பாய் விரித்துப் படுத்தால் நோய்விட்டுப் போகும்!

வாசகர் ஜமாய்க்கிறாங்க
ஆர்.சாந்தா,சென்னைதரையில் பாய் விரித்து அதில் உறங்குவதால் பல நன்மைகள் கிட்டும். உடல் சூட்டை உள்வாங்கக் கூடிய பாயில் உறங்கும் பழக்கமுடைய பெண்களுக்கு பிரசவ நேரத்தில் சிசேரியன் @தவைப்படாது. கர்ப்பிணி பெண்கள் பாயில் உறங்குவதால் அவர்களுக்கு இடுப்பு வலி மற்றும் முதுகு வலி வரவே வராது.

பிறந்த குழந்தையை பாயில் படுக்க வைத்தால் கழுத்தில் சுளுக்கு பிடிக்காததுடன், குழந்தையின் முதுகெலும்பு சீர்படும். மேலும், குழந்தை வேகமாக வளரவும் உதவும். கல்வி கற்கும் மாணவ, மாணவிகள் பாயில் படுத்து உறங்கினால் இளம் வயதுகூன் முதுகு ஏற்படாது.

பாயில் கை, கால்களை நீட்டி மல்லாக்கப் படுத்தால் உடலெங்கும் ரத்தம் சீராகப் பாய்ந்து சுறுசுறுப்பாக இயங்கலாம். பாயின் மேல் பருத்தி துணிகளை விரித்துப் பயன்படுத்துவது நன்மை தரும். பாயின் அரிய நன்மைகளை உணர்ந்ததாலேயே பெரியோர்கள் கல்யாண சீர்வரிசைகளில் பாயையும் இடம்பெறச் செய்தனர்.

எத்தகைய பாயில் படுத்து உறங்கினால் என்ன பலன் கிடைக்கும் என்பதை,‘மருத்துவ திறவுகோல்’என்னும் சித்த மருத்துவநூல் விளக்கியுள்ளது. அவை யாவன :

* ஈச்சம் பாய் வாதநோயை குணமாக்கும். உடல் சூடு, கபம் இவை அதிகரிக்கும்.

* பிரம்பு பாய் சீதபேதி, சீதளத்தால் வரும் சுரம் நீங்கும்.

* மூங்கில் பாய் உடல் சூடும், பித்தமும் அதிகரிக்கும்.

* தாழம் பாய் வாந்தி, தலைச்சுற்றல், பித்தம் நீக்கும்.

* பேரீச்சம் பாய் வாத, குன்ம நோய், சோகை நீக்கும். ஆனால், உடலுக்கு அதிக உஷ்ணம் தரும்.

* கோரை பாய் உடல் சூடு, மந்தம், சுரம் போக்கும். உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். கோரை பாயில் படுத்து உறங்குவது உடல் நலத்திற்கு நல்லதாகும். கோரையை இரண்டாகக் கிழித்துப் பார்த்தால் அதனுள்ளே ஒருவகையான பஞ்சு போன்ற பகுதி இருக்கும். இதில் காணப்படும் சிறுசிறு தளைகள் வெப்பத்தைத் தணிக்கும் தன்மையுடையவை. இதனால் உடலின் வெப்பம் சீராக்கப்பட்டு உடல் நலன் பாதுகாக்கப்படும்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :