ரச ருசி


வாசகர் ஜமாய்க்கிறாங்கஇளநீர் ரசம்

தேவையானவை : இளநீர் - 2 கப், தக்காளிச் சாறு - 1 கப், துவரம் பருப்பு, மிளகு, சீரகம் - தலா 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள், இளநீர் வழுக்கை - அரை கப், கடுகு, நெ - தாளிக்க.

செய்முறை : துவரம் பருப்பு, மிளகு, சீரகம் ஆகியவற்றை தண்ணீர் விட்டு அரைத்து, கடைசியில் இளநீர் வழுக்கையையும் சேர்த்து மிக்சியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். இதனுடன் இளநீர், தக்காளிச் சாறு, உப்பு

சேர்த்து, இரண்டு நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். பிறகு கடாயில் நெ ஊற்றி, கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து ரசத்தில் சேர்க்கவும்.

சுவையான இளநீர் ரசம் உடல் சூட்டைத் தணிக்கும். லேசான இனிப்புடன் பிரமாதமாகஇருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

-நிவேதிதா வினோத், விருகம்பாக்கம்

எங்க மாமியார் ரசம்...

மிளகு பத்து, சீரகம் பத்து, நாலு பல்லு பூண்டு, காந்த மிளகா மூன்று, அரை டீஸ்பூன் மஞ்சள் தூள், கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுத்து சுற்றவும். கொரக்கொரவென்று இருக்க வேண்டும்.

நெல்லிக்கா அளவு ஊற வைத்த புளியை கரைத்துக்கொண்டு வடிக்கட்டி எடுத்துவிட்டு, அதில் இரண்டு பழுத்த தக்காளியை கைகளால் நன்கு மசித்து கரைத்தெடுக்கவும். ஏற்கெனவே அறைத்த மிளகு, சீரகக் கலவையைச் சேர்த்துக் கொள்ளவும். தேவையான அளவு உப்பு சேர்த்து அடுப்பில் ஏற்றவும். பின்னர் நுரைப் பொங்கி கொதி வருவதற்குள் இறக்கி தட்டைப் போட்டு மூடவும்.

தாளிப்புக்கு : எண்ணை சேர்த்து, கடுகு கால் டீஸ்பூன், சீரகம் அரை டீஸ்பூன் சேர்த்து பொறியவிட்டு பின் கறிவேப்பிலை, இரண்டு காந்த மிளகா கிள்ளிப் போடவும். கூடவே நாலு பல்லு பூண்டு தட்டி போட்டால் ரசம் மணம் கமழும். தாளித்துவிட்டு உடனே கொத்துமல்லி தழை கொஞ்சம் நறுக்கிச் சேர்த்து விட்டால் போதும்...

மணமணக்கும் எங்க மாமியார் ரசம் ரெடி...

- தீபீகா சீனிவாசன், திருவள்ளூர்

இஞ்சி ரசம்

தேவையானவை :

துவரம் பருப்பு 1 கப், தக்காளி 2, ரசப்பொடி 2 ஸ்பூன், மிளகு தூள் சிறிது, உப்பு தேவைக் கேற்ப, கறிவேப்பிலை, கொத்துமல்லி, இஞ்சி 1 துண்டு.

செய்முறை :

துவரம் பருப்பை குக்கரில் மூன்று விசில் வரும் வரை வேக வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் சிறிது எண்ணெ ஊற்றி அதில் கடுகு, சீரகம், தக்காளி, பெருங்காயம் சேர்த்து வதக்கிக்கொள்ளவும். வதங்கியவுடன் ரசப்பொடி, உப்பு சேர்த்து கொதிக்க விடவும். இஞ்சி ஒரு துண்டை தோல் நீக்கி மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து, கொதிக்கும் ரசத்தில் சேர்க்கவும்.

வேக வைத்த பருப்பை நன்றாக மசித்து தண்ணீர் சேர்த்து ரசத்தில் ஊற்றவும். ரசம் கொதித்தவுடன் கறிவேப்பிலை, கொத்துமல்லியை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.

- சாந்தி சீனிவாசன், அம்பத்தூர்

முருங்கைப் பிஞ்சு ரசம்

நான்கு தக்காளி, முருங்கைப் பிஞ்சு ஆகிய வற்றுடன் மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். இதில் தேவையான தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்து, உப்பு, மிளகு, சீரகத்தூள் சேர்க்கவும். அடுப்பை மிதமான தீயில் எரிய விடவும். ஒரு கொதி வந்ததும் கீழே இறக்கி, எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். பிறகு எண்ணெயில் கடுகு, பெருங்காயத்தூள் தாளித்துச் சேர்க்கவும். பின்னர் கொத்துமல்லி, கறிவேப்பிலை தூவி அலங்கரிக்கவும்.

- ஹேமலதா சீனிவாசன், பம்மல்
Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :