பசியாற்றும் பணியில்...


சந்திரமௌலிமுற்பகல் சுமார் பதினொரு மணி இருக்கும். மதுரை, பழங்காநத்தம் பகுதியில் ஒரு பிரதான சாலை. அதில் ஒரு பஸ் நிறுத்தம். அதற்கு எதிரே ஒரு மரத்தடி. அங்கே, ஒரு மேஜை போடப்பட்டிருக்கிறது. அதன் மேல் வரிசையாக சாப்பாட்டுப் பொட்டலங்கள். பக்கத்தில் தண்ணீர் பாட்டல். அங்கே வைக்கப் பட்டுள்ள சின்ன பேனரில் எழுதி வைக்கப்பட்டுள்ள வாசகம் என்ன தெரியுமா? ‘பசிக்கிறதா? எடுத்துக்கொள்ளுங்கள்.’ அதன் கீழே எழுதப் பட்டிருப்பது : தேவைக்கு ஏற்ப மட்டும் எடுத் துக் கொள்ளுங்கள்; உணவை வீணாக்க வேண்டாம்."

சிறிது நேரத்தில் பஸ் ஸ்டாப்பில் ஒரு பஸ் வந்து நிற்கிறது. அதிலிருந்து பத்து, பதினைந்து பெண்கள் இறங்குகிறார்கள். வெயிலில் வந்து இறங்கிய அவர்களுக்கு அங்கு வைக்கப்பட் டிருக்கும் உணவுப் பொட்டலங்களைப் பார்த்த வுடன் இனிய ஆச்சர்யம். ‘தங்களுடைய தேவையை அறிந்து யாரோ சாப்பாடு கொடுக் கிறார்களே!’ என்ற சந்தோஷம். ஆளுக்கு ஒரு பொட்டலம் எடுத்துக்கொண்டு அங்கேயே பிரித்து சாப்பிட ஆரம்பிக்கிறார்கள். சாப்பிட்டு முடித்தவுடன், பாட்டிலைத் திறந்து

தண்ணீரைக் குடித்துவிட்டு, வீட்டைப் பார்க்கச் செல்கிறார்கள். பசித்த நேரத்தில் உணவு கிடைத்து, வயிறார சாப்பிட்ட அந்தப் பெண்களின் மன நிம்மதியை, சந்தோஷத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

‘படிக்கட்டுகள்’ என்ற தன்னார்வத் தொண்டு அமைப்பின் மூலமாக இப்படி பசித்த வயிற்றுக்கு உணவு இடும் நல்ல காரியத்தை செதுகொண்டிருப்பவர்கள் மதுரையைச்

சேர்ந்த கிஷோர்குமார், சக்தி விவேகானந்தன், சந்தோஷ் என்ற சில இளைஞர்கள்தான்.

கிஷோர்குமார் : மதுரை, சேது இன்ஸ்டி டியூட் ஆஃப் டெக்னாலஜியில் 2012ஆம் ஆண்டு பேட்ச் மாணவர்கள் நாங்கள். படிக்கும் போதே, எங்களைப் போல சமூகத் தொண்டில் ஆர்வம் கொண்ட சக மாணவர்களோடு சேர்ந்து ‘படிக்கட்டுகள்’ என்ற தொண்டு அமைப்பை ஆரம்பித்தோம். படிக்கிற காலத்தில், அதிக பணச் செலவு இல்லாத சமூக நலத் தொண்டுகளில் எங்களை ஈடுபடுத்திக் கொண்டோம். ஆதரவற்ற சிறுவர் இல்லம், முதியோர் இல்லம் போன்றவற்றுக்குச் சென்று அங்குள்ளவர் களுடன் நேரம் செலவிடுவது, அவர்களுக்கு

சின்னச்சின்ன உதவிகள் செய்வது என்று சேவைகள் செதோம். மனநலம் குன்றியவர்களுக்கான இல்லங்களுக்குச் சென்று, ‘அவர்கள் தங்கள் வேலைகளைத் தாங்களே எப்படி கவனித்துக்கொள்வது’ என்று சொல்லிக் கொடுத்தோம். படிப்பை முடித்துவிட்டு, வேலையில் சேர்ந்து, சம்பாதிக்க ஆரம்பித்தவுடன், ஒவ்வொருவரும் தங்கள் வசதிக்கேற்ப ஐநூறு, ஆயிரம் ரூபா என்று நன்கொடை கொடுக்க, அதைச் சேகரித்து, அதிலிருந்து ஏழை மாணவர்களுக்கு பள்ளி, கல்லூரி கட்டணம் கட்டுவதற்கு உதவி என்பது போன்ற சிறு சிறு செலவுகளை மேற்கொண்டு உதவினோம். அதன் பயனாக, குடும்பச் சூழ்நிலை காரணமாக, படிப்பை நிறுத்தவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்ட மாணவர்கள், தங்கள் படிப்பை தொடர முடிந்தது. 2015 முதல் கடந்த ஆறேழு வருடங்களில் சுமார் 500 மாணவர்கள் இப்படிப் பயன் பெற்றிருக் கிறார்கள்.

2015ல் சென்னையில் வெள்ளம் வந்தபோது, நாங்கள் முடிந்த அளவுக்குப் பணம் போட்டு, அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கொண்ட சிறு மூட்டைகளை சில நூறு பாதிக்கப்பட்ட குடும் பங்களுக்கு வினியோகித்தோம்.

கொரோனா தொற்று காரணமாக அறிவிக்கப் பட்ட முழு அடைப்பில் கூலித் தொழிலாளர்கள் பலர் வேலை இழந்து, அவர்களின் வாழ் வாதாரம் பெரும் பாதிப்புக்குள்ளானது. மதுரை யிலும், கடலூரிலும் அதுபோல பாதிக் கப்பட்ட குடும்பங்களுக்கு மாதாந்திர மளிகை சாமான்களைக் கொடுத்து வரு கிறோம். இதுவரை சுமார் 600 குடும் பங்களுக்குக் கொடுத்திருக்கிறோம். எங்களிடம் இருந்து உதவி தேவைப் படுகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. ஆனால், அவர்கள் எல்லோருக்கும் உதவி செய ஆசை இருந்தாலும், எங்களுக்கு உதவி செயும் அளவுக்கு வசதி இல்லை."

பசித்தவர்களுக்கு இலவச சாப்பாடு என்ற எண்ணம் எப்படி வந்தது?

கொரோனாவின் முதல் அலையை விட இரண்டாவது அலையின் பாதிப்பு பல மடங்கு. கொரோனா தாக்குதலுக்குள்ளாகி, இறந்த வர்களின் குடும்பங்கள் மிகுந்த கஷ்டத்துக்குள்ளாவது ஒரு பக்கம் என்றால், ஏற்கெனவே வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏழைகள், இப்போது செவதறியாமல் திகைத்து நிற்கிறார் கள். அவர்களின் பசியைப் போக்க எங்களால் ஏதாவது செய முடியுமா? என்று யோசித்ததன் பலன்தான் இந்தத் திட்டம். இப்போதைக்கு தினம் சுமார் 150 உணவுப் பொட்டலங்களை தெரிந்த கேட்ரிங் சர்வீஸ்காரர் ஒருவர் மூலமாக தயாரித்து, பகலில் வினியோகம் செது வரு கிறோம். பகல் இரண்டு மணி வரை, பசித்தவர் கள் தாங்களாகவே எடுத்துக்கொள்ள வசதியாக மேஜையில் வைத்திருக்கிறோம்.

அதன்பின் மீதமிருக்கும் உணவுப் பொட்டலங்களை எடுத்துக்கொண்டு ஸ்கூட்டரில் அக்கம் பக்கத்தில் உள்ள சில பகுதிகளுக்குச் சென்று, பசித்தவர் களைத் தேடிப் பிடித்து வினியோகித்துவிட்டு வருகிறோம்.

இப்போதுள்ள நிதி நிலைமையின் படி சுமார் முப்பது நாட்களுக்கு எங்களால் இந்த உதவியைச் செய்ய முடியும். மதுரையில் உள்ள திருநகர் நண்பர்கள், இன்னும் இதர அமைப்புகளைச் சேர்ந்த நண்பர் களும் எங்களுக்கு உதவி செகிறார்கள்.

எத்தனையோ பேர் உணவுப் பொட்டலத்தை எடுத்துச் சாப்பிட்டுவிட்டு, மனதார எங்களை வாழ்த்திவிட்டுப் போகிறார்கள். ஆனால் ஒரு நாள் ஒரு முதியவர், ‘நான் வீட்டுலயே சாப்பிட்டாச்சு! என்னால முடிஞ்சது இந்த

அம்பது ரூபா குடுக்கறேன். அதை வெச்சி ரெண்டு பேருக்கு சாப்பாடு போடுங்க தம்பி!’ என்று சொல்லி பணம் கொடுத்ததை எங்களால் மறக்கவே முடியாது" என்று நெகிழ்ச்சியோடு கூறுகிறார் கிஷோர்குமார்.

(தொடர்புக்கு : கிஷோர்குமார் 9677983570)

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :