விரல் நுனியில் உன் உலகம்! - 5


காம்கேர் கே.புவனேஸ்வரிநம் வாழ்க்கையின் மிக முக்கிய அங்கமாக ஸ்மார்ட் போனும் ஆப்களும் மாறிவிட்ட நிலையில், அதன் பாதுகாப்பும் மிக அவசிய மாகிறது. நம் மணிபர்ஸின் மதிப்பை விட பெருமதிப்பு வாந்த சக்தியாக உருமாறியுள்ளது ஸ்மார்ட் போன்கள். காரணம், நம் மணிபர்ஸ்கள் ஸ்மார்ட் போன் ஆப்களில் டிஜிட்டல் வடிவில் சென்றமர்ந்து விட்டதே முழுமுதற் காரணம்.

எனவே, ஸ்மார்ட் போனை பத்திரப்படுத்தி வைப்பதுடன், ஒருவேளை தொலைந்துவிட்டால் என்ன செயலாம் என்பதையும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். பாதுகாப்பாக இருப்பதற்கு முயல வேண்டும். அப்படியும் பிரச்னைகள் ஏற்பட்டால் அதில் இருந்து வெளியில் வருவதற்கும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

உங்கள் ஸ்மார்ட் போன் தொலைந்துவிட்டதா?

நாம் ஆசை ஆசையா வாங்கிய ஸ்மார்ட் போன் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம். கண்டுபிடித்துவிடலாம்.

நாம் போனை வாங்கியவுடன், முதலில் போனின் IMEI (International Mobile Station Equipment Identity) எண்ணை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். போனில் *#06# என்று டைப் செது டயல் செதால் போனின் IMEI எண் வெளிப்படும். அதை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து, அந்த ஸ்மார்ட் போனில் நமக்கான இமெயில் முகவரி மற்றும் பாஸ்வேர்ட் மூலம் அக்கவுன்ட் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

போன் தொலைந்துபோனால், அந்த அக்கவுன்ட் மூலம் நம் போன் எங்குள்ளது என தெரிந்துகொள்ள முடியும். அதோடு, அதை லாக் செயவும் முடியும். அதிலுள்ள தகவல்களை டெலிட் செய்ய முடியும்.

எனவே, போனின் மாடல் எண், IMEI எண், போன் அக்கவுன்ட்டுக்கான இமெயில் முகவரி மற்றும் பாஸ்வேர்ட் போன்றவற்றை மறந்துவிடாமல் இருக்க பத்திரமாக எங்கேனும் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

உதாரணத்துக்கு, நாம் சாம்சங் ஆண்ட்ராட் ஸ்மார்ட் போனைப் பயன்படுத்தி, நமக்கான அக்கவுன்ட்டை உருவாக்கிக் கொள்வதைத் தெரிந்துகொள்வோம்.

ஸ்மார்ட் போனுக்கான இமெயில் அக்கவுன்ட் உருவாக்குதல்!

1. போனில் Settings > Lock Screen and Security > Find My Mobile > Add Account என்ற விவரத்தின்

மூலம் நம் போனுக்கான இமெயில் முகவரியை உருவாக்கிக் கொள்ள வேண்டும். ஒரு முறை செய்ய வேண்டிய வேலை இது.

2. இமெயில் முகவரியை உருவாக்கிக் கொண்ட பிறகு, போனின் ஹோம் பேஜில் Settings > Lock Screen and Security > Find My Mobile என்ற விவரத்தை டச் செதுகொண்டு போனில் இமெயில் முகவரி மற்றும் பாஸ் வேர்டை டைப் செதுகொண்டால் கீழ்க்காணும் மூன்று விவரங்கள் அடங்கிய திரை கிடைக்கும்.

Remote Controls : இந்த விவரத்தை ஆன் நிலையில் வைக்க வேண்டும்.

Google Location Service : இந்த விவரத்தையும் ஆன் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

SIM Change Alert : இந்த விவரத்தையும் ஆன் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

3. நம் போன் தொலைந்துபோ, வேறு யாரேனும் நம் சிம் கார்டை நீக்கிவிட்டு புது சிம் கார்டைப் போட்டுப் பயன்படுத்தினால், அந்தத் தகவலை நாம் அறிய, SIM Change Alert என்ற பகுதியில் Alert Message Recipients என்ற பிரிவின்கீழ் நம் நெருங்கிய உறவினர்கள்/நண்பர்கள் மொபைல் எண்களையோ அல்லது நம்முடைய மற்றொரு மொபைல் எண்ணையோ பதிவு செதுகொள்ளலாம். (உதாரணம் : 918292783737)

மேலும், Alert Message என்ற இடத்தில் எச்சரிக்கைத் தகவல் ஒன்றையும் டைப் செய்து கொள்ளலாம். (உதாரணம் : Sim Changed)

நம் போனில் வேறு சிம் மாற்றப்பட்டால், இதில் நாம் பதிவு செய்து வைத்துள்ள மொபைல் எண்களுக்கு அலர்ட் மெசேஜ் சென்றடையும். மேலும், மாற்றப்பட்ட புது சிம் கார்டின் எண்ணும் அனுப்பப் படும். நம் போன் இருக்கும் இடத்தைக் கண்டறிய இது உதவும்.

தொலைந்த போனை கண்டறியும் முறை :

நம் போன் காணாமல் போனால் கீழ்காணும் இரண்டு வெப்சைட் லிங்கு கள் மூலம் கண்டு பிடித்துவிட முடியும். இந்த முறையில் தொலைந்த போனை கண்டறிய, தொலைந்த நம் போனில் இன்டர்நெட் இணைப்பு ஆன் செயப்பட்டிருக்க வேண்டும். மேலும், போன் ஆஃப் ஆகியும் இருக்கக் கூடாது.

1. android.com/devicemanager என்ற முகவரியில், நம் ஜிமெயில் முகவரி மற்றும் பாஸ்வேர்ட் மூலம் லாகின் செதுகொள்ள வேண்டும். இப்போது கிடைக்கும் திரையில் Ring, Lock, Erase என மூன்று விவரங்கள் இருக்கும்.

Ring என்ற விவரத்தை கிளிக் செதால், ஐந்து நிமிடங்களுக்கு போனை தொடர்ச்சியாக ரிங் ஆகும்படி செது எங்கிருக்கிறது என கண்டறியலாம்.

Lock என்ற விவரத்தை கிளிக் செதால், நம் மொபைல் லாக் ஆகும்படி செய்துவிடலாம். Erase என்ற விவரத்தை கிளிக் செதால், நம் போனில் உள்ள தகவல்கள் அனைத்தையும் அழிக்கும்படி செதுகொள்ளலாம்.

2. https://findmymobile.samsung.com/ என்ற முகவரியில், நம் சாம்சங் போன் அக்கவுன்ட்டின் இமெயில் முகவரி மற்றும் பாஸ்வேர்ட் மூலம் லாகின் செதுகொள்ள வேண்டும். இப்போது கிடைக்கும் திரையில் Ring My Device, Lock My Device, Wipe My Device என மூன்று விவரங்கள் இருக்கும்.

இவற்றைப் பயன்படுத்தி, சில நிமிடங்களுக்கு போனை தொடர்ச்சியாக ரிங் ஆகும்படி அல்லது போன் லாக் ஆகும்படி அல்லது போனில் உள்ள தகவல்கள் அனைத்தையும் அழிக்கும்படி செய முடியும். மேலும். நம் போன் எங்கிருக்கிறது என்ற விவரமும் கூகுள் மேப்பில் காட்டப்பட்டு விடும்.

உஷார் டிப்ஸ்!

1. நம் போன் தொலைந்துவிட்டால், போன் தொலைந்த அடுத்த நிமிடம் கம்ப்யூட்டர் மூலம் நம் இமெயில், ஃபேஸ்புக் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதள பாஸ்வேர்டுகளை மாற்றிவிட வேண்டும். அடுத்து, android.com/devicemanager அல்லது https://findmymobile.samsung.com/ லிங்க் மூலம் நம் போனில் உள்ள தகவல்களை டெலிட் செதுவிட வேண்டும்.

2. நாம் பயன்படுத்தும் சிம்மின் சர்வீஸ் புரொவைடரை தொடர்புகொண்டோ அல்லது காவல் நிலையத்தில் புகார் அளித்தோ சிம்மை பிளாக் செதுவிடலாம்.

அவர்கள் நம் போனில், போனின் IMEI எண், போன் மாடல், எண், நம் போனுக்கு கடைசியாக யார் தொடர்பு கொண்டார்கள் அல்லது நாம் எந்த எண்ணுடன் பேசினோம் என்ற விவரத்தைக் கேட்பார்கள். அந்த எண் நினைவில் இருந்தால், அதை அவர்களிடம் சொன்னால் நம் சிம்மை பிளாக் செதுவிடுவார்கள்.

(முன்னேறுவோம்)

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :