எனது சைக்கிளும் நானும்!

உலக சைக்கிள் தினம் (3.6.2021)
உஷா ராம்கிருக்குமணி வண்டி வருது... ஓரம்போ!

சில பல ஆண்டுகளுக்கு முன் ‘அவர் (HOUR) சைக்கிள்’ என்ற கடைகள் நிறைய உண்டு. சைக்கிள் வாங்க முடியாத பெரும்பான்மையோர், இந்த வாடகை சைக்கிள் கடைக்குச் சென்று எடுத்து வருவோம். விடுமுறை நாட் களுக்கே உரிய பொழுதுபோக்கு அம்சங்களில் சைக்கிள் ஓட்டுவதும் ஒன்று. முதலில் கற்றுக்கொள்வதற்கென்று கடையிலிருந்து எடுப் போம். பெற்றோர் கொஞ்சம் கண்டித்துதான் அனுப்புவர். ஒடச்சிடாத... காசு கேப்பான்... பொறுமையா ஓட்டு. யார் மேலயாவது மோதிடப் போற..." இது நடக்கக்கூடாது என்று பயந்து கட்டா யம் இதைச் செவோம். கற்றுக்கொண்ட பிறகு மகிழ்ச்சிக் காக வண்டி எடுப்போம். ஒரு மணி நேரம் பறந்துவிடும். ஏக்கத் தோடு சைக்கிளைத் திருப்பிக் கொடுக்கும்போது, ‘சே... இந்த சைக்கிள் கடைக்காரர் என் சித்தப்பாவாக இருந் திருக்கக் கூடாதா?’ என்று பெருமூச்சு விடுவோம்.

சைக்கிளைக் கொண்டு வந்தால், வீட்டில் சிறுவர் கூட்டமல்லவா இருக்கும்?! இந்த ‘ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு’ எல்லாம் கிடையாது. அண்ணன், தம்பி, அத்தை, பெரியப்பா பிள்ளைகள், அக்கம் பக்கத்து நட்பு வட்டம் என்று எல்லாரும், ‘ஏ... எனக்கு ஒரு ரவுண்ட் தா’ என்று சைக்கிளைப் பிடுங்கிக்கொண்டு ஓடுவார்கள். ஹேண்டில் பார் வளைந்ததற்கு திட்டு மட்டும் நமக்கே நமக்கு.

சமீபத்தில், பத்தாம் வகுப்பு படிக்கும் நந்திதாவோடு பேசிக்கொண்டிருந்தேன். காஞ்சியின் காரை கிராமத்தில் வசிக்கும் இவள், பள்ளியில் படித்துக்கொண்டு, பக்கத்து ஊர் வரை சென்று பூக்கள் விற் கிறாள். அவள் தனக்கென சைக்கிள் வைத்துக்கொண்டு சுற்றுகிறாள். முன்னாடி பூ விக்க நடந்தே போவேன். ரொம்ப நேரம் பிடிக் கும். காலும் வலிக்கும். அதுக்கப் புறம்தான் சைக்கிளில் வரத் தொடங்கினேன். இன்னிக்கு என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட் என் சைக்கிள்தான். பிரியவே மாட்டோம்."

அதே ஊரைச் சேர்ந்த ப்ரியா எங்கிற தா எப்படி என்றால், எட்டு வயது சிறுமியாக தானே அரைப்பெடல் (நான் அந்தக் காலத்தில் அரைப் பெடல் செயும்போது, ‘குரங்கே குரங்கு பெடல் செயுது’ என்று கலாட்டா செவார்கள்) செது கற்றுக்கொண்டிருக்கிறாள். இன்று தனது நான்கு வயது மகளுக்கு சைக்கிள் ஓட்டக் கற்றுத் தந்துவிட்டாள். யாரையும் எதிர்பார்க்காம நான் சைக்கிள்ல வேலைக்கு வந்துடுவேன். அதுக்கு சைக்கிள் பெரிய துணை."

அம்மா கையில் காசு கம்மி, சைக்கிளே செகன்ட் ஹாண்ட்தான்" என்று நந்திதா சொன்னால், தம்பி சைக்கிள் எடுத்து ஓட்டு றேன். சொந்தமா சைக்கிள் வாங்க காசு சேர்த்து வெச்சிட்டு இருக்கேன்" என்பது ப்ரியாவின் நிலை. நந்திதாவுக்கு ஸ்கூட்டியை விட சைக் கிள் பிடிப்பதற்கு காரணம், வேடிக்கை பார்த்துக் கொண்டு, வாயில் பாட்டு ஒன்றை முணு முணுத்தபடி ஒயாரமாகப் போகலாம் என்பது. ப்ரியாவோ, அதுவே எக்ஸர்ஸைஸ் ஆயிடுத்தும்மா. உடம்புக்கு நல்லதாச்சே." பார்ரா!

ஒரு விஷயம் பிடித்துவிட்டால் எப்படியெல் லாம் நியாயப்படுத்துகிறார்கள்! அரைமணி நேர நடையை ப்ரியா சைக்கிளில் பத்து நிமிடத்தில் அடைந்து விடுவதால், வேலைக்கு போகை யில் நேரம் சேமிக்க முடிகிறது என்கிறாள். நந்திதாவைப் பார்த்தால் அவளையே யாராவது பள்ளிக்குக் கூட்டிக் கொண்டு செல்ல வேண்டும் போல இருப்பாள். அந்த ஆழாக்கு, தம்பி, தங்கச்சி, பாட்டி என்று பல பேருக்கு லிஃப்ட் தந்திருக்கிறாள். அக்கம் பக்கத்தில் அவசரமாக எங்காவது செல்லவேண்டுமென்றால் நந்திதாவை சைக்கிளில் கூட்டிக்கொண்டு போகச் சொல்வார்களாம். சைக்கிளுக்கே ட்ரைவர் போலிருக்கிறதே!

சிறு வயதில் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள் வது, நம்மையும் அறியாமல் தன்னம்பிக்கையை உயர்த்தும் விஷயமாக அமைகிறது. கைவசம் வித்தைகள் அதிகமாகும்போது, மற்றவரை சார்ந்து இருக்கும் நிலை குறைகிறது. நகரங்களில் பார்த்தால், இது நல்ல உடற்பயிற்சியாக கையாளப்படுகிறது. ஒரு குழுவாக அதிகாலை யில் வெகுதூரம் சைக்கிள் ஓட்டுவது, சைக்கிள் போட்டி எல்லாம் பிரபலமடைகின்றன.

வேறு பெரிய வாகனங்கள் வைத்துக் கொண் டிருப்பவர்கள், ஜாலிக்காக சைக்கிள் ஓட்டு கிறார்கள். நந்திதா, ப்ரியா போன்றோர் கடமைக் காக சைக்கிள் ஓட்டினாலும், ஜாலியை அதற் குள் புகுத்திவிட்டார்கள். யதார்த்தத்தில் எப்ப வெல்லாம் முடியுமோ, மற்ற வாகனங்களை விடுத்து சைக்கிளை அதிகம் ஓட்டுவது, நம் செலவைக் குறைத்து, ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும். நாட்டுக்கு காற்று மாசு குறையும்!

நீயே என் ஜிம்

எனது சைக்கிள் என்னுடைய லைஃப் சைக்கிளில் முக்கியமான ஒன்று. 17 வயதில் சைக்கிள் ஒட்டக் கற்றுக்கொண்டு, ஒழுங்காக ஏறி உட்கார்ந்து ஆரம்பிக்க வராமல் (ண்ணாச்ணூணாடிணஞ் ணாணூணிதஞடூஞு), தெருவில் ஏதாவது சிறு பையன்களைத் தள்ளிவிடச் சொல்லி, இறங்கும்போது அப்படியே சைக்கிளிலிருந்து குதித்து சைக் கிளைக் கீழே தள்ளிவிட்டு நடுவில் மட்டும் வீரமாக, வேகமாக சைக்கிள் ஓட்டியதோ மதுரையில் திருமங்கலம் ஹோமியோபதி மருத்துவக்கல்லூரி வளாகத்தில். பிறகு சைக்கிள் ஓட்டும் கலையில் நிபுணராகி பந்தயத்தில் முதல் பரிசு பெற்றதெல்லாம் வரலாறு.

என் அன்பு சைக்கிளை சென்னையிலிருந்து மதுரை திருமங்கலத்திற்குப் பேருந்தில் கொண்டு சென்றேன். இறங்கும்பொழுது நானே பேருந்தின் பின்புள்ள ஏணியில் ஏறி ஒற்றைக் கையால் சைக்கிளைப் பிடித்துக்கொண்டு மறு கையால் ஏணியைப் பற்றிக்கொண்டு வீரமாக நின்ற காட்சி எனக்கு மட்டுமே தெரியும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.

ஆனால், 25 ஆண்டுகளுக்குப் பின்பு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சந்திப்பில் என் நண்பன் டீ கடையில் டீ குடிக்கும்போது இந்தக் காட்சியைப் பார்த்ததாக மைக் போட்டு விவரிக்க, என் 45 வயதில் நாணிப் போனேன்.

இன்று நான் எந்த ஊரில்... ஏன், எந்தத் தேசத்தில் இருந்தாலும் சைக் கிள் ஓட்டுகிறேன். எந்த ஊரில் இருந் தாலும் எனக்கு எப் படியாவது சைக்கிள் கிடைத்துவிடும் கடவுள் அருளால்.

இன்றும் என் சைக்கிளுக்கு நானே காற்றடிப்பேன். ஒரு குழந்தைக்குச் சாப் பாடு ஊட்டுவது போன்று அதைச் செய்து வருகிறேன். 27 வருட காலமாக சென்னையில் மடிப்பாக்கத்திலும் மாம்பலத் திலும் என் கிளினிக்கிற்கு இன்றுவரை சைக்கிளில் சென்று வருகிறேன்.

சைக்கிளே, நீ என் ஆரோக்கியத்தை, பொருளாதாரத்தை வளர்க்கிறாய். மாசினைக் குறைக்கிறாய். பெட்ரோல் செலவைக் குறைக்கிறாய்.

என் சைக்கிளே நீயே என் உற்ற தோழன்.

மிகச் சிறந்த போக்குவரத்து சாதனம். நீயே என் ஜிம்! நீயே என் டானிக்! நீ பல்லாண்டு வாழ்க!

- ஸ்யாமளா விஜய்சிவா, சென்னை

மறவேனே எந்நாளும்

இது நடந்து சுமார் ஐம்பது வருடங்கள் இருக்கும். பெண்கள் சைக்கிளை தொடக்கூட உரிமை இல்லாத நாட்கள். ஊரில் வித்தை காட்டும் கழைக்கூத்தாடிகள் என்று அழைக்கப் படும் பெண்கள் சைக்கிள் ஓட்டுவதைப் பார்த்து அதைப்போல நாமும் ஓட்ட வேண்டும் என்ற ஆசையில் பெரிய சைக்கிளை (அப்போ தெல்லாம் லேடீஸ் சைக்கிள் அபூர்வம்) யாருக்கும் தெரியாமல் மதியம் அனைவரும் தூங்கும் நேரத்தில் மெதுவாக தள்ளிப் பார்த்து, பின் குரங்கு பெடல் போட்டுக்கொண்டு தெருவில் போனால் பசங்க, ‘டே பொம்பளை சைக்கிள் ஓட்டறா டோ...’ என்று கூச்சல் போடுவார்கள். அதையும் தாண்டி ஏதோ பேலன்ஸ் செயும் அளவிற்கு கற்றுக் கொண்டேன். பிறகு எனது சித்தப்பா சிறிய சைக்கிள் வாங்கித் தந்தார். பிறகு கல்லூரியில் படிக்கும் காலத்தில் எனக்கு

சைக்கிள் ஓட்டத் தெரியும் என்று பெருமையாக என் தோழியிடம் சொல்லி அவளை வைத்து டபுள்ஸ் சென்றேன். ஒரு திருப்பத்தில் சரியாக வளைக்கத் தெரியாமல் பக்கத்தில் இருந்த குழியில் இருவரும் விழுந்து சிராப்புகளுடன் எழுந்தோம். கல்லூரி படிப்பை முடித்த பிறகு எனக்கு கடிதம் எழுதும் வேளையில், ‘பட்டுப் பாவாடை உடுத்திய என்னை பாங்காக படுகுழியில் தள்ளியதை மறப்பேனா?’ என்று அவள்

எழுதும்போது மலரும் நினைவுகளில் நனைவோம்.

- அன்புக்கரசி பாலசுப்பிரமணியன், மன்னார்குடி

என் ஹீரோ

முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் என் அண்ணன் (பெரியம்மாவின் பையன்) பூவனூரில் ரெயில்வே ஸ்டேஷன் மாஸ்டராக இருந்தார். நான் அங்கு சென்றபோது எனது அண்ணி எனக்கு ஒரு

சிறிய சைக்கிளை ஓட்ட கற்றுத் தந்தார்.

அரை மணி நேரத்திலேயே கற்றுத் தந்தார். பின்னர், நான் மயிலாடுதுறையில் வாடகைக்கு சைக்கிள் எடுத்து மாயூரநாதர் கோயில் வீதிகளில் வலம் வருவேன். பெரிய சைக் கிள் ஓட்டும் ஆசை யால் தெரிந்தவர் களிடம் சைக் கிளை கெஞ்சி வாங்கி ஓட்டு வேன். பெரிய சைக்கிளில் உந்தி உந்தி ஏறி விடு வேன். இறங் கத் தெரியாத தால் ஒரு பெஞ்சை வீட்டு வாசலில் போட்டு வைத்து இறங்கும் சமயத்தில் சைக்கிளின் பிரேக்கை பிடித்ததும் சைக்கிளை மறுபக்கம் தள்ளிவிட்டு நான் பெஞ்சில் குதித்து விடுவேன். பல சமயங்களில்

சைக்கிள்தான் பலமாக அடி வாங்கியுள்ளது. நான் பன்னிரெண்டாம் வகுப்பில் இருந்தபோது எனக்கான என் முதல் ஹீரோ கிடைத்தார். ஹீரோ சைக்கிளைத்தாங்க சொல்றேன்.

- ஜெயஸ்ரீ.எம்.சாரி, நாக்பூர்

விட்டானே பார்ப்போம்!

நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது, சைக்கிள் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் முதன் முதலில் மனதில் உதித்தது. என் அண்ணனிடம் கெஞ்சிக் கூத்தாடிய பிறகு, ஒரு வழியாகக் கற்றுத் தர சம்மதித்தான். அவன்

சைக்கிளைத் தர மாட்டானாம். வாடகை சைக்கிள்தான். ஏறி உட்காரும்போதே சைக்கிள் ஒரு பக்கமாக சாந்தது. பயமோ பயம். சைக்கிள் ஓட்ட பயமில்லை. என் அண்ணனிடம்தான் பயம். ‘ஹேண்டில் பாரை நேராப் பிடிச்சுண்டு ஓட்டு’ என்று சொல்லிவிட்டு, அவன் சைக்கிளை விட்டு விட்டானே பார்ப்போம். பிறகென்ன? வண்டி நேராகப் போ, ரோட்டோரத்தில் இருந்த

சகதிக்குள் விழுந்தது. வண்டி மேல் அமர்ந்திருந்த எனக்கும் கை, கால் எல்லாம் சிராப்பு. அழுதுகொண்டே வீட்டுக்கு வந்த என்னை, அப்பாதான் சமாதானப்படுத்தினார். ‘இன்னும் ஒரு மாசத்துக்குள்ள

நீ சூப்பரா சைக்கிள் ஓட்டற. நான் உனக்குக் கற்றுத் தரேன்’ என்று கூறி, அதன்படியே பொறுமையாகக் கற்றும் தந்தார். இன்று டூ வீலரில் நகரையே வலம் வருகிறேன். நான் மிதிவண்டி கற்றுக்கொண்ட அனுபவத்தை என் அருமை மகனிடம், அவ்வப்போது கதை போலக் கூறுவேன். அவனும் ஆர்வமாகக் கேட்பான். அவன் மூன்றாவது படிக்கும்போது அவனுக்கும் சைக்கிள் ஓட்டக் கற்றுத் தர வேண்டும். அவனும் தன் சைக்கிள் அனுபவத் தைப் பின்னொரு நாளில் யாரிடமாவது பகிர்ந்துகொள்வான் இல்லையா...?

- நிவேதிதா வினோத், விருகம்பாக்கம்

மங்கம்மா ராணி

என் வீட்டிற்குத் தெரியாமல் நான் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டது எனது 14ம் வயதில். என் தோழி கௌரியும், நானும் சேர்ந்து வாடகை சைக்கிள் எடுத்து சாக்கடை, பள்ளம் எல்லாவற்றிலும் விழுந்து வாரி, நா மேல் ஏற்ற, அது எங்களைத் துரத்த என்று பல சாகசங்கள் புரிந்துதான் கற்றுக் கொண்டோம். விடுமுறை நாட்களில் வீட்டிற்குத் தெரியாமல் வாடகை சைக்கிளில், வேறு ஏரியாவெல்லாம் சுற்றி வருவது வழக்கம். அப்படி வேறு ஏரியாவில் இருவரும் டபுள்ஸ் போனபோது ஒரு விஷமக்கார பையன் எங்களை கேலி செது, பின் தொடர்ந்து வருவது, சைக்கிளை வழி மறிப்பது என்று தொல்லை கொடுத்து வந்தான். வீட்டில் சொல்லவும் பயம். பொறுக்க முடியாமல் நாங் களே ஒரு திட்டம் தீட்டி னோம். அடுத்த நாள் அந்த பையன் எங்களை தொடர்ந்து வந்த போது, நானும், கௌரியும், சைக்கிளை விட்டுக் கீழே இறங்கினோம். அந்தப் பையனும் அவனுடைய சைக்கிளிலிருந்து கீழே இறங் கினான். உடனே நாங்கள் இருவரும் கையிலிருந்த ஆணியினால் அவனது சைக்கிளை பஞ்சர் செதுவிட்டு எங்கள் சைக்கிளில் ஏறி திரும்பிப் பார்க்காமல் வீடு வந்து சேர்ந்தோம். அதன் பிறகு அவன் எங்களிடம் வாலாட்டவில்லை.

இன்றும் என் வீட்டில் அந்த நிகழ்ச்சியை சொல்லி என்னை, ‘மங்கம்மா ராணி’ என்பார்கள். (நான் மதுரைக்காரி). அன்றைய காலகட்டத்தில் (1970களில்) போட்டோ எதுவும் எடுத்ததில்லை.

- ராதிகா ரவீந்திரன், திருவான்மியூர்

அகவை அறுபதிலும் மிதி வண்டிப் பயணம்!

அகவை அறுபதிலும் என்னுடன் பயணிக்கிறது சிறகில்லாத உலோகப் பறவையான எனது மிதிவண்டி. அன்று மூன்றாம் வகுப்பு படிக்கும்போதே முயற்சி செய்து குதித்து ஏறி, இறங்கி குரங்கு பெடல் போட்டேன் மிதிவண்டியில் பயணிக்க. சிறு வயதில் தினமும். ஐந்து பைசா, பத்து பைசா என அம்மாவும் உறவினர்களும்

கொடுக்கும் சில்லரை காசை சேமித்து வைத்து எடுத்துக்கொண்டு ஒரு மணி நேரத்திற்கு ஒரு ரூபா என வாடகை மிதிவண்டி யில் ஏறி மிதித்து மிதித்து வளைந்து நெளிந்து ஓட்டி வளைவுகளில் முட்டிக்கொண்டு விழுந்ததும் உண்டு. விழுந்தாலும் எழுவேன் என்ற எண்ணத்தோடு, வீரத்தழும்புகளோடு. விடாமுயற்சிகளோடு ஓட்டி ஓட்டி பார்த்ததுண்டு.

யாருமில்லாத சாலையில் இரு கைகளை யும் மேலே விரித்துக்கொண்டு பறவைப் போல் பறந்துக்கொண்டு மிதிவண்டி ஓட்டியபோது எனது சிந்தனைகளுக்கு சிறகு முளைத்தது போல் உணர்ந்தது உண்டு.

சாலையிலுள்ள சருக்கலில் சரிந்து விழுந்து முட்டியில் சிராத்ததும் உண்டு. பழகப் பழக நன்றாக ஓட்டி, எனது அம்மாவை பின்னாடி கேரியரில் வைத்து கடைவீதிக்கு சென்று வந்ததும் உண்டு.

இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு கோவையில் குடி புகுந்தோம். அன்று கோவையில் சைக்கிளில் நான் செல்லாத இடமே இல்லை என்று சொல்லலாம்.

இன்று அகவை அறுபதிலும் மிதிவண்டி ஓட்டிக் கொண்டிருக்கிறேன். மிதிவண்டியை எனது பிரியாத்தோழி என்றே சொல்லலாம்.

- ஜெயா வெங்கட், கோவை
Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :