எங்களால் ஆனது..!


தொகுப்பு : ராகவ்குமார்மதுமிதா : வீட்டில் தோட்டம் போட வேண்டும் என்ற ஆசை நிறைய உண்டு. ஆனால், நான் வசிப்பதோ அப்பார்ட்மெண்ட் வீடு. எனவே, கடந்த லாக்டவுன் நாட்களில் வீட்டு தொட்டியில் மிளகா, பால்கனியில் வெத்தலை என சிறு சிறு செடிகளைப் பயிரிட்டேன். இப்போது நன்கு வளர ஆரம்பித்துவிட்டன. உதவி இயக்குனர்கள், உதவி ஒளிப் பதிவாளர்கள், டச் அப் மேன் என்று சொல்லப் படும் உதவி ஒப்பனையாளர்கள், சூட்டிங்போது உணவு தயாரிக்கும் சமையல் கலைஞர்கள் என இப்படி இன்னும் பல உதவியாளர்களின் உழைப்பில்தான் சினிமா என்ற சக்கரம் சூழல் கிறது. இந்த லாக்டவுன் நேரத்தில் பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும் சொல்ல முடியாத துன்பத்தை இவர்கள் அனுபவித்து வருகிறார்கள். ஒவ்வொரு நடிகர், நடிகையின் வளர்ச்சியில் இந்த உதவியாளர்களின் பங்களிப்பு உள்ளது. இதை யாரும் மறுக்க முடியாது. இவர்களின் பிரச்னை களைப் போக்க என்னால் முடிந்த பொருள் உதவி களைச் செய்து வருகிறேன். இதை உதவி என்று எண்ணாமல் கடமை என்று நினைக்கிறேன். போனில் கவுன்சிலிங்கும் செய்கிறேன்.

நீலிமா : இந்த லாக்டவுன் காலங்களில், நானும் எனது கணவரும் என் வீட்டருகில் சாலை ஓரங்களில் வாசிப்பவர்களுக்கு உணவு பாக்கெட் களும், பாக்கெட் வழங்க முடியாத சூழலில் பணமும் வழங்குவோம். இரண்டு நாட்களுக்கு முன்பு நான், என் கணவர், மகள் மூவரும் பக்கத்து தெருவுக்கு யாருக்கேனும் உதவி செயலாம் என்ற எண்ணத்தில் போனோம். அப்போது ஒரு பெண்மணி மூன்று வயதில் ஒரு குழந்தை, மடியில் ஒரு வயது குழந்தையுடன் இருந்தார். பார்ப்பதற்கு குப்பைகளை சேகரித்து, விற்று பணம் பெருபவர் போல் தெரிந்தார். தன் மகள் களின் பெயர் சாதனா, பிரவீனா என்றும் உணவு தேவைப்படுவதாகவும் சொன்னார். உணவு பொட்டலம் கொடுக்க முடியாத சூழலில் நூறு ரூபா பணம் தந்தேன். மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்டார். இந்த நெருக்கடியான சூழ்நிலையில் நிறைய பேருக்கு உதவி தேவைப்படுகிறது. நம்மால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும்.

நந்திதா : நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கொஞ்சம், கொஞ்சமாக குணம் அடைந்து வருகிறேன். எனக்கு ஏற்பட்ட இந்த அனுபவத்தால், கொரோனா நிவாரணப் பணிகளுக்கு நிதி உதவி செய எண்ணினேன். எனவே, வெப்மினார் மூலமாக நடிக்க ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு மோட்டிவேஷன் வகுப்பு நடத்துகிறேன். இதன் மூலமாக கிடைக்கும் கட்டணத் தொகையை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கப்போகிறேன். என்னால் ஆன சிறு உதவி.

மனிஷா யாதவ் : மருத்துவமனையில் உள்ளவர்கள் சிலருக்கு ரத்தம் தேவைப்படுகிறது. இன்றைய சூழலில் பலர் ரத்தத் தானம் செய பயப்படுகிறார்கள். பாதுகாப்பாக ரத்ததானம் செவதைப் பற்றி ரத்த வங்கிகளுடன் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். ஆக்ஸிஜன் அதிகம் தேவைப்படும் இன்றைய காலகட்டத்தில் நான், எனது குடும்பத்தார், சாப்ட்வேர் மக்கள், தன்னார்வலர்கள் அனைவரும் சேர்ந்து ஆக்ஸிஜன் மையம் ஒன்றைத் துவங்கி உள்ளோம். இதன் மூலம் பெங்களூரு நகரில் எங்கள் பகுதிக்கு அருகில் வசிக்கும், ஆக்ஸிஜன் தேவைப்படுபவர்களுக்கு, ஒருங்கிணைந்து ஆக்ஸிஜன் சப்ளை செகிறோம். சென்னையிலும் இதுபோன்று செய்ய விருப்பம். ஆனால், அங்கே வரமுடியாத நிலைமை.

தேவி (நடிகை மற்றும் நாடக பயிற்சியாளர்) : முதல் லாக்டவுன் தொடங்கிய சில நாட்களில் என் சொந்த ஊரான குடியாத்தம் சென்றேன். அங்கே மாஸ்க் போடாமல் கொரோனா குறித்த எந்த விழிப்புணர்வும் இல்லாமல் மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று பேசி கொண்டிருந்தார்கள். என்ன செவது என்று யோசித்தேன். நம்ம கையில்தான் வித்தை இருக்கே, என்று எண்ணி பறை எடுத்து அடித்து, அனைவரையும் அழைத்து கொரோனா விழிப்புணர்வு வீதி நாடகம் போட்டேன். என்ன தான் தகவல் தொழில் நுட்பம் வளர்ந்தலும் மக்க ளிடம் நேரடியாக பேசும் நாடகம் மிக வலுவானது என்பதை உணர்ந்தேன். மகிழ்ந்தேன். என்னால் ஆன சிறு விழிப்புணர்வு முயற்சி.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :