வந்துட்டேன்னு சொல்லு!


ஆதித்யா



அழகுற வடிவமைக்கப்பட்ட அந்தத் திரையரங்கம் நிரம்பியிருக்கிறது. அதி தொழில்நுட்ப ஒலி வசதிகளுடன் அமைக்கப் பட்டிருக்கும் அதன் திரையில் - ஓடும் காட்சி - கடும் இடியோசையுடன் கொட்டும் மழையில் சுழன்றடிக்கும் காற்றில் மிக வேகமாக ஓடி வரும் குதிரையின்மேல் மழைக்கோட்டும் தொப்பியும் அணிந்த மனிதர். கட்டட வாயிலை நெருங்கும்போது உள்ளே இன்னும் மூன்று நிமிடத்தில் வோட்டுப் போடும் நேரம் முடிகிறது என ஒருவர் அறிவித்துக் கொண் டிருக்கிறார். நின்ற குதிரையிலிருந்து தாவிக் குதித்து ஈர உடையுடனும் சேறு படிந்த காலணிகளுடனும் பாய்ந்த அந்த மனிதர் ரஜின் ஸ்டைலில் “நான் வந்துவிட்டேன். எனது வோட்டு புதிய தேசத்துடன் இணைவதற் கானது” என்று சொல்லி ஆவணங்களில் கையெழுத்திடுகிறார்.

“பிரச்னை தீர்ந்தது. அமெரிக்க ஐக்கிய நாட்டில் முதல் மாநிலமாக டெலவேர் இணைந்துவிட்டது” என்று தலைவர் அறிவிக் கிறார். (இன்றைக்கும் டெலவேர் மாநிலம் ஊடிணூண்t ண்tச்tஞு என்று அழைக்கப்படுகிறது.)

அந்த அறையில் கூடியிருந்தோர் கைத்தட்டு கிறார்கள். அந்தக் காட்சி, அரங்கத்தில் படக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தவர் களையும் கைதட்ட வைக்கிறது.

அமெரிக்க நாட்டின் சரித்திரத்தில் மிக முக்கியமான இடம் பிலடெல்பியா நகருக்கு உண்டு. அமெரிக்கா ‘ஐக்கிய’ நாடாகப் பிறந்தது இந்த நகரில்தான். பெருமைமிக்க தங்கள் நாடு உருவானதை சுற்றுலா பயணி களுக்கும், வரும் தலைமுறைக்கும் சொல்ல ‘நேஷனல் கான்ஸ்டியூஷன் சென்டர்’ என்ற வளாகத்தை இங்கு உருவாக்கியிருக்கிறார்கள்.

கண்காட்சிகள், நூல் நிலையம், விவாத அரங்கு, பயிற்சி வகுப்புகள், திரையரங்குகள் எனப் பல வசதிகளுடன் பிரம்மாண்டமானதாக அழகாக இருக்கிறது.

அமெரிக்கச் சட்டத்தின் முதல் வாசகமான ஙிஞு tடஞு ணீஞுணிணீடூஞுயை முகப்புச் சுவரில் கொண் டிருக்கும் இங்கு, ஆண்டு முழுவதும் மக்கள் பங்குகொள்ளும் நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டேயிருக்கின்றன. ஒவ்வொரு மாத மும் ஒரு மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்ட பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் வருகிறார்கள். வெளிநாடு, உள்நாட்டுச்

சுற்றுலா பயணிகளும் குவிகிறார்கள். அந்த வளாகத்திலிருக்கும் ஒரு திரையரங்கில் பார்த்த படத்தின் காட்சிதான் நாம் மேலே பார்த்தது.

சுதந்திர வேட்கை வேகமாக எழுந்து பரவி ஆங்கிலேயர்களை வெளியேற்றப் போராட் டங்கள் தொடங்கிய ஆரம்பக் கட்டத்தில் தாமஸ் ஜெபர்சன் தலைமையில் அமெரிக்கச் சுதந்திரப் பிரகடனம் அறிவிக்கப்பட்ட இடம் பிலடெலபியாவின் சட்டமன்றம். இதற்கு இன்று ‘பிஃரிடம் ஹால்’ எனப் பெயரிட்டிருக்கிறார்கள். இதன் அருகில்தான் இந்த வளாகத்தை வடிவமைத்திருக்கிறார்கள்.

13 மாநிலங்கள் இணைந்து சுதந்திரப் பிரகடனத்தில் கையெழுத்திட்டு அமெரிக்க ஐக்கிய நாடு என்ற புதிய தேசம் அறிவிக்கப் பட்டவுடன் அதை ஏற்று மற்ற மாநிலங்கள் ஒவ்வொன்றாக இணைய வேண்டும் என்பது திட்டம்.

ஆனால் பிரகடனம் தயாரானவுடன் முதலில் ஒப்புக்கொண்ட டெலவேர் மாநிலத் தின் இரு பிரதிநிதிகளில் தீர்மானத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் சரி சமமான வோட்டு கிடைத்திருந்ததால் சிக்கல் ஏற்பட்டது. அதைத் தவிர்க்க டெலவேர் மாநில அமைப்பின் தலைவர் தன் நண்பர் சீஸர்ரோட்னிக்குச் செய்தி அனுப்பினார்.

அவர் குதிரையில் விரைந்து வந்து கூட்டத் துக்கான நேரம் முடியும் இறுதி நேரத்தில் கையெழுத்திட்டு மெஜாரிட்டி வோட்டு கிடைக்கச் செய்த காட்சியைத்தான் படத்தில் பார்த்தோம்.

அமெரிக்க தேசம் பிறந்த கதையைச் சொல்லும் இந்தப் படம் வெறும் ஆவணப்பட மாக இல்லாமல் இதுபோல பல சுவாரசியமான காட்சிகளாலான அருமையான திரைப்படம்.

இந்த சீசர் ரோட்னிக்கு அவர் ஊரான வில்மிங்டனில் குதிரையில் போகும் நிலையில் ஒரு சிலை அமைத்திருந்தார்கள். கடந்த ஆண்டு நடந்த போராட்டங்களில் பல நகரங் களில் மக்களால் நீக்கப்பட்ட பல ஆங்கிலேயர் களின் சிலைகளில் இது ஒன்றாகி, இன்று வெறும் மேடை மட்டும் நிற்கிறது.

இங்கே அமெரிக்க நாட்டின் சுதந்திரம் சம்பந்தப்பட்ட அனைவரையும் அழகாக, ரசிக்கும் விதத்தில் அமைத்திருக்கிறார்கள். அமெரிக்கக் கொடி பிறந்த கதையையும், அமெரிக்க டாலர் எப்படி வடிவமைக்கப் பட்டது என்பது பற்றியும் காதில் மாட்டியிருக் கும் போனில் ஒலிக்க, காட்சிகளைப் பார்த்துக் கொண்டே நகருகிறோம். இதேபோல் பல தகவல்கள்.

ஜெபர்சன் தங்கி சுதந்திரப் பிரகடனத்தை இரண்டே நாளில் இரவு பகலாக எழுதிய அறை இருந்த ஹோட்டலை இன்று பாரம்பரியச் சின்னமாக அறிவித்து அன்றிருந்தைப் போலவே பாதுகாக்கிறார்கள்.

அதேபோல் சுதந்திரப் பிகடனம் கையெழுத் திட்ட முதல் சட்டமன்றத்தை அன்றிருந்தது போலவே, அதே மேசைகள், பயன்படுத்திய பேனாக்கள் உட்பட அப்படியே காட்சிப் படுத்தியிருக்கிறார்கள்.

அழைத்துச் சென்று காட்டி விளக்கம் சொல்பவர்கூட அன்றைய பாணி உடையில் இருக்கிறார். நாட்டின் சுதந்திரம் பற்றிப் பேசும் கட்டடங்கள் இருப்பதால் இந்தப் பகுதி யைச் ‘சுதந்திரப் பூங்கா’ என அழைக்கிறார்கள்.

அமெரிக்காவின் முதல் பாங்க், முதல் சிறை இப்படிப் பல பழைய விஷயங்கள் இந்த பிலடெல்பியா நகரில் இருந்தாலும் எல்லா அமெரிக்க நகரங்களைப் போல நவீனமாக இருக்கிறது. முக்கியமான பழைய கட்டடங்களை இடிக்க அனுமதியில்லாததால் அவை அருகிலிருக்கும் கட்டடங்களின் கண்ணாடிச் சுவர்களில் தங்களை அழகு பார்த்துக்கொண்டிருக்கின்றன. நகரின் பழைய கட்டடங்களின் பக்கச்சுவர்களில் மிகப் பெரிய படங்களை எழுதி அழகூட்டும் இயக்கம் ஒன்று வலுவாக இயங்கிக் கொண் டிருப்பதால் நகரில் எங்கு பார்த்தாலும் பெரிய சுவர்ச் சித்திரங்கள்.

தங்கள் நாட்டின் சுதந்திரக் காலகட்டத்தை அழகாக அடுத்த தலைமுறையினருக்காக இப்படி காட்சியாக்கியிருக்கும் அமெரிக்கர் களைப் பாராட்டத் தோன்றினாலும் ‘நாம் ஏன் இதுபோல இன்னும் செய்யவில்லை?’ என்று நம் மனதில் எழும் கேள்வியைத் தவிர்க்க முடியவில்லை.

இந்தச் சுதந்திரப் பூங்காவில் அழகான ஒரு தனி வளாகத்தில் 30 அடி உயரமும், 900 கிலோ எடையும் கொண்ட அந்தப் பிரம்மாண்டமான ‘லிபர்ட்டி பெல்’ அதன் பின்னே உள்ள கண் ணாடிச் சுவரின் வழியே தெரியும் அமெரிக்க முதல் சட்டமன்றத்தின் பின்னணியில் கம்பீர மாக நிற்கிறது.

ஆண்டுக்கு 10 லட்சம் பேர் வந்து பார்க்கும் இந்த மணிக்கு அமெரிக்க தேசியக் கொடிக்கு நிகரான அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கிறது. இந்த மணி பிரபலமானதற்குப் பின்னே ஒரு

சிறுகதை இருக்கிறது. அது என்ன என்பதை அடுத்த வாரம் பார்ப்போமா?

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :