விண்ணையும் ஆக்கிரமிக்குமா சீனா?


கிறிஸ்டி நல்லரெத்தினம்அண்மைக் காலங்களில் விண்வெளி ஆராய்ச்சியில் சீனாவின் சாதனைகளை உலகமே மௌனமாக நோக்கிக் கொண்டிருக்கின்றது. சீனாவின் விண்வெளி ஆக்கிரமிப்பு பற்றிய விஷயங்களைப் பார்ப்போம்.

ஜூலை 2020.

நீலவானை நிமிர்ந்து பார்த்தபடி மூன்று ராக்கெட்டுகள் உலகின் மூன்று நாடுகளில் சீறிப்பாயத் தயாராக இருக்கின்றன. இப்போதே அவற்றின் அடி வயிற்றில் இருந்து எழும்பிய புகைமூட்டம் மெதுவாய் வான் நோக்கி எழுகிறது. ஜல்லிக்கட்டுக் காளையின் திமிரும் வீரியம் இந்த மூன்று ராக்கெட்களின் தோற்றங்களிலும் தெளிவாய் வெளிப்பட்டன.

இவற்றில் முதலில் களத்தில் இறங்கி ஜூலை 19ல் வானைக் கிழித்துக்கொண்டு கிளம்பிய Hope எனும் நம்பிக்கை ராக்கெட் ஐக்கிய அரபு நாடுகளுக்கு (UAE)சொந்தமானது. ஒரு அராபிய - இஸ்லாமிய நாட்டின் முதல் விண்வெளி ஆராய்ச்சிக்கு வித்திட்ட பயணத்தின் ஆரம்பம் இது.

இரண்டாவதாக, ஜூலை 23ல் வானைத் தொட்ட விண்கலம் சீனாவின் C.N.S.A.க்குச் (China National Space Administration) சொந்தமான செவ்வாய் - 1 எனப் பொருள் படும் Huoxing&1. (பின்னர் ‘சத்தியத்தின் தேடல்’ எனப் பொருள்படும் Tianwen-1 என அழைக்கப்பட்டது).

ஜூலை 30ல் புறப்பட்டது ‘சூப்பர் ஸ்டார்’ அமெரிக்க நாசாவின் Mars 2020.

செவ்வாய் கிரக ஆக்கிரமிப்பிற்கான ரேஸ் ஆரம்பம்!

சரியாகச் சொல்வதானால் இதே மாதத்தில் European Space Agency / Russian Space Agency கூட்டணிக்குச் சொந்தமான ExoMars கலமும் ஜூலை 26ல் விண்ணைத் தொட்டிருக்க வேண்டும். சில தொழில்நுட்பக் கோளாறு களின் காரணமாக இப்பயணம் 2023 மே மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அது சரி, ஏன் மூன்று ராக்கெட்டுகளும் ஒரே மாதத்தில் செவ்வாய்ப் பயணத்தை ஆரம் பிக்க வேண்டும் என்று கேட்கிறீர்களா? செவ் வாய் தோஷம், ராகு காலம் என்று ஒன்றும் இல்லீங்க.

நமது பூமி சூரியனை ஒருமுறை சுற்றிவர 365 நாட்கள் எடுக்கும் என் பது தெரிந்த விஷயம். இதேபோல் சூரியனைச் சுற்றி வர செவ் வாய்க்கு 687 நாட்கள் எடுக்கும். அதாவது 1.88 ‘பூமி வருடம் ’ = ‘1

செவ்வாய் வருடம்’.

எனவே ஏறக்குறைய இரு வருடங்களுக்கு ஒரு முறைதான் பூமியும் செவ்வாயும் காதலன் - காதலி போல் அருகில் வரமுடியும். இந்த சுப நேரம் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறைதான் கிட்டும். இத்தருணத்தில் செலுத்தப்படும் ராக்கெட்டு கள் குறைந்த எரிபொருள் பாவனையுடன்

செவ்வாயை எட்டமுடியும். இப்போது ExoMarsஇன் இரு வருட ஒத்திவைப்பின் காரணம் புரிந்திருக்குமே?

நாசாவின் Mars 2020 ராக்கெட் தன்னுடன் எடுத்துச் சென்ற Perseverance ரோவரினதும் அதன் அடிவயிற்றில் தொத்திக்கொண்டு

சென்ற Ingenuity ஹெலிகாப்டரினது சாகசங்களையும் நீங்கள் படித்தும் கேட்டும் இருப்பீர்கள். அது பழைய செய்தி.

செவ்வாய் கிரகத்தைத் தொடும் போட்டியில் சீனாவின் சாதனைகளை விஞ்ஞான உலகம் அமைதியாக அதே சமயம் ஆச்சர்யத் துடன் நோக்கத் தொடங்கியுள்ளது.

நாசா பல விண்கலங்களை இதற்கு முன் செவ்வாயில் தரையிறக்கியது வரலாறு.

(சோவியத் யூனியன் செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் முன்னோடியானாலும் அதன் முயற்சிகள் பூரண வெற்றியளிக்கவில்லை.)

நாசாவினால் ஆரம்பக் காலங்களில் அனுப்பப்பட்ட விண்கலங்கள் செவ்வாயைச் சுற்றி வந்து படங்களை பூமிக்கு அனுப்பி, பெண் பார்க்கும் படலத்தோடு தம் பணியை முடித்துக் கொண்டன. அதன் பின்னர் 1997ல் நாசாவின் Sojourner உலகின் முதல் ரோவர் எனும் சாதனை படைத்து செவ்வாயில் தரையிறங்கி 84 நாட்கள் பணியாற்றி மௌனித்தது.

இதன்பின் பல ரோவர்களை நாசா வெற்றிகரமாகச் செவ்வாயில் தரையிறக்கி சாதனை கள் படைத்தது. Sojourner, Sprit, Opportunity, Curiosity, Perseverance எனப் பட்டியல் நீளும்.

நாசாவின் செவ்வாய் பயணம் ஒரு குழந்தை யின் முதிர்ச்சியைப் போல் தவழ்ந்து எழுந்து நடந்து ஓடி வளர்ந்த கதை.

ஆனால் சீனாவின் புது முயற்சி பல படி களை ஒரே பாய்ச்சலில் தாண்டிய கதை.

நாசாவைப் போல் தம் சாதனைகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் செயல்பாடு களில் சீனாவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (CNSA) ஈடுபடுவதில்லை. சமூக வலைதளங்களிலும் அரசு அறிக்கைகளிலும் தம் சாதனைகளைக் கசியவிடுவதே போதும் என்ற எண்ணம்.

2021 மே மாதம் 14ல் Utopia Planitia பிரதேசத்தில் சீனாவின் விண்கலம் தரை யிறங்கி சில நாட்களில் ‘தீயின் தெய்வம்’ எனும் பொருள்படும் 240 கிலோ எடையுள்ள Zhurong ரோவரை விடுவித்தது. இதே பள்ளத் தாக்கில்தான் நாசாவின் Viking & 2 மற்றும் Pathfinder கலன்கள் முன்னர் தரையிறங்கி யிருந்தன. இவ்விடம் சமதரையானதாலும் முன்னர் ஒரு காலத்தில் நீர்ப்பரப்பாய் இருந்த தாய் ஊகிக்கப்படுவதாலும் எவருக்கும் பிடித்த ‘பார்க்கிங் ஸ்பாட்’ இது.

சீனாவின் 240 கிலோ எடையுள்ள ரோவர் நாசாவின் ரோவரைப் போல் செவ்வாயின் தரையில் பல விஞ்ஞான ஆராய்ச்சிகளைச் செய்யும். இந்த ரோவர் செவ்வாயின் தரையில் ஊர்ந்து படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பத் தொடங்கியுள்ளது. மூன்று மாதங்களுக்குச் செவ்வாயின் தரையில் இது நிகழ்த்த இருக்கும் ஆராய்ச்சிகளின் விவரங்கள் ரகசியமாகவே உள்ளன.

அட, ஐக்கிய அரபு நாடுகள் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய Hope விண்கலத்தை மறந்துவிட்டோமே? செவ்வாய் கிரகத்தைச்

சுற்றிப் பறந்து செவ்வாயின் வான் பரப்பின் பருவநிலை, காலநிலை, வளிமண்டலக் கட்டமைப்பு பற்றிய தகவல்களைத் திரட்டி பூமிக்கு அனுப்புவதே இதன் தலையாயக் கடமை. ‘திருமண போட்டோகிராபர்’ வேலை என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

மனிதகுலத்தின் மேன்மைக்காக விஞ்ஞான உலகில் இது போன்ற ஒரு ஆரோக்கியமான போட்டி வரவேற்கத்தக்கதே!

செவ்வாய் தரையிறக்கத்தில் மட்டுமல்லாது தனக்கென ஒரு சர்வதேச விண்வெளி நிலையத்தை ஒத்த, விண்வெளி நிலையத்தை அமைக்கும் முன்னெடுப்பிலும் சீனா இறங்கி உள்ளது.

விண்வெளி நிலையத்தை அமைப்பதில் சோவியத் ரஷ்யாவே உலகின் முன்னோடி. 1971ல் Salut 1 னுடன் ஆரம்பித்து Salut 7 வரை வளர்ந்து பல விஞ்ஞான சாதனைகளைப் படைத்த இந்த நிலையம் 1986ல் கடையை மூடியது. அதைத் தொடர்ந்து ரஷ்யா 1986ல் Mir விண்வெளி நிலையத்தைக் கட்டி வானில் மிதக்கவிட்டது. அமெரிக்காவின் Skylab நிலையமும் 1973 முதல் 1979 வரை செயலாற்றி ஓய்ந்தது.

பூமிக்குமேல் 400 கி.மீ தொலைவில் மிதந்து கொண்டிருக்கும் ‘ஒரிஜினல்’ சர்வதேச விண் வெளி நிலையம் 1998ல் ரஷ்ய - அமெரிக்கக் கூட்டுறவில் விண்வெளியில் அமைக்கப் பட்டது. அதன்பின் ‘லெகோ’ துண்டுகளை இணைப்பதுபோல் ரஷ்ய - அமெரிக்க ராக் கெட்களில் கொண்டுசெல்லப்பட்ட நிலையத் தின் பகுதிகள் வானில் இணைக்கப் பட்டன.

இரு ஆண்டுகளில் இந்த நிலையம் பூர்த்தி செய்யப்பட்டு 2000ல் மனித குடியிருப்பிற்குத் திறந்துவிடப்பட்டது. இன்று வரை 19 நாடுகளில் இருந்து 244 பேர் இங்கு விஜயம் செய்து தங்கி இருக்கிறார்கள். வானில் மிதக்கும் இந்த விஞ்ஞான ஆய்வுக்கூடத்தின் பங்குதாரர் கள்: அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், கனடா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஒன்றிய நாடுகள். 2024 வரை இந்த நிலையம் செயல் பட இருப்பதாய் நம்பப்படுகிறது.

அமெரிக்காவுக்கும் ரஷ்யாவிற்கும் நடுவே பூமியில் ஒரு மறைமுகப் பனிப்போர் நிகழ்ந் தாலும் வானில் ஒரு நல்ல புரிந்துணர்தலுடன் ஒற்றுமையாய் செயல்படுவது மனிதகுல

விஞ்ஞான மேன்மைக்கு ஒரு ஆசிர்வாதமே.

ஆனால் அண்மையில் ரஷ்யா, தான் சர்வதேச விண்வெளி நிலைய ஈடுபாடுகளில் இருந்து விலகித் தனக்கென ஒரு தனி நிலையத்தை 2030 அளவில் அமைக்க இருப்ப தாய் அறிவித்தது ஒரு கவலையான செய்தியே!

இந்தத் தனி ஆவர்த்தன செய்தி வரும் முன்பே சீனா தனக்கென ஒரு விண்வெளி நிலையத்தை அமைக்கும் முன்னெடுப்பில் இறங்கிவிட்டது.

ஏப்ரல் 29, 2021ல் 850 டன் எடையுள்ள Long March 5B ராக்கெட்டில் Tianhe எனும் இந்நிலையத்தின் முள்ளந்தண்டை வானுக்கு அனுப்பியதன் மூலம் சீனா இம்முயற்சிக்கு வித்திட்டது. 2022 இறுதிக் குள் அமைத்து முடிக்கப்பட இருக்கும் இந்த Tiangong விண்வெளி நிலையம்,

சர்வதேச விண்வெளி நிலையத்தைவிட ஐந்தில் ஒரு பங்கு சிறியது.

இதில் ஒரே நேரத்தில் மூன்று `taikonauts` (ஆம், சீன விண்வெளி வீரர்களை இப்படியே அழைப்பார்கள்.) தங்கியிருக்க முடியும். பூமியில் இருந்து 400 கி.மீ. உயரத்தில் மிதக்கும் இந்த நிலையத்தில் பொருத்தப்பட உள்ள, 20 டன் எடையைத் தூக்கக்கூடிய, 10 மீட்டர் நீளமுள்ள ‘ரோபோ கை’ ஏற்கெனவே அமெரிக்காவின் எதிர்ப்பைச் சம்பாதித்துள் ளது. இந்தக் கையினால் எந்தச் செயற்கைக் கோள்களையும் ‘லபக்’கென சீனா பிடிக்கும் ஆபத்து உள்ளது என்பதே அமெரிக்காவின் கவலை! இது போன்ற இன்னும் பல முனகல்களை நாம் பார்க்கத்தான் போகிறோம்!

எந்த விஞ்ஞான வளர்ச்சியும் மனித மேம்பாட்டுக்கு உதவும் நோக்கில் முன்னெடுக் கப்பட்டால் அதை உலகச் சமூகம் வரவேற்கும் என்பதில் ஐயமில்லை!

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :