மக்கள் பேராதரவு பெற்ற ஆவின்

ஜூன் 01 உலக பால் தினம்
பேட்டி : எஸ்.சந்திரமௌலிஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பினால் ஆண்டு தோறும் ஜூன் மாதம், முதல் தேதி, ‘உலக பால் தினம்’ கொண்டாடப்படுகிறது. சர்வதேச அளவில் பாலின் முக்கியத்துவத்தை உணர்த்துவதே உலக பால் தினத்தின் நோக்கம்.

தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற முதல் நாளே ஆவின் பால் விலையைக் குறைக்கும் உத்தரவில் கையெழுத்திட்டிருக்கும் பின்னணியில், உலக பால் தினத்தை ஒட்டி, தமிழ்நாடு பால் வளத்துறை அமைச்சர் எஸ்.எம்.நாசரை சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்தில் சந்தித்தோம். அவர் நமக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியிலிருந்து...

ஆட்சிக்கு வந்ததுமே, பால் விலையைக் குறைத்து, மக்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டீர்கள் போலிருக்கிறதே?

தமிழக மக்கள் அனைவருக்கும் உலக பால் தின வாழ்த்துக்களை முதலில் சொல்லிக் கொள்கிறேன். தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை யிலேயே தளபதி (முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்) ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால், பால் விலையை லிட்டருக்கு மூன்று ரூபா குறைப்போம்’ என்று வாக்குறுதி அளித்திருந்தார். மக்களின் அமோக ஆதரவுடன் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் முதல் நாளே அவர் ஆவின் பால் விலை குறைப்பு உத்தரவில் கையெழுத்திட்டு, மக்கள் வயிற்றில் பால் வார்த்திருக்கிறார் என்றால் அது சற்றும் மிகை இல்லை. சுமார் 92 லட்சம் ஆவின் வாடிக்கையாளர்கள், இந்த விலை குறைப்பின் மூலமாகப் பயன் அடைந்திருக்கிறார்கள். இதற்கான அனைத்து பாராட்டுக்களும் நமது முதலமைச்சரையே சேரும்.

தேர்தல் வாக்குறுதியின்படி, லிட்டருக்கு மூன்று ரூபா வரை விலை குறைப்பு செதிருக்கிறீர்கள். ஆனால், பால் உற்பத்தியாளர்களுக்கு வழங் கப்படும் கொள்முதல் விலையைக் குறைக்கவில்லை; பழைய கொள்முதல் விலையே தொடர்கிறது. இந்த விலை குறைப்பு நடவடிக்கையின் காரணமாக ஆவின் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு சுமார் 270 கோடி ரூபா வரை வருவா இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதனை ஈடு செது, லாபம் ஈட்டுவதற்கு என்ன செயப்போகிறீர்கள்?

நீங்கள் சொல்வது போல, விலை குறைப்பு காரணமாக ரூபா 270 கோடி வருவா இழப்பு ஏற்படும் என்பது சரிதான்! ஆனால், அதை சரிகட்டி, அதிக அளவில் லாபம் ஈட்டுவதற்கும் திட்டங்கள் வைத்திருக்கிறோம். தற்போது, ஆவின் நிறுவனம், தமிழகமெங்குமாக 4.60 லட்சம் பால் உற்பத்தி யாளர்களிடம் இருந்து, நாளொன்றுக்கு 35 லட்சம் லிட்டர் பாலை கொள்முதல் செகிறது. இதில், 25 லட்சம் லிட்டர் பாலை நாள்தோறும் தமிழ்நாடு முழுவதும் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செகிறது. அகில இந்திய அளவில்

கூட்டுறவு அமைப்பின் மூலமாக பால் உற்பத்தி யில் நான்காவது இடத்தில் இருக்கிறது தமிழ்நாடு. பால் உற்பத்தியாளர்களுக்கு கால்நடை மருத்துவ வசதி, செயற்கை முறை கருவூட்டல், மானிய விலையில் அடர் தீவனம், தாது உப்புக் கலவை, பசுந்தீவனம் மற்றும் இதர தீவனங்கள், பால் உற்பத்தியாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகள் ஆகியவை வழங்கப்படுகின்றன. இதன் மூலமாக, தமிழ்நாட்டின் பால் உற்பத்தியை மேலும் அதிகரிக்க வாப்புகள் உள்ளன.

சொல்லப்போனால், பால் விலை குறைப்பின் பயனாக, ஆவின் பால் விற்பனை தினமும் சுமார் ஒரு லட்சம் லிட்டர் அளவுக்கு அதிகரித்துள்ளது.

உற்பத்தியை பெருக்குவது ஒரு வழி என்றால், விற்பனையை பெருக்குவது இன்னொரு வழி. இன்றைக்கு, ஆவின் நிறுவனம், பால் விற்பனையில் தமிழகத் தில் முன்னோடியாகத் திகழ்கிறது. பால் தவிர, வெண்ணெ, நெ, பால் கோவா முதலிய இனிப்பு வகைகள், மோர், லஸ்ஸி போன்ற பானங்கள், ஐஸ்கிரீம் வகைகள் என்று பாலில் இருந்து பல்வேறு மதிப்பு கூட்டிய பொருட்களும் தயாரிக்கப்பட்டு, விற்பனை செயப்படுகிறது. மேலும், மக்களின் தேவை அறிந்து அதற்கேற்ப பொருட்களை உற்பத்தி செகிறோம். உதாரணமாக, பசு நெ. தரமான பசு நெக்கு மக்கள் மத்தியில் தேவை உள்ளது என்பதை அறிந்து, ஆவின் அறிமுகப்படுத்தியுள்ள பசு நெக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. மற்ற அறிமுகங்களான குக்கீஸ், முந்திரி கேக் போன்றவற்றுக்கும் நல்ல வரவேற்பு.

புதிதாக சுமார் 320 ஆவின் பாலகங்கள் துவங்க அனுமதி வழங்கி இருக்கிறோம். கொரோனா பொது முடக்கம் காரணமாக அது சற்று தாமதமாகிறது.

சென்னையின் சில மெட்ரோ ரயில் நிலையங் களிலும் ஆவின் பாலகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. காலத்துக்கேற்ப மாற்றங்களை ஏற்று, செயல்படுத்தவும்

நடவடிக்கைகள் எடுக் கிறோம். ஸொமட்டோ, டன்ஸோ போன்ற நிறுவனங்களோடு ஆவின் பொருட் களை இல்லங்களுக்கு விற்பனை மற்றும் வினியோகம் செய ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்டுள்ளது. இந்த ஏற்பாட்டின் கீழ் ஆவின் பொருட்கள் சிரமமின்றி கிடைப்பதாக பொதுமக்கள் கூறுகிறார்கள்.

குஜராத்தின் அமுல் தயாரிப்புகள் நாடெங்கும் கிடைக்கின்றனவே! அதுபோல ஆவின் பொருட் களை அண்டை மாநிலங்களிலும் விற்பனை செய முயற்சி எடுக்கப்படுமா?

அதற்கான பிரத்யேகத் திட்டம் வைத்திருக் கிறோம். உங்களுக்கு இன்னொரு விஷயம் தெரியுமா? ஆவின் பால், 2017ல் சிங்கப்பூரிலும், 2018ல் ஹாங்காங்கிலும், 2019ல் கத்தாரிலும், ஒரு லிட்டர் பாக்கெட்டுகள் அறிமுகப்படுத்தப் பட்டன. இதுவரை, பல்வேறு நாடுகளுக்குமாக 373 லட்சம் ரூபா மதிப்புள்ள பால் மற்றும் நெ ஏற்றுமதி செயப்பட்டுள்ளது. வரும் நாட் களில் இதர மாநிலங்களிலும், அயல் நாடு களிலும் ஆவின் பொருட்களின் விற்பனைக்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

கடந்த காலத்தில், ஆவின் பால் லாரிகள் வழியில் நிறுத்தப்பட்டு, பாலில் தண்ணீர் கலந்த ஊழல் விவகாரம், ஆவின் பெயருக்கே களங்கத்தை ஏற்படுத்தி, மக்களின் நம்பகத் தன்மையை பாதித்தது. ஆவினின் இமேஜை உயர்த்த, என்ன செயப்போகிறீர்கள்?

சரியான மாலுமி இல்லாத கப்பலாக கடந்த காலம் இருந்ததால், அதுபோன்ற தவறுகள் நிகழ்ந்தன. இப்போது, தமிழ்நாட்டு மக்கள் ஒரு திறமையான மாலுமியின் கையில் தமிழ் நாட்டை ஒப்படைத்திருக்கிறார்கள். ‘ஆவின்’ என்ற பெயருக்கு நல்ல மரியாதை இருக்கிறது. அந்த நற்பெயருக்கு எந்தவிதமான களங்கமும் ஏற்படாமல் பார்த்துக்கொள்வோம் என்பதை நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

பால்வளத்துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர்

ஆவடியைச் சேர்ந்தவர். எளிய குடும்பப் பின்னணி கொண்டவர். திருவள்ளூர் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் பொறுப்பு வகிப் பவர். தீவிர தி.மு.க. ஆதரவு குடும்பத்தைச் சேர்ந்த இவர், 1967ல் துவக்கப்பள்ளியில் படிக்கிற காலத்திலேயே, அந்தக் காலத்து பூந்தமல்லி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக பக்தவச்சலம் போட்டியிட்ட போது, அவரை எதிர்த்து நின்ற ராஜரத்தினம் என்ற தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக தன் வயதை ஒத்த சிறுவர்களைக் கூட்டிக்கொண்டு தெருத் தெருவாக சென்று, ‘உதயசூரியனுக்கு ஓட்டுப் போடுங்கள்!’ என்று கேட்டவர். இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டு, பத்தாண்டுகள் ஆவடி நகராட்சி தலைவராகவும், இரண்டு முறை மாவட்ட அளவில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத் தலைவராக இருந்தி ருக்கிறார்.

இரண்டு முறை சட்டசபை தேர்தலில் போட்டியிட்டிருக்கும் இவர், கடந்த முறை சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததையடுத்து, தொடுத்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த முறை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பாண்டிய ராஜனை வென்று, சட்டமன்ற உறுப்பினரான கையோடு, அமைச்சரவையிலும் இடம் பிடித்திருக்கிறார். இவருக்கு பாத்திமா கனி என்ற மனைவியும், ஆசிம் ராஜா என்ற மகனும் உள்ளனர்.

உலக பால் தினம்!

ஐ.நா.சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் அறிவிப்பின்படி 2001ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஜூன் மாதம், முதல் தேதி உலக பால் தினமாகக் கொண்டாடப்படுகிறது. பால் மற்றும் பால்பண்ணைத் தொழிலின் மேம்பாட்டுக்காகவும், மக்கள் மத்தியில் ஒரு உணவுப்பொருளாக பாலின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காகவும் இந்த

நடவடிக்கை எடுக்கப்பட்டது. பால் மற்றும் பால் பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்கவும், நாட்டின் பொருளாதார

வளர்ச்சியில் பால் பொருட்களின் பங்களிப்பை அதிகரிக்கவும் 2016 முதல் நாற்பதுக்கும் மேற்பட்ட உலக நாடுகளில் உலக பால் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை வலியுறுத்தும் வகையில் மாநாடுகள், கருத்தரங்குகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், பால் பண்ணைகளுக்குச் சென்று பார்வையிடுதல், விளையாட்டுப் போட்டிகள் என்று பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :