ஆயிரம் பேருடன் போர்!

உலக மூளைக் கட்டி தினம் (8.6.2021)
பத்மினி பட்டாபிராமன்ஜூன் மாதம் 8ம் தேதி, மூளைக்கட்டிகளுக்கான சர்வதேச தினமாக அனுசரிக் கப்படுகிறது. இந்த சிறப்பு தினத்தை முன்னிட்டு, மூளையில் கட்டிகள் ஏன் வருகின்றன? அவற்றுக்கு என்ன சிகிச்சை? போன்றவை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் டாக்டர் கே.ஸ்ரீதர் அவர்களிடம் கேட்டபோது...

இவர், சென்னை எம்.ஜி.எம். ஹெல்த் கேர் மருத்துவமனையின் சீனியர் கன்சல் டன்ட் நியூரோ சர்ஜன் மற்றும் இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூரோ சயன்ஸஸ் அண்ட் ஸ்பைனல்

டிசார்டர்ஸ் பிரிவின் இயக்குனர் மற்றும் தலைவர். (Senoir Consultant Neuro Surgeon Director & Group Head, Institute of Neuro Sciences and Spinal Disorders MGM Health Care, Chennai.)

மனித மூளை - சுமார் ஒன்றரை கிலோ எடை. ஆனால், உடலில் அதுதான் தலைமைச் செயலகம். உடல் அசைவுகளின் கன்ட்ரோல் ரூம். அறிவின் பிறப்பிடம். வலிகள், சோகம், துக்கம் போன்ற எல்லா உணர்வுகளின் இருப்பிடம். நினைவுகளின் சேமிப்புக் கிடங்கு. அதில் பாதிப்பு ஏற்பட்டால்...?

Brain Tumors எனப்படும் மூளைக் கட்டிகள் ஏன் வருகின்றன?

டாக்டர் ஸ்ரீதர் அவர்களின் பதில்கள்...

ப்ரெயின் ட்யூமர் என்றால் என்ன டாக்டர்?

மூளைக்குள் இருக்கும் உயிரணுக்களின், அதாவது செல்களின் அதிகப்படியான வளர்ச்சி யால் கட்டிகள் உருவாகின்றன.

இது Lesion or Neoplasm என்றும் சொல்லப் படுகிறது. மூளைக் கட்டிகள் இரண்டு விதமாக காணப்படுகின்றன.

பிரைமரி ட்யூமர் : மூளைத் திசுக்களிலிருந்தோ, செல்களி லிருந்தோ வளரக் கூடியவை. இவை புற்று நோய்க் கட்டிகளாகவும் இருக்கலாம் அல்லது அல்லாதவையாகவும் இருக்க லாம்.

செகண்டரி ட்யூமர் : இவை இரண்டாவது வகைக் கட்டிகள். அனேகமாக இவை புற்றுநோய்க் கட்டிகளாகவே இருக்கும்.

மூளைக் கட்டிகளுக்கான அறிகுறிகள் எவை?

கட்டிகள், மூளையின் செயல்பாட்டினை பாதிக்கும்போது சில அறிகுறிகள் தென்படும். மூளையின் எந்தப் பகுதியில் கட்டி இருக்கிறதோ அதற்குத் தகுந்தபடி அறிகுறிகள் மாறும்.

சாதாரண தலைவலி போல் இல்லாமல் தொடர்ச்சியாக தலைவலி, வாந்தி இருக்கும். மூளையின் அதிகப் படி இயக்கம் காரணமாக வலிப்பும் வரலாம்.

கண் பார்வை மங்குதல் இதன் முக்கிய அறிகுறி. கை, கால்களில் பலஹீனம், செவித்திறன் மங்குதல்,பொதுவான நடவடிக்கைகளில் மாற்றம், மூளையின் திறன் மங்குதல் இவையெல்லாம் மூளைக்கட்டிகள் உருவானால் வரும் அறிகுறிகள்.

மூளையில் வரும் கேன்சர் கட்டிகளுக்கும், கேன்சர் அல்லாத கட்டிகளுக்கும் என்ன வித்தி யாசம்?

கேன்சர் அல்லாத கட்டிகள் மெதுவாக, நீண்ட நாட்களுக்கு வளரும். அவை அருகில் உள்ள மற்ற நார்மல் செல்களை அழுத்திக் கொண்டு வளரும்.

கேன்சர் கட்டிகள், மற்ற செல்களுக்குள் புகுந்து அவற்றுக்குள் பின்னிக்கொண்டு வேகமாக வளரும் தன்மை கொண்டவை.

சில சமயம் மூளையில் வரும் காச நோய் அல்லது சில ரத்தக் குழாகள் கூட ட்யூமர் போல தோற்றமளிக்கக் கூடும்.

இதை எப்படிக் கண்டுபிடிப்பது?

எத்தகைய கட்டிகள், அவை எங்கே இருக்கின்றன என்பதை முதலில் ஸ்கேன் செய்தும், பின்னர் அதன் தன்மைகளை அறுவை சிகிச்சை செய்த பின்னும்தான் கண்டுபிடிக்க முடியும்.

C.T Scan அல்லது MRI Scan மூலம் கட்டிகளை அறிய முடியும். குறிப்பாக, ட்ராக்டோ கிராஃபி (Tractography) என்னும் முப்பரிமாண நவீன MRI Scan மூலம் எந்த இடத்தில் எந்த நரம்புகளில் பாதிப்பு என்பதை துல்லியமாக அறிய முடியும். திசுக் களை அல்லது செல்களை சோதித்து அறியும் Hystopathology முறை தவிர, இப்போது Molecular Pathology முறையில் மூலக்கூறுகளை ஆராந்து நோயின் தன்மையை அறிய முடியும். MRI Imaging மூலம் முக்கிய நரம்புகளைக் கண்டறிந்து அவற்றைப் பாதுகாக்க முடியும்.

மூளைக் கட்டிகள் கை கால்கள், பேச்சுத் திறன் இவற்றை பாதிக்குமா டாக்டர்?

பேச்சு, கை கால்களின் அசைவு இவற்றை மூளையின் எந்த இடம் கண்ட்ரோல் செய்கிறதோ, அந்த இடத்தில் தோன்றும் கட்டிகளை எலோக்வன்ட் ஏரியா ட்யூமர்ஸ் Eloquent area Tumours என்கிறோம். இவற்றை மிக எச்சரிக்கையாக, அருகில் இருக்கும் மற்ற நரம்புகள் பாதிக்காத வகையில் கவனமாகக் கையாண்டு சிகிச்சை அளிக்கிறோம்.

இவற்றுக்கென, பிரத்தியேகமான சிகிச்சைகள் உண்டு.

மூளைக் கட்டிகளால் செவித்திறன் பாதிக்கப் படுமா?

செவி மற்றும் முகத்துக்கான நரம்பு செல் களில் உருவாகும் கட்டிகள், அனேக மாக கேன்சர் அல்லாதவையே. இதனால் செவித்திறன் குறையும்.

உடலில் பேலன்ஸ் சரியாக இருக்காது.நிற்கும்போது, நடக்கும்போது உடல் தள்ளாடும். இதை கவனிக்காமல் விட்டால் பெரிய அளவில் வளர்ந்து விடும். அப்போது அறுவை சிகிச்சை மூலம்தான் இதை அகற்ற முடியும். சிறிய அளவில் இருந்தால் ரேடியேஷன் ஓரளவுக்குப் பலன் தரும்.

மூளைக் கட்டிகளுக்கான சிகிச்சை எப்படி அளிக்கப்படுகிறது? அறுவை சிகிச்சை அவசியமா?

எப்படி இருந்தாலும் கட்டிகள் என்பவை தேவையில்லாத வளர்ச்சி. அவற்றை அவசியம் நீக்கி விடவேண்டும். அதுதான் முதன்மையான, அவசியமான சிறந்த சிகிச்சை. இன்றைய நவீன மருத்துவத்தில், கட்டிகள் மூளைக்குள் எந்த இடத்தில், எவ்வளவு ஆழத்தில் இருந்தாலும் அவற்றை துல்லிய மாகக் கண்டுபிடித்து, அருகிலிருக்கும் மற்ற செல்களை பாதிக்காமல், குறிப்பிட்ட கட்டியை மட்டும் ஃபோகஸ் செய்து அறுவை சிகிச்சை மூலம் முற்றிலுமாக

நீக்கி விட முடியும்.

வெளியே எடுத்த கட்டியை சோதித்துப் பார்த்துதான், மேற்கொண்டு சிகிச்சையை தீர்மானிக்க முடியும். அதற்கென Stereotactic biopsy போன்ற சோதனைகள் இருக்கின்றன. சாதாரணக் கட்டியாக இருந்தால் நோயாளி முற்றிலும் குணமாகிவிட முடியும்.

நோயாளி விழித்திருக்கும்போதே செய்யப்படும் அறுவை சிகிச்சை என்ன?

அதன் பெயர் Awake Craniotomy. மண்டை ஓட்டில் சிறு துளை செய்து, (இதுவும் கட்டி இருக்கும் இடம், அதன் அளவு இதைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும்) கட்டியை எடுக்கும்போது, நோயாளியை விழித்திருக்க வைத்திருப்பதோடு மருத்துவருடன் உரையாடியபடியே சில சிறு செயல்களையும் செய்யச் சொல்லுவோம்.

இதைத் தவிர, Cortical Mapping, Cortical Stimulation போன்ற மற்ற நுட்பமான முறைகளையும் கையாள்கிறோம்.

மூளைத்தண்டு எங்குள்ளது? அதில் கட்டிகள் வர வாய்ப்பு உண்டா?

Brain Stem என்னும் மூளைத்தண்டு, மூளையின் மத்தியில் இருக்கும் முக்கியப் பகுதி. இது மூச்சு விடுதல், கண் பார்வை, இதயத் துடிப்பு, கை கால் அசைவுகள் போன்றவற்றைக் கட்டுப்படுத்துவது.

இதற்குள் ஏராளமான நரம்புகளும் செல்களும் உள்ளன. சில ஆண்டுகள் முன்பு வரை இங்கே கட்டிகள் தோன்றினால் சிகிச்சை செவது கடினமாக இருந்தது.

ஆனால், கடந்த பத்து ஆண்டுகளில் மருத்துவத் தொழில்நுட்பம் மற்றும் நவீன மருத்துவ உபகரணங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் காரணமாக மூளைத்தண்டில் கட்டிகள் எங்கு வந்தாலும் அவை கண்டறியப் பட்டு அறுவை சிகிச்சை செயப்படுகின்றன.

Intra Opertive Neuro Monitoring என்ற நவீன முறையினால், அறுவை சிகிச்சை செய்யும் போதே நரம்புகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்க முடியும்.

பிட்யூட்டரியில் கட்டிகள் வர வாய்ப்பு உண்டா?

மூளையின் ஒரு பகுதியாக அடிப்பாகத்தில் அமைந்திருக்கும் Pituitary gland நம் உடலின் எல்லா ஹார்மோன்களையும் கட்டுப்படுத்தும் பகுதி. இந்த செல்களிலும் கட்டிகள் வரலாம். Pituitary Fossa எனப்படும் இவை அனேகமாக கேன்சர் அல்லாதவை. இவற்றை மூக்கின் வழியே Endoscopy செய்து நீக்கி விடுவோம்.

உடலின் மற்ற பகுதிகளில் புற்றுநோய் வந்தவர்களுக்கு மூளைக் கட்டிகள் வருமா?

உடலின் மற்ற உறுப்புக்களில் கேன்சர் வந்திருந்தால் மூளைக்கும் ரத்தம் மூலம் பரவ வாய்ப்பு உண்டு.

ரேடியோ சர்ஜரிக்கும் ரேடியோ தெரபிக்கும் என்ன வேறுபாடு டாக்டர்?

ஒரே சிட்டிங்கில், அதிக அளவு ரேடியேஷன் தரும் சிகிச்சை ரேடியோ சர்ஜரி. நோயின் தன்மையைப் பொறுத்து, சுமார் 5 முதல் 30 சிட்டிங்குகள் வரை தருவது ரெடியோ தெரபி.

அறுவை சிகிச்சைக்குப் பின் ரேடியேஷன், கீமோதெரபி தேவைப்படுமா டாக்டர்?

எத்தனையாவது கிரேடில் கட்டி பரவியிருக் கிறது என்பதைப் பொறுத்து இந்த சிகிச்சைகள் தொடர வேண்டும். பிறகு மருந்துகள், ஸ்கேன் செதல் இவற்றை மருத்துவர்களின் அறிவுரைப் படி தேவைப்படும் காலம் வரை செது வரவேண் டும். தலைமுடி உதிர்வது, சருமம் நிறம் மாறுவது போன்ற பக்க விளைவுகள் இல்லாமல் இன்று இந்த சிகிச்சை முறைகள் உள்ளன.

அறுவை சிகிச்சைக்குப் பின்னர், வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து மருத்துவர் கண்காணிப்பில் இருக்க வேண்டுமா டாக்டர்?

அறுவை சிகிச்சை முடிந்த பின் ஒருவர் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பலாம். சில மருந்துகளை உட்கொள்வது அவசியம். மருத்துவரின் ஆலோசனைப்படி அவ்வப்போது வந்து உடலை பரிசோதித்துக்கொள்ள வேண்டும். புற்றுநோ அல்லாத கட்டிகள் அனேகமாக மீண்டும் வருவதில்லை. கேன்சர் கட்டிகளாக இருந்தால் சிலருக்கு மறுபடியும் அவை வளர வாப்பு உண்டு. முதலில் மூன்று மாதத்திற்கொரு முறை, பின்னர் ஆறு மாதம், பின்னர் ஆண்டுக்கு ஒரு முறை என்று ஸ்கேன் செய்து வரவேண்டும்.

சிகிச்சைக்குப் பின் மன நலம்?

மூளைக்கட்டி, அதுவும் கேன்சர் என்றவுடன் நோயாளி மட்டுமல்ல, குடும்பத்தினரும் அதிர்ச்சியடைந்து மனம் உடைந்துப் போகிறார் கள். நம்பிக்கையோடு, நேர்மறை எண்ணங் களோடு இதை எதிர்கொள்வதுதான் சிறந்த வழி. உடல் நலம் அளவுக்கு மன நலமும் முக்கியம் அல்லவா? சுறுசுறுப்புடன் இயங்குவது, நடைப்பயிற்சி, அன்றாட சராசரி செயல்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவது என்று வாழ்க்கையை மன உறுதியுடன் எதிர்கொள்ள வேண்டும். அவருக்கு குடும்பத்தாரின் சப்போர்ட்டும் வேண்டும்.

கட்டிகளுடன் இருப்பது, ஆயிரம் பேருடன் போரிடுவதற்கு சமம். அறுவை சிகிச்சை செத பிறகு, பத்து பேருடன் மட்டுமே போர் செவது போன்ற நிலை. நோயுடன் வருவோர், குணமடைந்து, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும் என்பதுதான் மருத்துவர்களாகிய எங்களின் நோக்கம்.

- என மன உறுதியோடு கூறுகிறார் டாக்டர் ஸ்ரீதர்.

(நமக்கு இல்லாத விஷயமாயிற்றே என்று கடந்துபோகாமல் படித்த வாசகர்களுக்கு நன்றி...)
Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :