மதுரையில்... முன்னெச்சரிக்கை முழக்கம் மக்கள் நீட்டும் உதவிக்கரம்!


மதுரை ஆர்.கணேசன்கொரோனா பெருந்தொற்றின் தீவிர அலையிலிருந்து மக்களைக் காப்பாற்ற அரசு போராடுகிறது. மக்களும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அனுதினமும் போராடுகிறார்கள்.

மானுடத்தையும் வாழ்வாதாரத்தையும் பிடுங்கிக் கொண்ட கொரோனாவின் பிடியிலிருந்து மக்களை மீட்டெடுக்கும் மருத்துவர்களின் பணி போற்றத்தக்கது. அதே நேரம் தொற்றிலிருந்து மீண்டெழுந்தவர்கள் நோய் சவால்களை எதிர்கொள்வதற்கான மனோதைரியத்தை, வழிமுறைகளை மற்றவர்க்குக் கற்றுத் தருகிறார்கள்.

சக மனிதர்களும் மக்களுக்கு எந்தெந்த வகையில் உதவ முடியுமோ உதவிக் கொண்டிருக்கிறார்கள். தன்னலம் பாராது சேவைகளால் மனிதநேயத்தின் கரங்களை வலுவூட்டி வருகிறார்கள்.

மதுரை பக்கத்திலும் மருத்துவர்களின் முன்னெச்சரிக்கை முழக்கம் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. சமூக சேவைகளில் ஈடுபடுவர்களின் பற்பல நலப்பணிகளைப் பார்க்கலாம்! கொரோனா தொற்றிலிருந்து மீண்ட பெண்மணிகளின் தன்னம்பிக்கை நற்சொற்களால் அதைக் கேட்கலாம்! மதுரையைச் சுற்றி வருவோம் வாங்க!

டாக்டர் ஜே.எஸ்.பிரசன்னா கார்த்திக் எம்.டி., குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் என்ன சொல்றார்னு பார்ப்போம்...

இந்தத் தொற்று குழந்தைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துமா?

முதியோர்களைத் தாக்கும் அளவிற்கு குழந்தைகளைத் தாக்காது. முக்கியமாக, நுரையீரல் சம்பந்தப்பட்ட நோ அறிகுறிகளான சளி, மூச்சுத் திணறல் போன்றவை அவ்வளவு எளிதில் வராது. இதற்குக் காரணம் நிமோனியா, ஃபுளு, போன்ற தடுப்பு ஊசிகளை குழந்தைகளுக்கு உரிய நேரத்தில் போடுவதால்தான். ஒருவேளை சளி இருந்தால் குழந்தைகள் நல மருத்துவரை அணுகவும். அவர் பரிந்துரைக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்ளவும்.

கொரோனா பாசிட்டிவ் உள்ள தாமார்கள் குழந்தைகளுக்குப் பால் ஊட்டலாமா ?

தாய்மார்கள் முடிந்தவரை இரண்டு லேயர் மாஸ்க் போட்டுக்கொண்டும், கையுறை அணிந்து கொண்டும் பால் கொடுக்கலாம்.

குழந்தைகளுக்கு கொரோனா டெஸ்ட் எப்போது பார்க்க வேண்டும்?

குழந்தைகளுக்கு காச்சல், சளி, இருமல் போன்ற நுரை யீரல் சம்பந்தப்பட்ட பாதிப்பிற்கான அறிகுறிகள் இருந்தால் டெஸ்ட் எடுக்கலாம்.

அனைவரும் அவசியம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

டாக்டர் ரேவதி ஜானகிராம் மகப்பேறு மருத்துவர் (ஓய்வு), அரசு ராஜாஜி மருத்துவமனை, மதுரை.

கொரோனா இரண்டா வது அலை நம்மை மிகவும் மிரட்டிக் கொண்டிருக்கிறது. இந்தத் தொற்றைக் குணப் படுத்தும் சரியான மருந்து நடைமுறைக்கு வரும்வரை நாம்தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

புற்றுநோக்குகூட (கர்ப்பப்பை வாய் புற்று நோய்) தடுப்பூசி இருக்கிறது என்பது தெரியுமல்லவா? அம்மை, டைபாடு போன்ற தொற்றை எல்லாம் தடுப்பூசியினால் எவ்வளவு தூரம் தடுத்திருக்கிறோம்.

அதுபோல கொரோனாவுக்கு தடுப்பூசி கிடைத்தால் எவ்வளவு நல்லது என்றுதானே ஏங்கினோம். இப்போது இவ்வளவு விரைவில் கிடைத்தும் பயன்படுத்திக்கொள்ள என்ன தயக்கம்?

‘அது சரி, தடுப்பூசி போட்டுக்கொண்டால் கொரோனா வரவே வராதா?’ என்பதுதானே உங்கள் சந்தேகம்? வரும் வாப்பு மிக மிகக் குறைவு (0.05%). அப்படியே வந்தாலும் சீரியஸ் ஆகவோ, உயிர் போகும் அளவு ஆபத்தோ வராது.

கொரோனாவுக்கு தடுப்பூசி போட்டுக்கொண் டால் வேறு தடுப்பூசி எதுவும் போடக் கூடாதா?

தாராளமாகப் போடலாம். ‘இரண்டு வார இடைவெளி விட்டு தடுப்பூசி போட்டுக்கொண் டால் வீட்டு வேலை செயத் தடையாக இருக்குமோ’ என்ற கவலை பலருக்கும் இருக்கிறது.

அந்தக் கவலையே வேண்டாம். ஊசி போட்ட பின், அரை மணி நேர கண்காணிப்பில் இருந்துவிட்டு, பிறகு நார்மலாக வேலை செயலாம். நான் ஊசி போட்டு வந்த அன்றே ஒரு டெலிவரி கேஸ் பார்க்க நேர்ந்தது. எந்தப் பிரச்னையும் இல்லை.

பெண்கள் மாதவிடாயின்போதோ, முன்னதாகவோ, பின்னதாகவோ எப்போது வேண்டுமானாலும் இந்த ஊசியைப் போட்டு கொள்ளலாம். அதனால் பிளீடிங் அதிக மாகுமோ அல்லது ஊசியின் வீரியம் குறையுமோ என்ற பயம் வேண்டாம்.

ஒரு பெண் கேட்டார்... ‘கணவர் போட்ட அதே ஊசியைத்தான் நானும் போட்டுக்கொள்ள வேண்டுமா?’ என்று. தேவையில்லை. ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். முதல் ஊசி எதுவோ அதையேதான் இரண்டாவது முறையும் போட வேண்டும். 10 - 12 வார இடைவெளியில்.

கர்ப்பிணிகள், தாப்பால் கொடுக்கும் பெண்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?

முறையான ஆராச்சி முடிவுகளுக்காக காத்திருப்பதால் அரசு தற்சமயம் இவர்களை தடுப்பூசி பட்டியலில் சேர்க்கவில்லை. அரசு ஆணை வந்த பிறகு போட்டுக்கொள்ளலாம். அனைவரும் தடுப்பூசி போட்டும், முறையான வழிமுறைகளைப் பின்பற்றியும் வாழ்ந்தால், கொரோனாவை ஒழித்து விடலாம்.

இளம் மருத்துவக் குழுவினரின் இலவச கவுன்சிலிங்...

2019ஆம் ஆண்டில் தமது மருத்துவப் படிப்பை முடித்த, மதுரையைச் சார்ந்த இருபது இளம் மருத்துவர்கள் குழுமம், ‘வெல்பேர் கம்யூனிட்டி’யின் ஒரு அங்கமாக இணைந்து ‘விமோட்சனா’ மூலமாக கடந்த மாதம் முதல் மக்களுக்கு ஹெல்ப் லைன் வழியாக குறிப் பிட்ட நேரங்களில் இலவசமாக ‘கவுன்சிலிங்’ கொடுத்து வருகிறார்கள்.

ஒரு மாதத்தில் ஒரு நாளைக்கு நூற்றி ஐம்பது போன் கால் என்று பல்லாயிரக்கணக்கான அழைப்புகள் தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களிருந்தும் வருகின்றன.

ஒவ்வொரு அழைப்புகளிருந்தும் சம்பந்தப் பட்ட நோயாளிகள், அவர்களது டாக்டர் பரிந்துரைத்த மருந்து சீட்டு மற்றும் சி.டி, ஸ்கேன் ரிப்போர்ட் உள்ளிட்ட விவரங்களை, ‘வாட்ஸ்அப்’ வழியாகச் சொன்னால் அதை பார்த்துவிட்டு தகுந்த அறிவுரைகள் வழங்கப் படுகிறது.

மக்கள் சொல்லும் அறிகுறிகள் மற்றும் மருத்துவ ஆவணங்களை வைத்தும் கொரோனா அறிகுறி இருக்கிறதா? இல்லையா? என யூகித்து மருத்துவமனைக்குச் செல்லுமாறு அறிவுறுத்துகிறார்கள்.

இதனால், நோய் முற்றிய நிலையில் மருத்துவமனைக்குச் செல்வது தவிர்க்கப்படு கிறது. இவ்வாறு முன்னெச்சரிக்கையுடன் பல உயிர்களைக் காப்பாற்றி உதவிவரும் இளம் மருத்துவர் கள் பாராட்டுக்குரியவர்கள்!

ஆட்டோ ஓட்டுனரின் மனிதாபிமானம்...

மதுரை, பெத்தானியாபுரம் பகுதியைச் சேர்ந்த ஜஸ்டின்ராஜ் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைக் கடைபிடித்தும் தனது ஆட்டோவில் கொரோனா அறிகுறி உள்ளவர் களையும் நோ பாதித்த நோயாளிகளையும் ஆம்புலன்ஸ்க்காக காத்திருக்க வேண்டிய நிலையைத் தவிர்த்து இலவசமாக மருத்துவ மனைக்கு அழைத்துச் செல் கிறார்.

தற்போதைய சூழலில் நோயாளி கள் சிரமப்படுவதை பார்த்து நாமும் அவர்களுக்கு ஏதா வது உதவி செய்ய வேண்டும் என்ற

நோக்கத்துடன் கடந்த பதினைந்து நாட்களுக்கும் மேலாக பலரையும் அரசு மருத்துவ மனைகளுக்குக் கூட்டிச் செல்கிறேன். வயதான ஒருவர் என் காலில் விழுந்து நன்றி சொன்னார். அது என் மனதை மிகவும் பாதித்தது" என்றவர் தனது ஆட்டோவில் செல்போன் நம்பருடன் ‘கொரோனா நோயாளிகளுக்கு இலவசம்’ என்று எழுதியிருக்கிறார்.

என்னால் இயன்றது..."

மதுரை புறநகர், எஸ்.ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த திருமதி போதி லெட்சுமி மிகவும் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர். கொரோனா பற்றிய விழிப் புணர்வை தான் வரையும் கோலங்கள் மூலமாக ஏற்படுத்தி வருகிறார்.

பொதுமக்களுக்கு சமீப காலமாக, ஒரு நாளைக்கு குறைந்தது ஐம்பது பேருக்கு, ‘கபசுர குடிநீர்’ இலவசமாக வழங்கி வருகிறார். அதேநேரம், மாஸ்க் இல்லாமல் வருபவர்களைப் பார்த்து அறிவுறுத்தி மாஸ்க்கும் இலவசமாக வழங்கி வருகிறார்.

கபசுர குடிநீர் கொடுக்கணும்னு நினைச்சேன். என் வீட்டு செலவுகளிலிருந்து மிச்சம் பண்ணி, தினமும் காலையில் வழங்கி வருகி றேன். துப்புரவுப் பணியாளர்கள், வேலைக்குப் போறவங்க, அக்கம் பக்கம் வீட்டுக்காரர்கள், குழந்தைகள் எல்லாரும் அதை வாங்கிக் குடிக்கி றாங்க. ஒன்னரை மணி நேரத்திற்குள் அது தீர்ந்து விடுகிறது. இதாவது நம்மளால செய முடிகிறதே என்ற திருப்தியும் சந்தோஷமும் அடைகிறேன்" என்கிறார் போதி லக்ஷ்மி.

குடும்பத்தலைவி பா.சித்ராதேவி, அலங்காநல்லூர்.

நான் கடந்த மாதம் என் உறவினர் இறுதி சடங்கிற்குச் சென்று வந்த பின்னர் எனக்கு சாதாரண காய்ச்சல் வந்தது. ஒரு தனியார் மருத்துவமனையில் மூன்று நாட்கள் சிகிச்சை எடுத்துக் கொண்டேன்.

ஆனால், காய்ச்சல் குறையவில்லை. அங்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட பிறகு ரத்தப் பரிசொதனை செய்து பார்த்தபோது எனக்கு டைபாடு காச்சல் இருப்பதாகச் சொன்னார்கள். அதற்கான சிகிச்சையும் எடுத்துக் கொண்டேன்.

அதற்குப் பின்னர் எனது உடல் நிலை மிகவும் மோசமாகி, மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனே சி.டி.ஸ்கேன் எடுத்துப் பார்த்த போது, 75 சதவீதம் நுரையீரலில் நோத் தொற்று பாதிப்பு இருப்பது தெரிந்தது. என்னுடைய ஆக்சிஜன் லெவல் 65 ஆக குறைய ஆரம்பித்ததும் மதுரை அரசு மருத்துவமனைக்கு சென்று உள்நோயாளியாக சேர்ந்தேன். எனக்கு செயற்கை சுவாசக்கருவி பொருத்தப்பட்டது.

அங்கிருந்த நாட்களில் தரமான உணவு மற்றும் மருத்துவர்களின் கனிவான சிகிச்சையும் நோ எதிர்ப்பு சக்தி மருந்து, மாத்திரைகளைச் சாப்பிட் டேன். ஒரு வார காலத்திற்கு பின்னர் என் உடல் நிலையில் நல்ல மாற்றம் ஏற் பட்டு, இன்றைக்கு நான் நன்றாக இருக்கிறேன்.

ஆனால், நான் மருத்துவமனைக்கு செல்லும் முன் வீட்டுக்கு திரும்புவேன் என்ற நம்பிக்கையை இழந்து விட்டேன். என் மகளிடம் யார் யாருக்கு நான் என்ன கொடுக்க வேண்டும், நமக்கு கொடுக்க வேண்டியவர்கள் யார் யார் என்பதை அனைத்தையும் ஒப்படைத்து விட்டேன்.

மேலும், நான் கிறித்துவ மதம் என்பதால் இறுதி சடங்கிற்கும் முறைப்படி நடக்க வேண்டியதை சர்ச் பாதிரியாரிடம் முன் கூட்டியே சொல்லிவிட்டும் சென்றேன்.

ஆகவே, ‘கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டு விட்டோமே’ என்ற பயத்தை முதலில் விடுங்கள். மனக்குழப்பம் அடைவதையும் விட்டு தைரியத்தோடு, சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்துக் கொண்டால் அனைவரும் கொரோனாவிலிருந்து பூரண குணமடைய முடியும் என்ற நம்பிக்கையோடும் இருங்கள். பயத்தை முதலில் விட்டொழியுங்கள்."

அயர் பங்களாவைச் சேர்ந்த சமூக சேவகி திருமதி சர்மிளா நூர் அவர்களின் பகிர்வு :

நான் பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறேன். எனக்குக் கடந்த மாதம் முதல் வாரம் தொற்று அறிகுறி இருந்தது தெரிந்ததும், வீட்டிலிருந்தே சிகிச்சை எடுத்துக் கொண்டேன். என்னோட நண்பர்கள் மருத்துவத் துறையில் இருப்பதனால் உடனடியாக கவுன் சிலிங்கும் எடுத்துக்கிட்டேன். எனக்கு என்னென்ன பிரச்னைகள் என்பதை அவர் களுடன் கலந்து ஆலோசித்தேன்.

முதலில் குளிர், கொஞ்சம் பீவர் இருந்தது. அப்புறம் உடம்பு வலி. கொரோனா என்று உறுதி ஆனதும், இரண்டாவது நாளில் சிகிச்சை ஆரம்பித்தோம். சி.டி. ஸ்கேன் எடுத்து டெஸ்ட் பண்ணிக்கிட்டேன். புழங்குவதற்கு சில பொருட்களையும் எடுத்துக் கொண்டேன். வீட்டில் பதினைந்து நாட்களுக்கும் மேலாக தனி அறையில் இருந்தேன்.

நானும் என்னுடைய மகளும் இந்த நோயால் பாதிக்கப்பட்டபோது கொஞ்சம் மனம் தளர்ந்தது போல உணர்ந்தேன். நம்பிக்கையுடன், ‘மீள முடியும்’ என்று நடைமுறையில் தெரிஞ்சுகிட்டேன். இதுல முக்கிய மான விஷயம், என்ன வெல்லாம் செயக் கூடாது, மத்தவங்க பண்ற தப்ப நாமும் பண்ணக் கூடாது என்பதை தெரிஞ்சு வச்சுக்கிட்டேன்.

இந்த சமயத்தில் நாங்க இரண்டு பெரும் டிராயிங் வரைந்தோம், பாட்டு பாடினோம். எந்தெந்த விதத்தில் உற்சாகமாக இருக்க முடியுமோ அப்படி இருந்தோம்.

ஏழாவது நாளில் ஸ்கேன் டெஸ்ட் பார்த்து மாத்திரையை மாற்றிக் கொண்டேன். பத்தாவது நாளில் மாற்றம் தெரிந்தது. பன்னிரெண்டாவது நாளிலிருந்து நார்மலாகி விட்டோம். அப்புறம் முழுவதும் குணமடைந்து விட்டோம்.

‘எனக்கு வராது’ என்ற அசட்டு தைரியம் யாருக்குமே வேண்டாம். வந்தா எதிர்கொள்ள துணிச்சல் போதும். பயத்தை முதலில் விட்டொழிக்கணும். ‘நம்மை நாமேதான் மீட்டெடுக்கணும்’ என்ற தன்னம்பிக்கை ஒன்று மட்டுமே இதற்கான மருந்து மற்றும் தீர்வாகும்!
Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :