லட்சத் தீவுகளில் என்ன நடக்கிறது?

கவர் ஸ்டோரி
எஸ்.சந்திரமௌலிலட்சத்தீவுகள் என்பது கேரளாவின் சின்னப் பொண்ணு மாதிரி. அங்கே இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் மலை யாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட வர்கள். அந்த யூனியன் பிரதேசத்தின் ஆட்சி மொழிகள் மலையாளமும், ஆங்கிலமும். அவர்களின் ஒட்டு மொத்த வாழ்வாதாரமும் கேரளாவைச் சேர்ந்தே இருந்து வருகிறது. ஆகவே தான், அங்கே நிர்வாகியாகப் பொறுப்பு வகிக்கும் பா.ஜ.க. முன்னாள் அமைச்சரான பிரஃபுல் கோடா படேலின் அதிரடியான நடவடிக்கைகளுக்கு லட்சத்தீவு வாசிகள் மட்டுமில்லாமல் ஒட்டு மொத்த கேரளாவும் எதிர்புக் குரல் கொடுக்கிறது.

வழக்கமாக, இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் தான் லட்சத்தீவின் நிர்வாகியாக மத்திய அரசால் நியமிக்கப்படு வார்கள். ஆனால், அந்த மரபுக்கு மாறாக, ஒரு தீவிர ஆர்.எஸ்.எஸ். பின்னணி கொண்ட அரசியல் வாதியை நிர்வாகியாக நியமித்தபோதே இப்படி அதிரடியாகச் சில விஷயங்கள் நடக்கக்கூடும் என கேரள அரசியல் வட்டாரத்தில் எதிர் பார்ப்பு இருந்தது. அந்த அஜெண்டாதான் இப்போது படிப்படியாக நடந்து கொண் டிருக்கிறது.

முதலாவதாக, லட்சத்தீவு கள் கூட்டத்தில் இருக்கும் 36 தீவுகளில் பத்து தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கிறார் கள். தற்போதைய மக்கள் தொகை வெறும் 65 ஆயிரம் தான். இந்தியாவில் தேசிய அளவில் பத்தாண்டுகளில் மக்கள் தொகை அதிகரிப்பு 17.70% ஆக உள்ளது. ஆனால், இங்கே மக்கள் தொகை பத்தாண்டுகளில் 6.23% என்ற அளவில்தான் அதிகரித்து வரு கிறது. அதாவது தேசிய அளவைவிட பாதிக்கும் குறைவு. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நிர்வாகி பிரஃபுல் படேல் லட்சத்தீவு பஞ்சயத்துக் கட்டுப்பாட் டுச் சட்டம் 2021 என்ற

சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார். அந்தச் சட்டத்தின்படி இரண்டு குழந்தைகளுக்குமேல் இருப்பவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது.‘இப்படி ஒரு சட்டத்துக்கு என்ன அவ சியம்?’ என்ற கேள்வி எழுந் துள்ளது.

ஆண்டிராட் என்பது அங் குள்ள ஒரு முக்கிய தீவு. இதன் மொத்த அகலமே ஒரு கிலோ மீட்டருக்கும் கொஞ்சம் அதிகம். அங்கே வாகனங்களும் மிகக் குறைவாகவே உள்ளன. பிரஃபுல் படேல் புதிதாக ‘லட்சத் தீவு வளர்ச்சிக் குழுமம்’ என்ற அமைப்பினை உருவாக்கி, அதன் அதிகாரத்தின்படி ஆண்டிராட் தீவில் ஏராளமான மரங் களை வெட்டி, கட லோரக் குடிசைகளை அகற்றி, நெடுஞ்

சாலை அமைக்க நட வடிக்கை எடுத்துள் ளார். இதுவும் மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், லட்சத் தீவு வளர்ச்சிக் குழுமம், தான் விரும்பும் எந்த நிலப்பகுதியை யும், அது யாருக்குச் சொந்தமாக இருந்தாலும், நில ஆர்ஜிதம் செய்ய உரிமை பெற்றுள்ளது. இது லட்சத்தீவை சுற்றுலா என்ற பெயரில் தனியாருக்குத் தாரை வார்க்கும் திட்டம்; இதன் மூலம் தங்களுடைய நிலங்களை இழக்க நேரிடுமோ என்று உள் ளூர்வாசிகள் பயப்படுகிறார்கள்.

நம்மூர் குண்டாஸ் சட்டம் போல ‘சமூக விரோத நடவடிக் கைகள் தடுப்புச் சட்டம் 2021’ என்று ஒரு சட்டம் கொண்டுவரப் பட்டுள்ளது. இந்தச்

சட்டத்தின்படி எவரையும் ஓராண்டு காலத் துக்குச் சிறையில் தள்ளமுடியும்.

இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி, பிரஃபுல் படேலின் நடவடிக்கைகளை ஜனநாயக முறையில் எதிர்த்தால்கூட, கைது செய்து

சிறையில் அடைக்கமுடியும் என்பது கவனிக் கத்தக்கது. பெருங்குற்றங்கள் ஏதும் நிகழாத பகுதி என்ற பெயருக்குரிய லட்சத்தீவில் இத்தகைய சட்டம் கொண்டுவரப்பட்டதன் காரணம் என்ன என்பது இப்போதைய கேள்வி.

அடுத்து, லட்சத்தீவுகளில் அமல்படுத்தப் பட்டுவந்த மதுவிலக்கு நீக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம், லட்சத்தீவு பிராணிகள் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டுச் சட்டம் என்று ஒரு சட்டத்தைக் கொண்டுவந்துள்ள னர். அதன்படி, பிராணிகளைக் கொல்வதற்கு உரிய அனுமதி பெறவேண்டும். ‘இப்படி ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டதற்குக் காரணமே மாட்டிறைச்சியைத் தடை செய்வதுதான். அதை நேரிடையாகச் சொல்லாமல், மாடுகளைக் குறிப்பாக, பசுக்களைக் கொல் வதற்கு அனுமதி கொடுக்கமாட்டார்கள்’ என்று எதிர்த்தரப்பினர் வாதிடுகின்றனர்.

இவை அனைத்துக்கும் மேலாக, இது வரை உள்ளூரில் செயல்பட்டுவந்த பால் பண்ணைகளை மூடச்செய்து, குஜராத்தின் அமுல் நிறுவனம் தன் பால் பொருட்களின் விற்பனையை இங்கே நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது உள்ளூர் பால் வியாபாரம் மற்றும் பால் பண்ணைத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களைக் கடுமை யாகப் பாதித்துள்ளது.

இதுவரை, பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்துக்கு லட்சத்தீவுவாசிகள் கேரளாவில் உள்ள கொச்சி மற்றும் கோழிக் கோட்டுக்கு அருகில் உள்ள பேய்பூர் துறை முகங்களையே பெரிதும் சார்ந்திருந்தனர். ஆனால், பிரஃபுல் படேலின் நிர்வாகம் லட்சத்தீவுவாசிகள் கர்நாடகாவில் உள்ள புதிய மங்களூர் துறைமுகத்தையே பயன் படுத்த வேண்டும் எனக் கட்டாயப்படுத்து கிறது.

கர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சி நடப்பதும், மங்களூர் துறைமுகத்துடன் தொடர்பு கொண்டிருக்கும் சில தனியார்களின் நலனுக்காகவுமே இந்த நடவடிக்கை என்று சொல்கிறார்கள்.

லட்சத்தீவுகளில் நடக்கும் விஷயங்கள் கேரளாவின் அரசியல், சமூக, சினிமா பிரபலங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர்கள் லட்சத்தீவு மக்களுக்கு ஆதர

வாக வும், பிரஃபுல் படேலின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் அரசியல் ரீதியாகவும், சமூக ஊடகங்கள் மூலமாகவும் கடுமையான எதிர்ப்புக் குரல் எழுப்பி வருகிறார்கள்.

இந்த வகையில் பிரபல மலை யாள நடிகர் பிரிதிவிராஜ் அண்மையில் தனது டுவிட்டர் மூலமாகத் தெரிவித்திருக்கும் எதிர்ப்பு பெரும் வரவேற்

பினைப் பெற்றது கவனிக்கத் தக்கது.

சமீபகாலமாக பிரஃபுல் படே லின் நிர்வாகத்தின் கீழ் லட்சத் தீவுகளில் எடுக்கப்பட்டிருக்கும் அதிரடி நடவடிக்கைகள், பொது மக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எனப் பல்வேறு தரப்பினரது எதிர்ப்பு ஆகியவை குறித்து பா.ஜ.க. தரப் பில் என்ன சொல்கிறார்கள்? அக்கட்சியின் தகவல் தொடர்பாளர் கே.டி.ராகவன் அளித்த விளக்கம்:

“லட்சத்தீவு ஓர் இயற்கையான சுற்றுலாத் தலம். ஆனால் அங்கே செல்லும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகமில்லை. எனவே, பிரஃபுல் படேல் மூலமாக, லட்சத் தீவுகளின் சுற்றலா மேம்பாட்டுக்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. வழக்கம் போல, இந்த நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் மைனாரிட்டிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் என திசை திருப்பு கிறார்கள். உள்ளூர் மக்களைத் தூண்டிவிடுகிறார்கள். பா.ஜ.க. முஸ்லிம்களுக்கு எதிரானது என்று இன்னும் எத்தனைக் காலம்தான் பொய்ப் பிரசாரம் செய்வார்கள் இந்த எதிர்க்கட்சிகள்?” எனக் கேள்வி எழுப்புகிறார் பா.ஜ.க.வின் கே.டி.ராகவன்.

லட்சத் தீவுகள்

இந்தியாவில் மத்திய அரசின் நேரடி ஆட்சிக்குட்பட்ட யூனியன் பிரதேசங்களில் ஒன்று லட்சத்தீவுகள். கேரளக் கடற்கரைக்கு சுமார் 200 முதல் 300 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள 36 தீவுகள் இதில் அடங்கும்.

இந்தப் பகுதியின் மொத்தப் பரப்பளவு 32 ச.கி.மீ. தலைநகரம் கவராட்டி, மினிகோய், அமினி உள்ளிட்ட பத்து தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர். மொத்த மக்கள் தொகை சுமார் 64,500. மொத்த மக்கள் தொகையில் 95%க்கும் அதிகமானவர்கள் கேரள முஸ்லிம்களாவர். தலைநகரம் கவராட்டி.

லட்சத்தீவுகள் பற்றிய குறிப்புகள் பழந்தமிழ் நூல்களான புறநானூற்றிலும், பதிற்றுப்பத்திலும் காணக் கிடைக் கின்றன. 1956 நவம்பர் முதல் தேதி, இந்திய மாநிலங்கள் மறுசீரமைக்கப்பட்டபோது, சென்னை மாகாணத்தில் இருந்து பிரித்து, யூனியன் பிரதேசமாக அமைக்கப்பட்டது. இந்தியாவின் கடற்படைத் தளமான ஐ.என்.எஸ். டிவீரகாஷாக் லட்சத்தீவில் கவராட்டியில் அமைக்கப்பட் டுள்ளது.

இங்கே மலையாளமும் ஆங்கிலமும் ஆட்சி மொழி யானாலும், திவேகி, ஜெசரி என்ற வட்டார மொழிகளும் பேசப்படுகின்றன. மீன் பிடித்தல், மீன் பதப்படுத்துதல், மீன் ஏற்றுமதி, தென்னை மரம் அதிகம் இருப்பதால் தேங்காய் எண்ணெய் உற்பத்தி ஆகியவை தவிர சுற்றுலாவும் முக்கிய தொழில்கள்.

லட்சத்தீவுகள் விமானம் மூலமாக கொச்சி மற்றும் பெங்களூருவுடனும், கப்பல் மூலமாக கொச்சியுடனும் இணைக்கப்பட்டுள்ளது. இந்தியர் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா பயணிகளும் லட்சத்தீவுகளுக்குச் சுற்றுலா செல்வதற்கு இந்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும். வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் லட்சத்தீவின் சில பகுதிகளுக்குச் சுற்றுலா செல்ல அனுமதி கிடையாது.

யார் இந்த பிரஃபுல் கோடா படேல்?

குஜராத்தில் ஆழமான ஆர்.எஸ்.எஸ். பின்னணி கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் பிரஃபுல் கோடா படேல். சிவில் இன்ஜீனியரிங் படித்த கட்டட காண்டிராக்டரான படேல், 2007ல் குஜராத் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு ஜெயித்தார். 2010ல்

சொராபுதின் என்கவுண்டர் வழக்கில் அப்போதைய குஜராத் உள்துறை அமைச்சரான அமித் ஷா கைதான போது, இவர் குஜராத்தின் துணை உள்துறை அமைச்சர் ஆனார். ஆனால் 2012 சட்டசபைத் தேர்தலில் தோல்வி அடைந்தார். 2014ல் மோடி பிரதமர் ஆனபின், படேலை டையூ-டாமன் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியாக நியமித்தார். அடுத்து டாத்ரா-நாகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தின் நிர்வாகப் பொறுப்பும் அவருக்கு அளிக் கப்பட்டு அவை அனைத்தும் ஒருங் கிணைந்த யூனியன் பிரதேசம் ஆயின.

லட்சத்தீவின் நிர்வாகப் பொறுப்பில் இருந்த தினேஷ்வர் சர்மா மறைந்ததை அடுத்து, லட்சத்தீவு நிர்வாகியாகக் கூடுதல் பொறுப்பும் படேலுக்குத் தரப் பட்டது.

பிரஃபுல் கோடா படேல் ஒரு சர்ச்சை மனிதர் என்றால் மிகை இல்லை. 2019 தேர்தலின்போது, தாத்ரா-நாகர் ஹவேலி யின் மாவட்ட ஆட்சியர் கண்ணன் கோபி நாதன் தன் உத்தரவுகளுக்குக் கீழ்படிய வில்லை என்று அவருக்கு நோட்டிஸ் கொடுக்க, தேர்தல் கமிஷன் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. கடைசியில் கலெக்டர் டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டார். டாமன் கடலோரப் பகுதியில் அயல்நாட்டில் வசிக்கும் டாமனைச் சேர்ந்த வர்களுக்கு ஆதரவாக, மீனவ கிராமங்களை காலி செய்ய படேல் நடவடிக்கை எடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

நாடாளுமன்ற உறுப்பினர் மோகன்பாய் சஞ்சிபாய் தேல்கர் மும்பை ஓட்டலில் தற்கொலை செய்து கொண்டபோது, தன் மரணத்துக்கு படேல்தான் காரணம் என்று எழுதி வைத்திருந்தார். அதன் பேரில் அவர் மீது எஃப்.ஐ.ஆர். கூடப் போடப்பட்டது. இப்போது, தன் அதிரடியான நடவடிக்கைகள் மூலம் சர்ச்சை நாயகர் ஆகி இருக்கிறார் பிரஃபுல் கோடா படேல்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :