அன்பு வட்டம்


அனுஷா நடராஜன்மறைந்த எழுத்தாளர் கி. ராஜநாராயணன்

- வாசுதேவன், பெங்களூரு

கரிசல் மண்ணின் பாடுகளையும், வெம்மை தகிக்கும் நில மாந்தர்களின் இயல்பான வாழ்வையும் தமது மண்வாச எழுத்துக்களில் பதிவு சேர்ந்தவர் கி.ரா. ஒப்பற்ற இலக்கியப் பெருவாழ்வு வாழ்ந்த தமிழ்ச்”னை! தாம் வாழ்ந்த மண்ணின் பழமொழி, வா#மொழிக் கதைகள், வழக்காறு, பாடல்கள், உழவு வாழ்க்கை, பாலியல் குசும்பு, கண்ணீர், கனவு, பெருமூச்”... என எல்லாவற்றையும் எழுதித் தீர்த்த எழுத்து ஏர்! தமிழக அரசின் இறுதி மரியாதை பெற்ற ஒரே எழுத்தாளரும் இவர்தான்! ’போய் வா பெருசு.’

தமிழக அரசின் தலைமைச் செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள வெ.இறையன்பு பற்றி?

- அயன்புரம் Œத்தியநாராயணன்

‘என்னை மகிழ்விப்பதாக எண்ணி, நான் எழுதிய நூல்களை வாங்கிப் பரிசளிக்க வேண்டாம்’ என்று சொன்னதோடு, அரசுப் பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கு தனது புத்தகங்களை ஆர்டர் செய்யக்கூடாது என்று கண்டிஷன் போட்டு விட்டார். ஆரம்பமே அதிரடியில் தொடங்கியுள்ளது.

நல்லவர், நாலும் தெரிந்தவர் என அறியப் பட்டவர். திறமையும் நேர்மையும் பண்பும் பொறுமையும் உள்ள நல்ல மனிதர். சுறுசுறு தேனீ... தமிழ்க்கேணி... இளைஞர்களின் ஏணி.... வாங்க வெ.இறையன்பு சார்!

‘வையத்துத் தலைமை கொள்ளுங்க!’ தலைமைச் செய்லாளர் நியமனம் உங்களை நம்பியே.

அம்மா - மகள் காம்போ ஆடைகள் குறித்து?

- ஆர்.பத்மப்ரியா, ஸ்ரீரங்கம்

நல்லதுதான் பத்மப்ரியா... ‘இனிமே எனக்கு எதுக்குடி அதெல்லாம்?’ ‘நாலு பேர் பார்த்தா, சிரிப்பாங்க!’ என்று கூச்சப்பட்ட காலமெல்லாம் போயாச்சு! காம்போ ஆடைகள், புதிய அவுட்ஃபிட்டு கள் பெண்களுக்குத் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும். மேலும், நாமும் ஃபிட் ஆக, சின்ன வயசுப் பெண் போல தோற்றம் தரணுமேங்கிற எண்ணம் உருவாகும். உடற்பயிற்சி, டயட்டிங் என ஆர்வம் மேலோங்கினால் மகளிர் நலம் ஆஹா, ஓகோதானே?

பெண்களுக்கு பள்ளி - கல்லூரி சிநேகிதங்கள் திருமணத்துக்குப் பின் தொடர்வது இல்லையே?

- ஆர்.பாரதி, ஸ்ரீரங்கம்

ஒருசில நல்ல நட்புகள் தொடரத்தான் செய்கின்றன. ஆனால், ஆண்களைப் போல, பெண்கள் இளம் வயது நட்பைத் தொடர விரும்புவதில்லை.

டோட்டல் ட்ரான்ஸ்ஃபர்@மஷன்! ‘எக்ஸாம்’னு வந்தால், அரட்டை எல்லாம் மூட்டைக் கட்டிவிட்டு, படிக்க ஆரம்பிச்சுடுவாங்க. ‘வீடு’ன்னு வந்தால், நல்ல பொண்ணா நடிக்க ஆரம்பிச்சுடுவாங்க.

‘குடும்பம்’னு வந்தா பாசத்துல துடிக்க ஆரம்பிச்சுடுவாங்க. ‘புருஷன்’னு வந்தா ஓவர் பொஸஸிவ் ஆகி கடிக்க ஆரம்பிச்சுடுவாங்க!

எச்சச்ச எச்சச்ச... அச்சச்ச அச்சச்ச!

யாருக்காவது எதற்காவது உடனே பட்டமளிக்கும்படி உங் களிடம் கூறினால், யோசிக்காமல் யாருக்கு, என்ன பட்டம் கொடுப்பீர்கள்?

- ஏ.உமாராணி, தர்மபுரி

சற்றும் யோசிக்காமல் நிர்மலா சீதாராமனுக்கு, `merciless tax collector` பட்டம் அளிப்பேன். ஒருவேளை, தேர்தலில் நின்று மக்களைச் சந்தித்து, வோட்டு கேட்டு, எம்.பி. ஆகியிருந்தால், ஜனங்களின் கஷ்டம், பதவியின் பொறுப்பு எல்லாமே தெரிந்திருக்குமே என்னவோ!

லாக்டவுனில் பார்ப்பதற்கு சிறப்பான வேற்று மொழிப் படங்களைச் சிபாரிசு செய்யுங்கள் அனு?

- மீ.யூசுஃப் ஜாகீர், வந்தவாசி

எப்பப் பார்த்தாலும் மலையாளப் படங்களையே சீராட்டிப் பாராட்டி போர் அடிக்குது! இந்த முறை இரண்டு கன்னடப் படங்களைச் சிபாரிசு செய்கிறேன்.

‘ஆ கராள ராத்ரி’ (That darkest night) தயாள் பத்மநாபன் இயக்கியுள்ள சஸ்பென்ஸ் த்ரில் லர் படம்! சின்ன டீடெயிலை மிஸ் செய்தாலும் படம் புரியாது போகலாம்! க்ளைமாக்ஸ் உங்கள் இதயத்தைப் பிழியச் செய்துவிடும் நிச்சயம்!

‘ஒந்து மொட்டய கதே’ (ஒரு மொட்டையின் கதை!)

தலை முடி கொட்டிப் போய் வழுக்கையாகிவிட்ட இளைஞர் அவர்! செய்வதோ கன்னட ஆசிரியர் பணி. இந்த இரண்டு க்வாலிஃபிகேஷன் போதாதா... அவருக்குப் பெண் கிடைக்காமல் போக? கூடவே தாழ்வு மனப்பான்மை வேறு! படம் முழுக்க மணமகள் தேடி அலைகிறார்! கொஞ்சம் மங்களூர் பாஷையும், ராஜ்குமார் பாடல்களும் புரிந்துவிட்டால், செம கல... கல...! ராஜ்.பி. ஷெட்டி என்பவர் எழுதி, நடித்துள்ள இந்தப் படத்தை மிகவும் ரசித்தேன். யதார்த்த காமெடி! அடுத்த வாரம் இரண்டு ஹிந்தி படம். ஓகே?
Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :