கவர்ச்சி உடையில் இல்லை! -- மிருணாளினி


ராகவ்குமார்வார்த்தெடுத்த தங்கச் சிலையாக ஜொலிக்கிறார் மிருணாளினி. இவர் டிக்டாக் சமூக ஊடகத்தில் தம் திறமையைக் காட்டி அதன் மூலம் பிரபலமாகி சினிமாவுக்கு வந்த முதல் நாயகி.

பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் ஹீரோவாக நடித்து விரைவில் திரைக்கு வரவிருக்கும் ‘எம்.ஜி.ஆர். மகன்’ படத்தின் நாயகியாக நடித்திருக்கிறார் மிருணாளினி.

சாஃப்ட்வேர் இன்ஜினீயரான இவர், ஐ.பி.எம்.மில் லட்சத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார். அதை உதறிவிட்டு சினிமா ஆசையில் முழு நேர நடிகையாகிவிட்டார். எடுத்ததுமே நல்ல கேரக்டர்களில் பெரிய ஹீரோக்களின் ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்து அடுத்தடுத்து சில படங்களிலும் ஒப்பந்தமாகி இருக்கிறார். தற்போது விஷால், விக்ரமுடன் நடிக்கிறார். சினிமாவில் சான்ஸ் கிடைத்தற்கு, தான் செய்த ‘டிக்டாக்’ வீடியோவும் காரணம் என்றவரிடம் பேசினோம்.

ஐ.பி.எம். கொடுக்காததை சினிமா தந்து விட்டதா?

“சாஃப்ட்வேர் வேலை என்பது நல்ல சம்பளம், வருடம் ஒரு முறை இன்கிரிமெண்ட் உலகளவிய கிளைண்ட்களுடன் தொடர்பு எனச் செல்வது. உயர உயரப் பறந்தாலும் நம் பக்கத்து வீட்டுக்காரருக்குக்கூட நம்மைத் தெரியாது. ஆனால் சினிமா என்பது நம்மை உலகறியச் செய்து புகழ் ஏணியில் ஏற்றிவைக் கும். வேறு வேறு நகரங்களுக்கும், கிராமங் களுக்கும் நம்மைக் கொண்டுசெல்லும். மக்களிடம் பிரபலம் ஆவதற்கு மீடியா ஒரு சிறந்த வழி.”

வீட்டில் ‘டிக்டாக்’ செய்யும்போது பெற்றோரின் எதிர்ப்பு இருந்ததா?

“நான் 2016ல் டிக்டாக் செய்யும்போது இந்த விஷயம் புதிது. வித்தியாசமாகப் பல டிக்டாக், டப்மாஸ் செய்யும்போது பெற்றோரி டமிருந்து எந்த எதிர்ப்பும் இல்லை. ஆதரவும் இல்லை. தொடர்ந்து ரசனையோடு செய்து கொண்டிருந்தேன். இதன் மூலம் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என்பது அப்போது தெரியாது.”

சரி, சினிமா வாய்ப்பு எப்படி கிடைத்தது?

“நான் விரும்பிய விஷயங்களைச் செய் தேன். தியாகராஜன் குமாரராஜா ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடிக்க சிறிய வாய்ப்பு அளித்தார். சினிமாவிற்கும் என் குடும்பத் திற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. பெற்றோர் சினிமா வேண்டாம் என்று மறுத்தார்கள். ஐந்து நாள்தான் கால்சீட் என்று சமாதானப்படுத்தி நடித்தேன். பின்பு ‘வால்மீகி’ என்கிற தெலுங்குப் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. வீட்டில் ஒரு வழியாகப் போராடி,

சினிமாவும் பெண்களுக்குப் பாதுகாப்பான துறைதான் எனப் புரியவைத்து முழுமையாக நடிக்க வந்துவிட்டேன்.”

பொன்ராம் இயக்கத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது எப்படி?

“என் வீடியோ ஒன்றைப் பார்த்துவிட்டு பொன்ராம் நடிக்க வாய்ப்பு தந்தார். யதார்த்த மான கதைகளுக்கு முக்கியத்துவம் தரும் பொன்ராம் சார், என்னுடைய நடிப்பு யதார்த்த மானதாக இருப்பதை மனதில் வைத்து இப் படத்தில் வாய்ப்பு வழங்கி இருக்கலாம்.”

‘எம்.ஜி.ஆர். மகன்’ படப்பிடிப்பு தேனி மாவட்டத்தில் நடந்தபோது அந்த அனுபவம் எப்படி இருந்தது?

“இதுவரை ஷூட்டிங்குக்காக கிராமத்திற்கு சென்றதில்லை. முதல் முறையாகத் தேனி மாவட்டத்தின் கிராமப் பகுதிக்குச் சென்றேன். ஷூட்டிங் நடக்கும்போது மக்கள் காட்டிய அன்பு மிக அற்புதமானது. அறுபது நாட்கள் ஷூட்டிங் முடிந்து திரும்ப மனம் வரவில்லை. அங்கே உள்ள மலைகளும் அவ்வப்போது பொழியும் மழையும் மனதில் நீங்கா இடம் பெற்றுவிட்டது. இந்தக் கொரோனா காலத் திலும் நினைவுகள் பசுமையாக இருக்கிறது.”

சீயான் விக்ரமுடன் நடித்த அனுபவம் எப்படி?

“நம்ம வீட்டில் பெரியவங்க யாராவது வேலை செய்தால் கூடமாட இருந்து வேலை செய்வோம். ஆனால் வெளியில் உள்ளவர் களுக்குச் செய்ய மாட்டோம். ஆனால் விக்ரம் சார் ஒரு செட்டிங் போடுபவர்களுக்கு ஒரு பொருளை நகர்த்தி வைக்கவேண்டும் என்றால் கூட உதவி செய்வார். பெரிய ஹீரோ என்ற எண்ணம் துளியும் கிடையாது. அவருக்கு ஜோடியாக ‘கோப்ரா’ படத்தில் நடிக்கிறேன்.”

பக்கத்து வீட்டுப் பெண் போல இருக்கீங்க. கிளாமரா நடிப்பீங்களா?

“உடம்பெல்லாம் சேலையைக் கட்டிக்கிட்டு ரசிகர்கள் மத்தியில் என்னத்தை கிளாமர் உருவாக்கும்? காட்சிகளை நிறைய உதாரணம் சொல்ல முடியும். ஆனால் மாடர்ன் உடையி லும் துளியும் கவர்ச்சி இல்லாமல் காண்பிக்க முடியும். உதாரணம், நம்ம ஜெனிலியா மேடம். மாடர்ன் உடையிலும் அழகாகத் தெரி வார். கவர்ச்சி என்பது திரைக்கதையில்தான் உள்ளது, உடையில் இல்லை.”

‘டிக்டாக்’ போன்ற செயலிகளால் விரும்பத் தகாத நிகழ்வுகள் பெண்களுக்கு ஏற்படுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

“ ‘டிக்டாக்’ ஒரு ஊடகம் மட்டுமே. இதன் மூலமாக முன்னேறும் இளைய தலைமுறை யினர் பலர் உள்ளனர். திறமையை வெளிக் கொணர இது ஒரு வாய்ப்பாகப் பயன்படுகி றது. சமூக வலைதளங்களைத் தவறாகப் பயன் படுத்துபவர்கள் இந்தத் தளங்கள் இல்லை யென்றாலும் தவறாகத்தான் செயல்படுவார் கள். அவரவர் பாதுகாப்பு முக்கியம்.”

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :