மலரின் மென்மை நாவினிலே!

அனுபவம் பேசுது
சேலம் சுபா‘அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து

இன்சொலன் ஆகப் பெறின்’ - குறள்.

பொருள் : மனமகிழ்ந்து ஒருவருக்கு ஒன்றைக் கொடுப்பதை விட, சிறந்தது முகமலர்ந்து பேசும் இன்சொல்.

ஆஹா! நம்ம தமிழ்த் தாத்தா வள்ளுவர் எழுதிய குறளோட அர்த்தம்தான் என்ன அருமையா, நாம் தினம் பார்க்கும் வாழ்வியல் அனுபவங்களோட அப்படியே ஒத்துப் போகுது. ஒருவேளை அவர் காலத்திலும் இப்படிப்பட்ட அநாகரிக மனிதர்கள் அவரைப் பாதித்திருப்பார்களோ?

என்ன இது? மொட்டைதாசன் குட்டையில விழுந்த கணக்கா, திடீர்னு திருக்குறளை உதாரணம் காட்டி எதுவும் புரியாத மாதிரி எழுதறேன்னு யோசனையா? இதோ வந்துகிட்டே இருக்கேன் மேட்டருக்கு.

பணத்திலேயே மிதக்கும் பெண்மணி

அவர். ஒரு கருத்தரங்கில் அறிமுகமானவர், பல்வேறு நல்ல கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வார். என்னைச் சகோதரியாக நினைத்து உரையாடியவர், ‘அவசியம் ஒரு நாள் வீட்டுக்கு வாருங்கள்’ என அழைத்தார். (இது நடந்தது கொரோனாவுக்கு முன்.) பிறிதொரு நாள் அவரின் வீட்டு வழியே வேறு ஒரு வேலையாக செல்ல நேர்ந்ததால், அவர் அழைத்தது நினைவுக்கு வர, உள்ளே நுழைந்தேன். காவலாளிக்கு நான் யார் எனும் விஷயத்தைக் கூறி அவரின் அனுமதி பெற்று பங்களாவின் உள் சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன்.

உள்ளிருந்த அறையில் இருந்து அந்தப் பெண்மணியின் குரல் வெகுகாட்டமாக வெளி வந்து, என் காதுகளை அறைந்தது. தொடர்ந்து

சிறிது நேரத்தில் ஒரு இளம் பெண் கண்களை கசக்கியபடி வேகமாக வெளியேறினாள். பார்க்கவே பரிதாபமாக இருந்ததால், அவளைத் தடுத்து நிறுத்தி விபரம் கேட்டேன். தான் அந்த வீட்டின் பணிப்பெண் என்றும் குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தினால்

சொல்லாமலே இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்ததற்கு முதலாளியம்மா வாய்க்கு வந்தபடி கேவலமாகப் பேசி விட்டதாகவும் சொன்ன வள், உள்ளிருந்து அவர் வரும் சப்தம் கேட்டு அழுதபடியே ஓடி விட்டாள்.

சற்றே சிவந்த முகத்துடன் வெளியே வந்த அந்தப் பெண்மணி என்னைப் பார்த்ததும், தன் குரலின் கடுகடுப்பை மாற்றிக்கொண்டு என்னை வரவேற்று பழங்கள் நிறைந்த தட்டை முன் வைத்து உபசரித்தார். ஆனால், எனக்கோ அந்தப் பணிப்பெண்ணின் அழுத முகமே கனிகளில் தெரிந்தது.

பெயருக்கு சிறிது நேரம் பேசிவிட்டு, மெதுவாக, “நான் வரும்போது ஏதோ டென்ஷனில் இருந்தீர்கள் என நினைக்கிறன்” என்றேன். “ஆமாமாம்... வீட்டு வேலைக்காரி யின்(?) பிரச்னைதான். கொஞ்சம் இடம் தந்தா தலைக்கு மேல ஏறிக்கிறாங்க. அதான் இரண்டு போடு போட்டேன்” என மீண்டும் காட்டமான வார்த்தைகளை இறைத்த அவர் மீது எனக்குச் சட்டென்று மதிப்பு இறங்கியது. நல்ல கருத்துக் களைப் பகிர்ந்தவர் எனும் முறையில் அவர் மீது

எனக்கிருந்த மரியாதை தரை மட்டமாகியது. ‘சக மனுஷி மீது வார்த்தை களில் கனிவைக் காட்டத் தெரியாத அவரிடம் எத்தனை செல்வங்கள் இருந்து என்ன பயன்?’ என நினைத்தவாறே அவரிடம் விடைபெற்றேன்.

இதைத்தான்... இதை@ய தான் திருவள்ளுவர் இரண்டே அடிகளில் நமக்குச் சுட்டிக் காட்டியுள்ளார். இப்ப முதலில் நான் கூறிய குறளுக்கும் கட்டுரைக்கும் சம்பந்தம் வந்தாச்சா?

இந்தப் பெண்மணி ஒரு உதா(ரணம்)தான். தினமும் நம்மைச் சுற்றி உள்ள பலரும் இப்படித்தான் தீயைப் போன்ற வார்த்தைகளால் மற்றவர் மனங்களை சுட்டுக் காயப் படுத்துகின்றனர். இறைவன் நமக்களித்த புலன்களில் மிகவும் மேன்மையானதாகவும் புனிதம் மிக்கதாகவும் நான் கருதுவது நாக்கு என்னும் நல் உறுப்பையே. ஏனெனில், மலரை விட மென்மையான வார்த்தைகளையே நாம் பேச வேண்டும் என்பதற்காகவே எலும்புகள் அற்றதாக நாக்கைப் படைத்தான் ஆண்டவன். கடினமான வார்த்தைப் பிரயோகங்களால் சுற்றி உள்ளவர்களின் நட்பையும் உறவையும் நாமே கத்தரித்துக்கொள்ள காரணமாகி விடு கிறோம். சுடு வார்த்தைகள் நம்மை தனிமைத் தீவிற்குள், (‘@காவிட்’ சூழல் இன்று அனை வரையும் தனிமையில் வைத்திருந்தாலும் உரையாடல்கள் இன்னும் மடியவில்லை) தள்ளி மனம் வருந்த வைக்கும். அதுவே, வார்த்தைகளில் மென்மையைக் கலந்து பேசிப் பாருங்கள். உங்கள் காரியங்கள் யாவும் வெற்றியை தேடித் தரும். நட்புகளும் சொந்தங்களும் உங்களுக்கு உதவ விரும்புவார்கள்.

அப்புறம், இன்னொரு முக்கியமான விஷயத்தையும் இங்கு சொல்ல வேண்டும். உங்களைத் தூண்டி விட்டு உங்களிடமிருந்து கடும் வார்த்தைகளைப் பிடுங்குபவர்களிடமிருந்து விலகியே இருங்கள்.

மனித வாழ்க்கை என்பது என்றும் நிலையானதல்ல என்பதை இந்தப் பெருந்தொற்று காலம் நமக்கு உணர்த்தி விட்டது. என்றாலும், சிந்திய நீரைப் போல சிந்திய வார்த்தைகளையும் நாம் திரும்பப் பெற முடியாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். அதிலும் இந்நேரத்தில் பாதிக்கப்பட்ட வர்களுக்கு ஆறுதலான வார்த்தைகளும் தன்னம்பிக்கை வார்த்தைகளும்தான் தேவை என்பதால், மலரின் மென்மை கொண்ட வார்த்தைகளையே பேச வேண்டும் என்று உறுதி எடுப்போம். மேன்மை பெறுவோம்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :