ஐந்தறிவா? அதற்கும் மேலே...


ஜி.எஸ்.எஸ்.கிளி ஜோதிடத்தை நம்புபவர்கள் இங்கு கணிசமாக உண்டு. வருங் காலத்தை கணிப்பதில் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் அதிகப்படியான சக்தி உண்டு என்பதை உலகெங்கும் பலரும் நம்புகிறார்கள். மெக்சிகோவில் குருவி இனத்தைச் சேர்ந்த, ‘கானரி’ என்ற பறவையை ஜோதிடத்திற்குப் பயன்படுத்துகிறார்கள்.

நிலநடுக்கத்திற்கு முன் சேவல்கள், குதிரைகள், பன்றிகள், மீன்கள் ஆகியவை மிகவும் வித்தியாசமாக நடந்து கொள்கின்றன என்பதை விஞ்ஞானிகளும் இன்று ஒப்புக்கொள்கிறார்கள்.

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு பழங்குடி இனத்தின் பெயர் டோகோன். நைஜர் நதியின் தெற்குப் புறம் நான்கு நூற்றாண்டுகளாக வசித்து வருகிறார்கள் இந்த இனத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களது முக்கியமான தொழில் வருங்காலத்தை உரைப்பதுதான். இதற்காக அவர்கள் கடைப்பிடிக்கும் வழிமுறை விசித்திர மானது.

தங்கள் இனத்தின் தேவதைகளாகக் கருதப்படும் சில வகை விலங்குகளின் மூலம் வருங்காலத்தை உணர முடியும் என்கிற ஆழமான நம்பிக்கை இவர்களுக்கு உண்டு.

மணற்பாங்கான ஓர் இடத்தில் பல்வேறு குறியீடுகளை கையினாலும் குச்சியைக் கொண்டும் வரைவார்கள். பின்பு பட்டாணி களை அங்கே வீசி எறிவார்கள். அவற்றைத் தின்பதற்காக இரவில் குள்ள நரிகள் அங்கு வரும்.

காலையில் எழுந்தவுடன் குள்ள நரிகளின் பாதங்கள், மணலின் மீது வரையப்பட்டிருந்த எந்தெந்த கட்டங்களில் எவ்வளவு ஆழமாகப் பதிந்திருந்தன என்பதைக் கொண்டு வருங்காலத்தை கணிக்கிறார்கள்.

விலங்குகளின் எச்சரிக்கைகளை அலட்சி யம் செதால், விபரீதம்தான் என்பதற்கு சாட்சியாக விளங்குகின்றன பல சரித்திர சம்பவங்கள்.

ரோம் நாட்டின் கடற்படைத் தளபதியாக விளங்கியவன் கிளாடியஸ். எதிரி நாட்டு கப்பலைச் சேர்ந்தவர்களோடு அடுத்த நாள் போர் புரிவதற்கு திட்டமிட்டான். அவனது கப்பலில் தெவாம்சம் பொருந்திய சில கோழிக் குஞ்சுகள் இருந்தன. அவை திடீரென உணவருந்த மறுத்து, ஓலமிட்டன. கோபமடைந்த தளபதி, ‘இந்தக் கோழிக்குஞ்சுகளை கடலில் தூக்கி எறியுங்கள்’ என்று கத்தி னான். அவனது ஆணை நிறைவேற்றப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக அதற்கு அடுத்த நாள் கடற்போரில் அவர் படை

படுதோல்வியுற்றது.

லண்டன் கோபுரத்தின் மேல் பரம்பரை பரம்பரையாக ஒரு பறவை குடும்பம் வசித்து வந்தது. அந்தப் பறவைகள் ஒருசேர

எப்போது அந்த இடத்தைவிட்டுப் பறந்து செல்கின்றனவோ, அப்போது இங்கிலாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த யாராவது ஒருவர் இறந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை நிலவியது.

கிப்ரால்டர் என்ற பகுதி பிரிட்டனின் பிடியில் அகப்பட்டது. ‘நம் ஊரில் உள்ள பார்பரி என்ற வகையைச் சேர்ந்த குரங்குகள், எப்போது தானாக இந்தப் பகுதியை விட்டு வெளியேறுகின்றவோ, அப்போதுதான் பிரிட்டனின் பிடியிலிருந்து நம் நாட்டுக்கு விடுதலை கிடைக்கும்’ என்றார்கள் அந்த ஊர் ஜோதிடர்கள். அது போலவே நடந்தது!

நம்மிடம் கூட விலங்குகளைப் பற்றிய பல நம்பிக்கைகள் உண்டே. நாய் ஊளை

யிட்டால் அமங்கலம். பல்லி பாதத்தில் விழுந்தால் பயணம். பூனை குறுக்கே போனால் போகிற காரியம் விளங்காது.

இதையெல்லாம் ஒப்புக்கொள்ளாத

விஞ்ஞானிகள் கூட விலங்குகளின் சில அற்புத மான ஆற்றல்களை ஒப்புக்கொள்கிறார்கள்.

நோவாப்பட்ட தனது முதலாளியின் இறப்பை நாய்களால் முன்னதாகவே அறிந்துகொள்ள முடியும் என்பார்கள். ‘இறப்பதற்கு முன் தன் முதலாளியின் உடலில் ஏற்படும்

ரசாயன மாற்றங்களை அறியும் அளவுக்கு தீர்க்கமான மோப்ப சக்தி நாய்களுக்கு உண்டு என்பதுதான் இதற்குக் காரணம்’ என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

ரோம் நாட்டில் தாவரங்களுக்குக் கூட வருங்காலத்தை கூறும் சக்தி இருப்பதாக நம்பினார்கள். சம்பந்தப்பட்டவரை அழைத்து புன்னை இலைகளை நெருப்பில் போடச் செல்வார்கள். அந்த இலைகள் படபடவென வெடித்தால், அவரது தோஷம் நீங்கி விட்ட தாகப் பொருள். அவை சத்தமில்லாமல் எரிந்து சாம்பலானால் சம்பந்தப்பட்டவருக்கு வருங் காலம் சுகமாக இருக்காது என்பது நம்பிக்கை. நம் நாட்டில் கூட திருஷ்டி கழித்த பொருளை தீயில் வீசும்போது, ‘பட்பட்’டென சத்தம் வந்தால் திருஷ்டி கழிந்துவிட்டது என்று பெரியவர்கள் கூறக் கேட்டிருப்போம்.

ஆக, நம்பிக்கைக்கும் மூட நம்பிக்கைக்கும் இடையே உள்ள கோடு ஊசலாடிக் கொண்டிருக் கிறது; ஐந்தறிவுக்கும் ஆறறிவுக்கும் இடையே உள்ள கோடு போல!

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :