இணைய உலகும் குழந்தைகளின் பாதுகாப்பும்!


லண்டனிலிருந்து வித்யா சுரேஷ்சமூகச் சூழலில் இன்னமும் பெரிதாக நாம் கேள்விப்படாத வார்த்தை. ஆனால், அனைத் தும் இணையமயமாகிவிட்ட சூழலில் ஒவ் வொருவருக்கும் அவசியமாகிவிட்ட சொல் ‘டேட்டா புரொடக்‌ஷன்’.

2008இல், முதன்முதலில் குழந்தையை இங்கு (இங்கிலாந்தில்) பள்ளியில் சேர்க்கும் பொழுது ஒரு படிவம் தந்து நிரப்பச் சொன் னார்கள். ஈச்tச் ணீணூணிtஞுஞிtடிணிண ஞூணிணூட். அதாவது பள்ளி சார்பில் அவர்கள் இணையதளம் உட்பட பொதுவெளியில் எங்கும் வெளியிடப் படும் புகைப்படங்களில் நம் குழந்தையின் புகைப்படம் இருக்கலாமா, கூடாதா என்பதற் கான விருப்பத்தைத் தெரிவிக்க வேண்டும்.

வேண்டாம் என்று நாம் சொல்லிவிட்டால் பின் நாமாக எழுத்து மூலமாக விருப்பம் தெரி விக்கும்வரை நம் குழந்தை இருக்கும் எந்தவொரு புகைப்படமும் (க்ரூப் போட்டோ வாக இருந்தாலும் கூட) எங்கும் வெளியே வராது. மீறித் தவறுதலாக எங்காவது வந்து விடும் புகைப்படத்தை வைத்துப் பெற்றோர் பள்ளியின் மீது புகார் பதிவு செய்யமுடியும்.

ஒரு பர்த்டே பார்ட்டிக்குச் சென்றால்கூட மற்ற குழந்தைகள் இருக்கும் படங்களை நாம் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யக் கூடாது என்பது சமூகத்தில் அடிப்படை நியமம். எழுதப்படாத விதி.

இதுதான் ஈச்tச் ணீணூணிtஞுஞிtடிணிண. அதாவது, நான் சம்பந்தப்பட்ட விவரங்களை என் விருப்பம் இல்லாமல் பொதுவெளியில் பதிய யாருக்கும் அனுமதி இல்லை. காரணம் இணைய உலகில் இருக்கும் ஆபத்துகள். ஒருமுறை இணையத் தில் நாம் பதிவேற்றம் செய்யும் படத்தை உலகின் யாரொருவரும், எந்தவித அனுமதியும் இல்லாமல் தரவிறக்கம் செய்யமுடியும் என்பதுதான் இணைய உலகின் எதார்த்தம். ஈணிதீணடூணிச்ஞீ செய்ய முடியாவிட்டாலும் ஸ்க்ரீன் ஷாட் எடுப்பதைத் தடுக்கமுடியாது. நம் அனுமதி இல்லாமல் யாரும் கூச்ஞ் செய்தாலே எரிச்சல்படும் முகநூலில்தான், விதவிதமாய் குழந்தைகளின் படங்களை நாம் பதிகிறோம்.குடும்பப் படங்களை, உறவினர் படங்கள், கலந்துகொள்ளும் விழாக்களின் படங்கள், உதவி பெறுபவர் படங்கள் என்று எத்தனை படங்கள், எத்தனை குடும்ப விவரங்கள். என்றைக்காவது அந்தப் புகைப்படங்களில் இருப்பவர்களின் அனு மதியை நாம் பெற்றிருக் கிறோமா? பாங்க் பாலன்ஸ் தவிர அத்த னையும் இங்கே ஒப்புவிக்கும் தோழமைகள் இங்கு உண்டு. இதில் இருக்கும் ஆபத்துகளைப் புரிந்துதான் இதைச் செய்கிறார்களா?

இதன் மற்றொரு பரிமாணம்தான் ஆன்லைன் வகுப்புக் குழப்பங்கள். இங்கும் (இங்கிலாந்தில்) கடந்த 2020 ஏப்ரல் - ஜூலை வரை எந்த வகுப்புகளும் கிடையாது (ஆன் லைனும்).

(பள்ளிகள் திறப்பு, மூடுவது, பரீட்சை, மார்க் குறித்து இங்கும் ஏகப்பட்ட அரசியலும், குழப்பமும் இருந்தன - அதைத் தனித் தலைப் பில் பேசலாம்). தனியார் பள்ளிகளுக்கும் இதே கட்டுப்பாடுதான். 93% அரசுப் பள்ளிகள் மட்டுமே கோலோச்சும் சூழலில், முறைமைப் படுத்தும் அதிகாரம் அரசின் கையில்தான் உள்ளது. ஆகஸ்ட் கோடை விடுமுறை. செப்டம்பர் 2020இல் புதிய வகுப்புகள் தொடங்குவதற்குள், ஆன்லைன் வகுப் பிற்கான அத்தனை முன்னேற்பாடு களும் பள்ளிகளில் செய்து முடிக் கப்பட்டன.

ஒவ்வொரு பள்ளிக்கும் அவரவர் ஃஞுச்ணூணடிணஞ் ச்ணீணீ உண்டு. அன்றன்றைக்கான அட்டவணை, ஹோம் வொர்க் அந்த அணீணீல் பதிவேற்றம் செய்யப்படும். ஒவ்வொரு பள்ளியும் தங்களுக் கேற்ற Oணடூடிணஞு ணீடூச்tஞூணிணூட்ஐ தேர்வு செய்துகொண்டன. சிலர் Mகு - கூஞுச்ட்ண், சிலர் எணிணிஞ்டூஞு இடூச்ண்ண்ணூணிணிட், சிலர் ஙூணிணிட். ஆனால், எல்லாருக்கும் பொதுவான அம்சம் ஒன்று இருந்தது. கூடஞு ஞச்ண்டிஞி ஞ்தடிஞீடிணஞ் ணூதடூஞு - ஆன்லைன் வகுப்புகளில் எக்காரணம் கொண்டும் பிள்ளைகளின் வீடியோ ஆன் செய்யப்படக் கூடாது. ஆடியோ மட்டிலும் அனுமதி. ஆசிரியர் பள்ளிக்கு வரும் ஊணிணூட்ச்டூ உடையில் தான் பாடம் நடந்த வேண்டும். வீட்டில் பாடம் நடத்த வசதியில்லாத, சூழலில் லாத ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து ஆன்லைன் வகுப்பை நடத்தலாம்.

எப்பொழுதும் போலவே 8 வகுப்புகள். சரியாக 8.30 மணிக்கு உட்கார்ந்தால், இடை வேளை, மதிய உணவு இடைவேளை என்று 3.30 மணி வரை வகுப்புகள் உண்டு. வெற்று திரையைப் பார்த்துப் பாடம் நடத்த ஆசிரியர் களுக்கு வெறுத்துப்போகும் என்றாலும், வீடியோவில் வரும் பிள்ளைகளை யாரும் ஸ்க்ரீன்ஷாட் எடுப்பதோ, ஸ்க்ரீன் ரெக்கார்ட் செய்வதோ கூடாது. (ஆசிரியர் என்றில்லை. மற்ற குழந்தைகளின் வீட்டில் இதுபோன்ற கஞுணூதிஞுணூt யாரும் இருந்தாலும் குழந்தைகளுக்கு ஆபத்துதான்). அதைத் தவிர்ப்பதற்காக வேண்டி இத்தனைக் கட்டுப்பாடுகள்.

அதுபோலவே, எக்காரணம் கொண்டும் எந்த ஆசிரியரின் தொலைபேசி எண்ணோ, எந்தக் குழந்தையின் (தாய், தந்தை யரின்) தொலைபேசி எண்ணோ பகிர்வது முற்றிலும் தடை செய்யப் பட்டது. அதனால், வாட்ஸாப் உரையாடல்களுக்கும் வழி யில்லை. ஆசிரியர்களுக் கும், மாணவர்களுக்கு மான உரையாடலுக்கு இ-மெயில் போதுமானது. பாதுகாப்பான தும்கூட. நடுராத்திரியில் டவுட் கேட்கும் லார்ட் லபக்குதாஸ்களின் கொசுக் கடியிலிருந்து உண்மையான ஆசிரி யர்களும் தப்பிக்க இயலும்.

ஈச்tச் ணீணூணிtஞுஞிtடிணிண, ஞு-ண்ச்ஞூஞுtதூ பற்றிய வகுப்புகள், குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்த உடன் பெற்றோருக்கு உண்டு. 3,4ஆம் வகுப்புகளில் இருந்து குழந்தைகளுக்கும் கட்டாயம் உண்டு. ஆக, இணைய வகுப்புகளில் தொடர்ந்து உட்காரும், சமூக வலைதளங்களில் செல்ஃபி பதிய கை துறுதுறுக்கும் பதின் பருவத்தைத் தொடுகையில், ஏறத்தாழ அனைத்துக் குழந்தைகளுக்கும் இணையப் பயன்பாடு, அதிலிருக்கும் ஆபத்து என அவற் றின் நன்மை, தீமை குறித்த தெளிவு ஏற்பட்டு விடும். கஞுஞீணிணீடடிடூஞுகள் கண்களுக்குப் புலப்படா மல் மறைந்திருந்து தாக்கும் இன்றைய சூழ லில் இது எத்தனை முக்கிய மென தொடர் பாடங்கள் நமக்கு உணர்த்தியிருக்கின்றன.

வளர்ந்த வசதியுள்ள நாடுகளில் இருக்கும் சவால்களைவிட, மிகப்பெரிய கலாசார வேறு பாடுகள், ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த, வசதி வாய்ப்புகள் குறைந்த நம் சூழலில், முதல்வ ரின் அறிக்கை மட்டுமே தீர்வாகாது. தொடர்ந்த, தெளிவான திட்ட வரையறைகள், கடுமையான விதிமுறைகள், தொடர் கண்காணிப்புகள் அவசியம்.

குழந்தைகளைத் திடீர் வெள்ளத்தில் நீந்த விட்டிருக்கிறோம். நீச்சல் கற்றுக்கொடுக்கும் அவகாசமில்லையென்றாலும், பாதுகாப்பிற் கென ஒரு துடுப்பாவது கையில் கொடுப்பது அவசியம். பள்ளிக் கல்வித்துறை, உயர் கல்வித் துறை கவனிக்குமா?

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :