சங்க இலக்கியங்களில் மருத்துவக் குறிப்புகள்!

எடுத்துரைப்பவர் : டாக்டர் சுதா சேஷயன், எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர்
தொகுப்பு : பத்மினி பட்டாபிராமன்‘அனாடமி’ எனப்படும் உயிரியல் துறை வல்லுனர் திருமதி சுதா சேஷயன் அவர்கள், அண்மையில், ‘உரத்த சிந்தனை’ அமைப்பின் சார்பில் நடைபெற்ற ஸூம் சந்திப்பில் பேசும்போது,

சங்க இலக்கியங்களில் காணப்படும் மருத்துவக் குறிப்புகளைப் பற்றிய கேள்விகளுக்கு சுவையான தகவல்களைக் கூறினார். அதன் சாராம்சம் இங்கே:

சங்க இலக்கியங்களில் தனியாக மருத்துவக் குறிப்பு என்று இல்லாமல் ஆங்காங்கே பாடல் களில் காணப்படுகிறது.

‘பதினெண்கீழ் கணக்கு’ நூல் சில, மருத்துவப் பொருட்களை நமக்கு அடையாளம் காட்டுகின்றது. குறிப்பாக திரிகடுகம், ஏலாதி, சிறுபஞ்சமூலம் போன்ற நூல்கள், தம்

பெயரிலேயே மருத்துவக் குணங்களைக் குறிப்பதாக உள்ளன.

‘திரிகடுகம்’ என்பது சுக்கு, மிளகு, திப்பிலி போன்ற மூன்று மருத்துவப் பொருட்களால் ஆன மருந்து. அதைப்போல, நம் வாழ்க்கைக்குத் தேவையான மூன்று நல்ல கருத்துகளைக் கொண்டது இந்த நூலில் உள்ள பாடல்கள் என்று கொள்ளலாம்.

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு, கடைச்சங்க காலத்தில், ‘நல்லாதனார்’ எனும் புலவரால் இயற்றப்பட்ட பாடல்கள் இவை.

கணிமேதாவியார் இயற்றிய, ‘ஏலாதி’ என்னும் சங்க நூலின் பெயர் ஏலம், லவங்கம், சிறுநாவற் பூ, சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய ஆறு பொருட்களைப் பயன்படுத்திச் செயப் பட்ட, ‘ஏலாதி’ எனும் ஒன்றின் பெயரை அடியொற்றி ஏற்பட்டது. இதில் உள்ள பாடல்களில் ஆறு நீதிக் கருத்துக்கள் சொல்லப்பட்டிருக்கும்.

கண்டங்கத்திரி, சிறுவழு துணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சில் ஆகிய ஐந்து பொருட்களின் வேரைக் கொண்டு மருந்துகள் செவார் களாம். அதைப்போல, நல்ல நீதி தரும் ஐந்து செதிகளை உள்ளடக்கிய பாடல்களைக் கொண்டது, காரியாசான் என்ற புலவர் இயற்றிய, ‘சிறுபஞ்சமூலம்’ என்ற நூல்.

சில புலவர்கள், தங்கள் பெயரிலேயே, மருத்துவத்தை இணைத்திருந்தார்கள். மருத்துவர் தாமோதரனார், மருத்துவர் நல்லச்

சுதனார், கடுகு பெருந்தேவனார், வெள்ளெருக்கிலையார் என்று மருத்துவம் அறிந்த புலவர்கள் சங்க காலத்தில் வாழ்ந்திருக்கிறார்கள். இவர்கள் தம் பாடல்களில் சில தகவல் களையும் தருகிறார்கள்.

‘பதிற்றுப் பத்து’ என்பது பதினெண்கீழ் கணக்கு சங்க நூல்களில் ஒன்று. அதில் ஒரு சம்பவம்...

ஒரு அரசனுக்கு போரில் காயம் ஏற்படுகிறது. எதிரிகள் அவன் மேல் எறிந்த ஆயுதத்தின் ஒரு துண்டு அவன் உடலுக்குள் சென்று விடுகிறது.(வெடிகுண்டு விபத்து நிகழ்ந்த இடத்தில் சிலருக்கு உடலுக்குள் துகள்கள் சென்று விடுவது போல்) அரசன் உடலில் இருந்து ஆயுதத் துண்டை எடுக்கிறார்கள். எப்படி? அழகான ஒரு பாடல் அதை விளக்குகிறது.

‘மீன் தேர் கொட்பின் பனிக்கயம் மூழ்கிச்

சிரல் பெயர்ந்தனை நெடுவள் ஊசி

நெடுவசி பரந்த வடுவாழ்

மார்பின் அம்புசேர் உடம்பினர்’

ஆற்று நீரில் மீன் கொத்தும் சிரல் பறவை, எப்படி வேகமாக மீனைக் கொத்திக் கொண்டு திரும்பிப் போகிறதோ, அதைப்போல ஒரு வெள் ஊசி, அதாவது வெள்ளி ஊசி அல்லது அதுபோன்ற உலோகத் தால் செய்த ஊசியை உள்ளே செலுத்தி வேகமாக அந்த ஆயுதத் துண்டை வெளியே எடுத்ததால் வடு (தழும்பு) அரசன் மார்பில் ஏற்பட்டது என்பது இந்தப் பாடலின் பொருள்.

போர்க்களத்தில் காயம் பட்டவர்களுக்கு எப்படி சிகிச்சை தர வேண்டும் என்பதை சங்க காலத்தில் அறிந்திருந்தனர்.

சித்த மருத்துவத்தில், ‘குணபாடம்’ என்ற முறையில் ஒரு பாடல், காயம் பட்டால் வடு ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்ற செய்தியைச் சொல்கிறது. அத்தி மர இலைகளின் பால் மற்றும் பட்டையின் பால் இவற்றைக் கொண்டு சிகிச்சை செதால் காயத்தின் வடு ஏற்படாது அல்லது மிகக் குறை வாகவே இருக்கும் என்பது அந்தப் பாடல் தெரிவிக்கும் செய்தி. இதைப்போன்ற பல பாடல் கள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.

இன்றைய காஸ்மடிக் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளின் முன்னோடி யார் தெரியுமா?

‘சுஷ்ருதா’ என்னும் காசி மருத்துவர்தான். 2,600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். ‘இந்திய மருத்துவத்தின் தந்தை’ என்று அழைக்கப் படுபவர்.

சுஷ்ருதாவின் அறுவை சிகிச்சை முறைகள், இன்றளவும் உலகம் முழுவதும் இருக்கும் பிளாஸ்டிக் மற்றும் காஸ்மடிக் அறுவை

சிகிச்சை மருத்துவர்களுக்குப் பயன்பட்டு வருகிறது. சுஷ்ருதா செத ‘ரைனோப்ளாஸ்டி’ அறுவை சிகிச்சையில், நெற்றியிலிருந்து தோல் எடுத்து, அறுபட்ட மூக்கின் இடத்தில் வைத்து அறுவை சிகிச்சை செதிருக்கிறார்.

அத்தகைய அறுவை சிகிச்சைகளை அவர் எப்படி செதார் என்பது, பிளாஸ்டிக் சர்ஜரி பாடப்புத்தகங்களில் இன்றும் இடம் பெற்றிருக்கிறது.

ஏன் மூக்கு அறுவை சிகிச்சை செய்தார் சுஷ்ருதா?

அதற்கும் நம் இந்தியப் பண்பாட்டுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. ஒருவரை கொலை செவதற்கு நிகராக அவமானப்படுத்த வேண் டும் என்றால் அவரது மூக்கை அறுத்து விடுவார் கள். அதன் மூலம் அவரை நீக்குவதற்கு சமம்.

இன்றும், ‘என்னிடம் நன்றாக மூக்கறுபட்டான்’ என்று நாம் பேச்சுவாக்கில் சொல்வ தில்லையா? அந்தக் காலத்தில் போர் முறை களில் ஒன்று எதிரியின் மூக்கை அறுத்தல். இது வரலாற்றுப் பதிவுகளிலும் உண்டு.

திப்பு சுல்தான் காலத்தில், ‘மூக்கறு போர்’ என்றே ஒரு வகை போர் இருந்தது.

ஆக, இப்படி மூக்கறுபட்டவர்களுக்காக, ரைனோபிளாஸ்டி அறுவை சிகிச்சைகளை சுஷ்ருதா செய்திருக்கிறார்.

சங்க காலத்தில் பெண் மருத்துவர்களும், ஆண்களுக்கு இணையாக பாடல்கள் இயற்றி யிருக்கிறார்கள். மருத்துவம் அறிந்திருக் கிறார்கள். அவர்களை, ‘மருத்துவி’ என்று சங்க நூல்கள் குறிப்பிடுகின்றன.

‘மணிமேகலை’ காப்பியம் இயற்றிய சீத்தலைச் சாத்தனார், மணிமேகலையை, ‘மருத்துவி’ என்றே குறிப்பிடுகிறார்.

சங்க கால இலக்கியங்களில் இன்னும் ஏராள மான மருத்துவச் செதிகள் காணப்படுகின்றன. புலவர்களில் பெரும்பாலானோர் மருத்துவமும் அறிந்திருந்தார்கள் என்று தெரிய வருகிறது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :