேவி கோயில்

மதுரை மாவட்டம், சிலார்பட்டி எனும் கிராமத்தில் உள்ளது காலதேவி கோயில். புராணங்களில் வரும் காலராத்ரியைத்தான் இங்கு கால தேவியாக வழிபடுகின்றனர். இந்தக் கோயில் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு நடை திறக்கப்பட்டு, சூரிய உதயத்திற்கு முன் நடை சாத் தப்படுகிறது. இரவு முழுவதும் பக்தர்களின் தரிசனத்திற்காக நடை திறந்திருக்கும். இப்படி இரவு முழுவ தும் நடை திறந்திருக்கும் கோயில் உலகிலேயே இது ஒன்றுதான். கெட்ட நேரம் அகன்று, நல்ல நேரம் வரும் என்பதுதான், இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை.

- ஆர்.பிரசன்னா, ஸ்ரீரங்கம்

கண் கலங்கிய ராஜாஜி!

‘எதற்கும் அஞ்சாதவர்’,‘அலை புரண்டாலும் நிலை குலையாதவர்’என்றெல்லாம் பெயரெடுத்த ராஜாஜி, கல்கி கிருஷ்ணமூர்த்தி காலமானபோது கண் கலங்கி அழுதுவிட்டார். ‘இலக்கிய வானில் பூரண சந்திரிகை மலர்ந்து, அப்படியே மறைந்துபோனது’என்று கூறி, வேதனைப்பட்டார். ‘நான் காலமான பிறகு என்னைப்பற்றி பக்கம் பக்கமாக எழுதப்போகிறார் என்று எண்ணியிருந்தேன். அவரைப்பற்றி நான் எழுதி, பேசும் நிலை ஏற்பட்டுவிட்டதே’என்று விம்மினார்.

- ச.லெட்சுமி, செங்கோட்டை

தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே!

* வேப்பிலைச் சாறுடன் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து குடித்தால் ஆழ்ந்த தூக்கம் வரும்.

* சீரகத்தை வறுத்துப்பொடி செய்து வாழைப்பழத்துடன் சாப்பிட்டால், சுகமான நித்திரை வரும்.

* திருநீற்றுப் பச்சிலையை லேசாகக் கசக்கி முகர்ந்து பார்த்தாலே தூக்கம் வர ஆரம்பித்து விடும்.

* வெங்காயத்தை நசுக்கி அதன் ஒரு சொட்டு சாறை கண்ணில்விட்டால் போதும். உடனே தூக்கம் வந்துவிடும்.

- ரவீந்திரன், ஈரோடு

விஸ்வரூப ஆஞ்சநேயர்

சேலம் ரயில் நிலையத்தில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில், அரியானூரில் 77 அடி உயரமான விஸ்வரூப ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. அழகான பச்சை வண்ணத்தில் ஆஞ்சநேயர், அவரது நெஞ்சில் ஸ்ரீராமனும் சீதையும் அமர்ந்திருப்பது போல சிலை வடிக்கப்பட்டு, மிகவும் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறார். அருகில் சீரடி சாய்பாபா சன்னிதியும் முருகன் சன்னிதியும் உள்ளன. அமைதியான, இயற்கைச் சூழலோடு கூடிய சுற்றுப்புறத்தில் காட்சி தரும் இந்த ஆஞ்சநேயர், பக்தியை வெளிப்படுத்தும் விதமாக விளங்குகிறார்.

- ஹேமலதா சீனிவாசன், பம்மல்

தெரியுமா?

* எறும்புகள் உணவு இல்லாமல் நூறு நாட்கள் வரை வாழும்.

*ஆஃப்கானிஸ்தானில் ரெயில் கிடையாது.

* நண்டுக்குத் தலை கிடையாது. அதன் பற்கள் வயிற்றில் இருக்கும்.

* பிரேசில் நாட்டு தேன் கசக்கும்.

* வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும்.

* நமக்கு உடல் முழுவதும் வியர்க்கும். ஆனால், நாய்க்கு நாக்கில் மட்டுமே வியர்க்கும்.

- மகாலெஷ்மி, காரைக்கால்

வித்தியாச பெயிண்ட்!

அமெரிக்காவிலுள்ள, ‘டோவ்’என்ற கெமிக்கல் கம்பெனியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் 1996ஆம் ஆண்டில் ஒரு புதுவித பெயிண்டை கண்டுபிடித்தார்கள். இந்த பெயிண்ட் பூசப்பட்ட சுவற்றில் விளம்பரத்திற்காக எதையும் எழுத முடியாது; எழுதி னாலும் அழிந்துவிடும். மேலும், எந்தவித போஸ்டரும் ஒட்ட முடியாது. இந்த விசேஷத் தன்மைக்காக, ‘டெப்லான்’ வகையைச் சேர்ந்த `Perfluorooctyl acrylate` என்ற ரசாயனப் பொருள் பயன்படுத்தப்படுகிறது. இந்தப் பெயிண்டை 130 டிகிரி சென்டிகிரேட்வரை பதப்படுத்திய பிறகே பயன்படுத்த முடியும்.

- கே.பி.ஜெயந்தி, மதுரை

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :