பயமே ஜெயம்!

பயண அனுபவம்
பிருந்தா, சென்னைநீங்களும் எழுதுங்களேன்!

பயணத்துக்குத் தடா போட்ட கொரோனாவை ஓரம் கட்டிவிட்டு, உங்களது நீங்கா நினைவுகளை எழுதி அனுப்பும்படி மங்கையர் மலர் ஃபேஸ்புக் பக்கத்தில் கேட்டிருந்தோம்...

எண்ணற்ற பங்கேற்புகள் குவிந்தன! இதோ தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த பயண அனுபவக் கட்டுரைகளின் அணிவகுப்பில்...

‘இந்த சமயத்தில் நீங்கள் அந்த இடத்துக்குப் பயணிப்பது தைரியமான முடிவுதான்.’ உறவினர்களின் போன் மற்றும் வாட்ஸாப் (ஙிடச்ணாண்ச்ணீணீ) செய்திகள். ஏதோ தீரச் செயல் செவது போல. ஏனெனில், அங்கு பேசப்படும் பயங்கரவாதம் மற்றும் அதைவிட பயங்கரமான நுண்கிருமி.

என்ன இருந்தாலும் இது காதல் இளம்ஜோடிகளின் கனவுலகம். அவ்வளவு தூரம் செல்வது கடினம். பர்ஸை பதம் பார்க்கும் இடம் என்றாலும், ஜெமினியும் வைஜயந்தியும் துள்ளித் திரிந்த இடம் இல்லையா? சினிமா உலகத்தின் கனவுத் தொழிற்சாலை. ஆனால், கொஞ்ச

காலமாகவே தடை செயப்பட்ட சொர்க்க மாகவே காட்சி அளிக்கிறது.

பால் போல் பனி போர்த்திய மலை பிரதேசங்கள், ஆங்காங்கே ஆயுதம் ஏந்திய சிப்பாகளும் காவலுக்கு உண்டு. பூத்துக் குலுங்கும் மலர்த் தோட்டங்களும் வழிந் தோடும் ஓடைகளும் டூயட் பாடச் சொல்லும். குங்குமப் பூவும் உண்டு. மறைந்திருக்கும்

குண்டுகளும் உண்டாம். இதுதான் காஷ்மீரம்.

வான் வழியே செல்வதுதான் உத்தமம். குரூப் டூர் என்பதால் இறங்கியவுடன் அழைத்துச் செல்கிறார்கள். நிறைய இந்திக்காரர்கள்தான். ஒரே ஒரு தமிழ் ஜோடி மட்டும் ஈரோட்டிலிருந்து. கொஞ்சம் நடு வயதைத் தொட்ட இளம் ஜோடி. அந்தப் பெண் அந்தக்கால ஹீரோயின் மாதிரி இருந்தார். இறங்கிய இடம் தலைநகரான ஸ்ரீநகர். பெரிய பெரிய மால்கள் ஒன்றும் கண்ணில் படவில்லை. நேரே தால் ஏரி.

படித்துறைகள் என்று 40க்கு மேல் உள்ளன. அதில் ஒன்றில் இறங்கித்தான் படகு வீட்டிற்கு செல்ல வேண்டும். கொஞ்சம் தூரத்தில் வரிசையாக நங்கூரமிடப்பட்ட படகு வீடுகள். சிறிய படகில் சவாரி செது படகு வீட்டை அடைகிறோம்.

இங்கு தண்ணீர் கருப்பு நிறம். சுத்தமில்லை. நம் கேரள படகு வீடுகளோடு அதை ஒப்பிடவே முடியாது. உள்ளே அறைகள் வசதியாகவே உள்ளன. போனவுடன் காஷ்மீர் காவா தேநீர். இரவு டின்னர் சிம்பிள். ஆனால், ஜோர். ரொட்டி, நான், கலப்பு காகறி, பருப்பு, ஒரு ஸ்வீட், கேட்டால் தயிர். நாங்கள் தங்கியிருந்த எல்லா நாட்களுமே இந்த மெனுதான். நம்மூர் உணவு கிடைப்பது சிரமம்தான்.

அன்று மாலையே, ‘சிகாரா’ என்ற அலங்கார படகில் ஏரியைச் சுற்றி சவாரி. ஆனால், ஏரியின் அழகு காண்பிக்கப்படவில்லை. இதற்கு டூர் போகும் முன்னரே கட்டணம் வசூலித்து விடுகிறார்கள். படகின் மேல் பக்கம் கூரை. இரு பக்கமும் திரைச்சீலைகள். அமர்வதற்கு மெத்தைகள். மோட்டார் கிடையாது. துடுப்பு தான் படகை நகர்த்தும். ஒரு மணி நேரம்

தண்ணீரில் சவாரி. ‘மீனா பஜார்’ என்ற மிதக்கும் கடைகள் வழியாகச் செல்கிறது படகு. தனக்குத் தெரிந்த, கமிஷன் கொடுக்கும் கடைகள் முன் நிறுத்துகிறார்கள். வழி முழுக்க படகிலேயே வியாபாரம் செபவர்கள் சுற்றிக்கொண்டு பிடுங்கி எடுக்கிறார்கள். ஆனால், இந்த தால் ஏரிக்கு அழகான மறு பக்கமும் உள்ளது. அதற்குப் பின்னால் செல்கிறோம்.

மறுநாள் குளு குளு குல்மார்க். வழி நெடுக பனி வழிந்தோடும் மலைகள் நமக்கு

முகமன் கூறுகின்றன. அங்கு பிரதானமானது

‘கோண்டோலா’ எனப்படும் கேபிள் கார் சவாரி. இதில் இரு நிலைகள். கயிற்றில் தொங்கிக்கொண்டே மலைக்கு மேல் போ நிற்கும். பிறகு இன்னும் மேலே போ மலை உச்சிக்குப் போகும். காஷ்மீரிலேயே உயரமான பகுதிக்கு இது போகும். முதல் நிலையில் பனி

சறுக்கு விளையாட்டுகள் என்று எல்லாம் உள்ளன. சறுக்கு ஸ்கூட்டர்கூட உண்டு. அங்கே இருக்கும் உணவு விடுதிகளில் மட்டும் சாப் பிடாதீர்கள். அவ்வளவு கேவலமான உணவு. சாப்பிட்ட உடனேயே வெகு நேரத்திற்கு வயிறு குமட்டுகிறது. ஆனால், பணம் மட்டும் மிக அதிகம். நம் கைடு அங்கேதான் நம்மைக் கூட்டிச் செல்கிறார்.

இரண்டாவது நிலை இதற்கு ஈடுகட்டுவது போல் இருக்கிறது. கூட்டம் அதிகம் இல்லை. கண்களைச் சுழற்றினால் அருமையான பனி மலைக் காட்சிகள். மூச்சு முட்டும் என்கிறார்கள். அப்படி ஒன்றும் இல்லை. இரவு குல்மார்க் கிலேயே தங்குகிறோம். இங்கு படுக்கையிலேயே சூடு ஏற்றப்படுகிறது. தவிர, இரண்டு கம்பளி தேவைப்படுகிறது. இதுதான் குல்மார்க்.

மறுநாள் ஸ்ரீநகர் திரும்புகிறோம். இன்று இங்கேயேதான் சுற்றுலா. இங்கு பிரதான

மாக இருப்பது கண்களைப் பறிக்கும் மலர்த்

தோட்டங்கள்தான்.

முதலில் ஆதிசங்கரர் கோயில். கிட்டத்தட்ட 250 படிகள். உள்ளே சொல்லும்படியாக

அப்படி ஒன்றும் இல்லை. அடுத்தது முக்கியமான, துலிப் மலர் தோட்டம். அது மட்டுமல்லாமல்; அலங்கார மலர்களும் உள்ளன. சுமார் 15 லட்சம் பூக்கள், 62 வகையறாக்கள் இங்கு காட்சிக்கு இருக்கின்றன. இந்தியாவில் இங்கு ஒரு இடத்தில்தான் துலிப் மலர்கள் பூக்கின்றன. தமிழகம் போன்ற வெப்ப மண்டலங்களில் இவை வளர்வதில்லை யாம். இங்கு 9 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் பயிரிடப்பட்டு, பார்வைக்கு வைக்கப்பட்டுள் ளது. அடுத்தடுத்து பார்க்கும்போது, ஏதோ ஒரு வானவில் கீழே இறங்கி மலர்களில் குடி கொண்டது போன்ற பிரமை ஏற்படுகிறது. அத்தனை அழகான மலர்கள். நடுநடுவே செயற்கை நீரூற்றுக்கள். துலிப் மலர்களை தவிர, டஃபோடில், பதுமராகம், மஸ்கரி வகை மலர்களும் பல்வேறு வண்ணங்களில் மெ சிலிர்க்க வைக்கின்றன. புகைப்படக்காரர் களுக்கு நல்ல விருந்து. முழுவதும் ரசித்து பார்க்க வேண்டுமென்றால் மூன்று நாட்கள் கூட ஆகும் என்கிறார்கள். இது வருடா வருடம் ஏப்ரல் மாதம் முழுவதும் இருக்கும். நிச்சயம் காண வேண்டிய ஒன்று.

அடுத்தது, மொகலாய மன்னர்களின் இரண்டு விதமான தோட்டங்கள். ஒன்று வெவ்வேறு நிலை யில் அருவி போன்ற அமைப்புகளுடன் மைசூர் பிருந்தாவன் தோட்டத்தை நினைவூட்டுகிறது. பார்ப்பதற்கு முதலில் சிறியது போல் தெரிந்தாலும், உள்ளே நீண்டுகொண்டே போகிறது. அழகான பார்க் போன்ற அமைப்புகள். எப்படி அனுபவித்து ரசனையுடன் கட்டியிருக்கிறார்கள் முகமதியர்கள். தொடர்ந்து பரி மஹால்.

பிறகு, தால் ஏரியை சுற்றி வருகிறோம். பதினெட்டாவது படித்துறையிலிருந்து இருபத்தி இரண்டாவது படித்துறை வரை தால் ஏரி சுத்தமான நீருடன் ஜொலிக்கிறது. இங்குதான் நீர் விளையாட்டுகள் நடக்குமாம். இங்குதான் ஜெமினி கணேசன் தேனிலவில் ஸ்கேட்டிங் செது கொண்டே டூயட் பாடுவார். சுற்றிலும் மலைகள்... மாலைத் தென்றல். மறுபடியும்

அங்கு ஒரு மிதக்கும் தோட்டம். இதை விட வேறென்ன வேண்டும்? இதுதான் உண்மை யானதால் ஏரியின் கவின்மிகு காட்சி.

நான்காவது நாள் சோன்மார்க். இதுவும் பனி போர்த்திய இடம்தான். குல்மார்க் பகுதிக்கும் இதற்கும் ஒரே வித்தியாசம். இது மலை மேல் இல்லை. ஒரே தரை பகுதிதான். ஆனால், இன்னும் ரம்மியமாக உள்ளது. மலைகளின் அடிவாரத்தின் அருகில் நிறுத்துகிறார்கள். மலைகளின் மேல் ஐஸ் க்ரீமையும் பாலையும்,வெண்ணெயும் கலந்து ஊற்றினாற்போல் இருக்கிறது. ‘அப்படியே வழித்தெடுக்கலாமா?’ என்று தோன்றுகிறது. பனி மேல் நடந்து கொஞ்ச தூரம் செல்ல முடிகிறது. அப்படியே குதிரை மேல் பவனி வருகிறோம். ஸ்கேட்டிங் கூட செயலாம்.

ஐந்தாம் நாள் பஹல்கம். மிகவும் இயற்கை எழில் கொஞ்சும் பகுதி. ‘மேப்பர்களின் பள்ளத் தாக்கு’ என்று பொருளாம். வழியில் அவந்திபுரா கோயில் இடிபாடுகள். பின்னர் குங்குமப்பூ வயல்கள். அசலான குங்குமப்பூ கிடைக்கிறது.

அடுத்த நாள் - சண்டன்வடி, பெய்தாப் பள்ளத்தாக்கு. சந்தனவாடி அமர்நாத் யாத்திரை யின் ஆரம்ப இடமான அங்கேயும் பனி வழிந்தோடும் மலைச் சரிவுகள். பெதாப் பள்ளத் தாக்குதான் பசுமை நிறைந்த அருமை யான இடம். அந்த பெயருள்ள இந்தி படம் எடுக்கப்பட்டுள்ளதால் அதே பெயர். நதிக்கு அருகேயே பச்சை பசேலென தோட்டம். பின்னணியில் மலைகள். அடுத்தது, அறு பள்ளத்தாக்கு. பசுமையான புல்வெளிகளுடன் காணப்படும் இந்தப் பள்ளத்தாக்கு இயற்கையின் மடியில் சில அமைதியான மணி நேரங்களை செலவிட ஒரு அருமையான இடம். பள்ளத் தாக்கு மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு அழகிய இடங்களைக் காண போனி சவாரிகள் உள்ளன. பசுமையான புல்வெளிகளுக்கும், அழகிய ஏரிகளுக்கும், மின்னும் நீரோடைகளுக்கும் பெயர் போன இடம். இங்கு வரும் இயற்கை பிரியர்களுக்கு இது ஒரு சொர்க்கபுரி. இன்னும் நிறைய இடங்கள் பஹல்கமில் காண உள்ளன. மறுமுறை வரும்போது காண்போம்.

இங்கு நாங்கள் தங்கிய மவுண்ட் வியு ஹோட்டல்தான் மிகவும் அருமையானது. அருமையான கவனிப்பு. சாப்பாடு.

மறு நாள் காலை நான்கு மணிக்கு எழுந்து ஐந்து மணிக்குப் புறப்பட்டு விட்டோம். காலை 11 மணிக்கு விமானம். ஏர்போர்ட்டிற்கு 3 மணி நேரப் பயணம். ஆனால், 2 கி.மீ. முன்னதாகவே நிறுத்திவிடுகிறார்கள். பாதுகாப்பு சோதனை என்று ஒரு மணி நேரம் நிற்க வைத்து விடு

கிறார்கள். மறுபடியும் வண்டியில் போ விமான நிலையத்தில் இறங்க வேண்டும். விமானம் கிளம்பும்போது மனதில் ஒரு நெருடல். ஏதோ ஒன்றைத் தொலைத்து

விட்டதைப் போன்ற உணர்வு. எதை என்றுதான் புரியவில்லை. ஏன் என்று தெரியவில்லை.

சில தகவல்கள்:

பயணம்: பெரிய பெரிய நிறுவனங்கள் நடத் தும் குரூப் டூர் மூலமாகச் செல்லலாம். ஆனால், நினைத்த இடத்தில், நினைத்த நேரம் செலவிட முடியாது. தனிப்பயனாக்கப்பட்ட சுற்றுலாப் பயணம் (customised tour)மூலமாகச் செல்லலாம். கூடவே டூர் மேனேஜர் வர மாட்டார். ஆனால், நமக்கென்று எல்லாமும் பிரத்யேகமாக இருக்கும். இதில் டிரைவர்தான் கைடு. தைரியமும் சாமர்த்தியமும்தான் நண்பர்கள். இந்தி தெரிந்தால் கை கொடுக்கும். நாங்கள் சென்றது SOTC மற்றும் தாமஸ் குக் நிறுவனங்கள் நடத்திய டூர். ஏற்பாடு செய்திருந்த வண்டி மிகவும் சுமார். ஒரு இருக்கை உடைந்தே போயிருந்தது. மற்றொரு வண்டியில் ஏறுவதற்கு பிடி இல்லை. காலை வைப்பதற்கு இடமும் கூட சரியாக இல்லை.

பயண அனுபவம் பெற்றவர்கள் தானாகவே எல்லாவற்றையும் ஏற்பாடு செதுகொண்டு போகலாம். சற்று சிரமப்பட வேண்டி

யிருக்கும். ஆனால், இதில் நல்ல பலனுண்டு.

உணவு: அசைவர்கள் கவலைப்பட வேண் டியதில்லை. நன்றாக செலவழித்தால் ருசியான முகலாய உணவே கிடைக்கும். சப்பாத்தி, தால் எனப்படும் பருப்பு, காகறிகள் என்று வகை படுத்திக் கொள்ளுங்கள். காஷ்மீரில் கவலை யின்றி திரியலாம். மாறாக தோசைதான் வேண்டும், இட்லிதான் வேண்டும் என்றால் கஷ்டம்தான்.

போக்குவரத்து: கொஞ்சம் அதிகப்படிதான். ஆட்டோகாரரே 10 கி.மீ.சுற்றுவதற்கு ஆயிரம் ரூபா கேட்கிறார். இங்கு பேரம் பேசித்தான் தீர வேண்டும். குறைக்கவும் செகிறார்கள். பொது வாகவே, இங்கு வாழும் மக்கள் உதவும் மனப்பான்மை கொண்டவர்கள். நமக்குத்தான் பார்க்க பயமாக இருக்கிறது.

எந்த வழியாகச் செல்வது?

ஜம்மு வரைக்கும் ரயிலில் செல்லலாம். பிறகு 12 மணி நேரம் தரை வழியாகப் பயணம். ஆனால், போவதற்குள் பாதி தெம்பு போய்விடும். ஆதலால், பணம் சேர்த்துக்கொண்டு இங்கிருந்து ஆகாய மார்க்கமாகச் செல்லவும். தூரம் கிட்டத்தட்ட 4000 கி.மீ. அல்லது டில்லி யிலிருந்தாவது விமானம் மூலம் ஸ்ரீநகர் செல்லவும். இங்கே போஸ்ட் பைட் சிம்கள் (ணீணிண்ணா ணீச்டிஞீ குஐ–)மட்டும்தான் வேலை செயும்.

எப்போது செல்லலாம்?: ‘அவ்வளவாகப் பனி வேண்டாம்; இயற்கை அழகுதான் வேண்டும்’ என்பவர்கள் ஜூன் அல்லது ஜூலை மாதம் செல்லலாம். வழி முழுதும் மலர் தூவி

இயற்கை வரவேற்கும். ஆப்பிள் மரங்கள் பழுத்துக் குலுங்கும். ‘பனிதான் வேண்டும்’ என்பவர்கள் பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் முதல் வாரம் செல்லலாம்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :