ஒரு வார்த்தை!


அனுஷா நடராஜன்சமீபத்தில் டீவியை பார்த்தபோது, ‘பக்’கென்று இருந்தது. அதுவும் முழு ஊரடங்கு என்று அறிவித்த மறுநாள். காய்கறி சந்தைகளிலும், மீன் மார்க்கெட்டிலும் பெண்கள் கூட்டம் கூட்டமாக நெருக்கி அடித்துக் கொண்டு பையும் கையுமாக அலைவதைக் கண்ட போது, ‘என்னம்மா... இப்படிப் பண்ணுறீங் களேம்மா?’ என்று கடுப்பேறியது.

ஒரு திருமணத்துக்கு கறிச்சோறு மொய் விருந்து போட்டார்கள். 200 பேர் வரை வந்து கலந்து கொண்டதில். மாப்பிள்ளை வீட்டார் பலருக்கும் நோத்தொற்று உறுதியாகி உள்ளது.

கொரோனா கோரப் பசியுடன் உலவிக் கொண்டிருக்கும் காலத்தில் கறி விருந்து ரொம்ப முக்கியம். இப்படி கும்பல் போட்டு அலைந்து திரிந்து விட்டு மறு வாரம் ஆக்ஸிஜன் படுக்கை தேடி ஆம்புலன்ஸில் அலைவதுதான் உங்கள் நோக்கமா?

* ஆண்கள் அப்படித்தான் கெத்து காட்டுவார்கள். அவர்களை அதட்டி அடக்கி வைக்க வேண்டியது பெண்களின் பொறுப்பு! அதை விட்டு நாமும் கூட்டு சேர்ந்து கும்மி அடித்தால்... அபாயம்... மிக அருகில்.

* மிக மிக அவசியம் இன்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.

* தரமான மாஸ்க் அணியுங்கள். டபுள் மாஸ்க் ரொம்ப பெஸ்ட்!

* தடுப்பூசி போடத் தயங்காதீர்கள்! தடுப்பூசியே தீர்வு என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டு பிறர்க் கும் புரிய வைத்து விழிப்புணர்வோடு செயல்படுங்கள்.

* இந்த இரண்டாவது அலையில் இளைஞர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்பதால் வண்டி சாவியைப் பிடுங்கிக் கொள்ளுங்கள்.

* கல்யாணம், காதுகுத்து, படையல்னு யார் அழைத்தாலும் ‘நோ’ சொல்லுங்கள். காரணம் இதுக்கு மேல தாங்க எந்த அரசாங்கத்துக்கும் சக்தி இல்லை.

*முன்களப் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், காவல் துறையினர். ஆம்புலன்ஸ் உதவியாளர்கள் என எல்லோரும் செத்து மடிந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களாலும் எவ்வளவுதான் செய்ய முடியும்? சமாளிக்க முடியும்?

* அரசு இயந்திரம் திண்டாடிக் கொண்டிருக் கிறது. அவர்களுக்கு மேலும் மேலும் சுமை கூட்டா மல் இருக்க பெண்களாகிய நாம்தான் முன் உதாரண மாக இருந்து உதவ வேண்டும். சுயக் கட்டுப்பாடு, அதீதப் பொறுப்புணர்வுடன் கூடிய சுய பாதுகாப்பு இவை இரண்டும்தான் இப்போதைய தேவை.

* ஒவ்வொரு பெண் ணும் வீட்டைக் காத் தாலே, நாடு தன்னைத் தானே காத்துக் கொள்ளும்.

அப்படிச் செய்ய வேண்டியது நம் சமுதாயக் கடமையும் கூட!!

Be a family warrior...

It`s the need of the hour...

Post Comment

Post Comment