அருள்வாக்கு

தேக முக்தியும் விதேக முக்தியும்...
ஜகத்குரு காஞ்சி மகா சுவாமிகள்லோகத்தில் ஒருத்தன் இருக்கிற மாதிரித் தோன்றும் ‘போதே ஞானம் வந்து மாயை விலகி, தனி மனசின் வேலை அடங்கிப் போய் ஆத்மானுபவத்தில் இருந்து கொண்டிருப்பதுதான் ஜீவன் முக்தி.

லோக மாயை இவனிடமிருந்து அப்போது கத்தரித்துப் போய்விடு வதைத்தான் வெள்ளரிக்கொடி பழத்திலிருந்து கத்தரித்துக் கொண்டு ஓடுவதற்கு உவமித்தது - அதாவது என் எக்ஸ்ப்ளனெஷன்.

இப்படி லோக மாயை போனாலும் அந்த ஜீவன் முக்தனுக்கு சரீரம் இருக்கிறது. அவனுக்குச் சரீர ப்ரக்ஞை இல்லாவிட்டாலும் நாம் பார்ப்பதற்குச் சரீரம் என்று ஒன்று தெரியத்தானே செய் கிறது? ப்ராரப்த கர்மா தீர்கிறவரை அதன் பலனாகப் பல பேர் அவனைப் பூஷிப்பது, தூஷிப்பது, வியாதி வக்கைப்படுவது, நல் லாரோக்யம் காண்பது முதலான வற்றுக்கு ஆஸ்பதமாக அந்தச் சரீரமிருக்கிறது.

மனசிலே அவன் இவற்றுடைய நல்ல - கெட்ட பாதிப்பு எதையும் அனுபவிக்காவிட்டாலும், கர்ம தர்மத்திற்காக அந்தச் சரீரமாவது அவற்றுக்கு கூச்ணூஞ்ஞுt -ஆக ‘இலக்காக’ ப்ராரப்தம் தீர்ந்து முடியும்வரை இருந்துகொண்டுதானிருக்கும். (ஞானி-ப்ராரப்தம் பற்றி வேறு அபிப்ராயங்களிருந்தாலும் பொதுவான அபிப்ராயம் இதுதான். அதையே வைத்துக்கொண்டு சொல்கிறேன்.)

கொடியிலிருந்து பிரிந்த பின்னும் வெள்ளரிப்பழம் தன்னுடைய ரூபம் இருக்கிறபடியே இருப்பதுபோல லோகபந்தம் போன அப்புற மும் ஜீவன் முக்தன் ஒரு சரீரத்தோடு இருந்து கொண்டிருக்கிறான். பிற்பாடு ஒருநாள் - அவனுடைய ப்ராரப்தம் முழுசாகத் தீர்ந்து போகும் நாள் - வரும்போது அவனுடைய சரீரம் மரணமடைகிறது. அதுதான் விதேஹ முக்தி. தேஹத்திலிருந்துகொண்டே அவன் மாயை விலகி ஆத்மாவை அனுபவித்து வந்தது ஜீவன் முக்தி.

அப்போது மனசின் பந்தம் போனாற்போலவே இப்போது தேஹ பந்தமும் போய் மரணம் ஏற்படுவதால் இது வி-தேஹ முக்தி. ஞானியான அப்புறமும் அவனுக்கு இருந்த ப்ராரப்த கர்மா இப்போது அடியோடு இல்லாமல் வெடித்துவிட்டது.

அந்த வித்வான் நினைத்த மாதிரி இல்லாமல் இதிலும் ‘வெடிப்ப திலும்’ பந்த மோசனம் இருக்கிறது. பழத்தை அதன் ரூபம் பந்தப் படுத்தத்தானே செய்கிறது? ஞானிக்கு என்னதான் பந்த உணர்ச்சி இல்லாவிட்டாலும், தேகம் என்று இருக்கும்வரையில் அதை வைத்துக்கொண்டு நடப்பது, அதற்கு ஓய்வு கொடுப்பது, ஆகாரம் போடுவது, குளிப்பது, இயற்கைக் கடன் தீர்ப்பது என்றெல்லாம் பல செய்யும்படி இருப்பது நம்முடைய பார்வையிலாவது அவனுக்குமுள்ள பந்தமாகத்தானே தெரிகிறது? மரணம் என்று நமக்குத் தெரியும். அவனுடைய விதேக முக்தியிலேயே - இந்தத் தேக பந்தம் போகிறது.

நமக்கெல்லாம் இந்த ஸ்தூல தேகம் செத்த அப்புறமும் சூட்சும தேகம் இருக்கவே செய்யும். அதுதான் லோகாந்தரங்கள் போய் ஸ்வர்க - நரக - பித்ரு லோகாதி வாசங்களை அனுபவிப்பது. அப்புறம் மறுபடி இன்னொரு ஜன்மாவில் இன்னொரு தேகத்தில் புகுந்து கொள்வது. ஞானிக்கு இப்படி சூட்சும சரீரமென்று ஒன்றில்லை; லோகாந்தர ப்ராப்தி, புனர்ஜன்மா ஆகியவை இல்லாமல், இந்தத் தேகத்தின் மரணத்தோடேயே சகலமும் முடிந்து போகின்றன.

நமக்கு அவை ஏற்படக் காரணம் கர்ம பந்தமே. கர்மாவினாலேயே அதற்கேற்றபடி ஸ்வர்க - நரகம் போவது, மறுபடி பிறப்பது என்று நமக்கு ஏற்படுகிறது. ஞானிக்கோ ப்ராரப்தம் தீர்ந்து தேகம் செத்து விழுகிறபோது கர்மமும் முழுக்கத் தீர்ந்து விடுகிறது. அதாவது ஸ்தூல தேக பந்தம் என்ற ஒன்று விடுபடும்போதே, அதற்கப்புறமும் சூட்சும தேக பந்தம் என்பதில்லாமல், அப்போதே சூட்சும தேகத்தையும்கூடச் சேர்த்துக்கொண்டு பட்டென்று சாவோடு அப்படியே போய் விடுகிறது; கர்ம பந்தம் துளிக்கூட பாக்கியில்லாமல் அப்படியே போய்விடுகிறது. இப்படி கூணூச்ஞிஞுகூட இல்லாமல் அவை பட்டென்று போய்விடுவதற்கு வெள்ளரிப்பழம் பட்டென்று வெடித்து, என்னவாச்சு என்றே தெரியாமல் மறைந்துவிடுவது சரியான உபமானம்தானே?

மனசின் பந்தம் போய் ஏற்படும் ஜீவன் முக்தி: கொடி கத்தரித்துப் போய் பழம் அப்படியே கிடக்கும் நிலை. ப்ராரப்த கர்ம பந்தமும் - அதிலேயே அடக்கமான தேக பந்தமும் - வெடித்துப் போய் ஏற்படும்.

விதேக முக்தி: கிடந்த பழம் வெடித்து இருந்த இடம் தெரியாமல் போய் விடுவது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :