நீங்கள் கேட்டவை

கொரோனா தேவிக்குக் கோயில் கட்டியதன் நுண்ணரசியல்...?
தராசுகே.ராஜசேகரன், அஸ்தினாபுரம்

? கொரோனா தேவிக்குக் கோவில் கட்டியிருக்கிறார்களாமே?

கோவை நகரில் ஒரு மண்டலம் (48 நாட்கள்) பூஜைகளுக்குப் பின் உருவாக்கியிருக் கிறார்கள் என்கிறது செய்தி.

தெய்வம் சில மனிதர்களுக்கு அருளிய சக்திகளில் ஒன்று, இப்படித் தெய்வங்களையே உருவக்குவதுதான். இதன் பின்னுள்ள நுண்ணரசியலையும் வணிக நோக்கத்தையும் புரிந்து கொள்ளும் சக்தியையும் மக்களுக்கு அந்தத் தெய்வம்தான் அருளவேண்டும்.

நெல்லை கண்ணன், மதுரை

? பல ரேஷன் கடைகளில் அரசின் இரண்டாயிரம் ரூபாயை தி.மு.க.வினர் வழங்குவது பற்றி?

ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்ற எண்ணம் மக்களிடம் தோன்றிவிட வாய்ப்பளிக்கும் செயல் இது. கொரோனா தடுப்புப் பணியைப் போலவே ஆர்வம் மிகுந்த கட்சிக்காரர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதைத் தடுப்பதும் தி.மு.க. தலைவர் களுக்கு விடப்பட்டிருக்கும் ஒரு சவால். உடனடியாகக் கட்சித் தலைமை தலையிட்டுக் கண்டிக்க வேண்டிய விஷயம் இது.

நெல்லை குரலோன், பொட்டல்புதூர்

? கொரோனா சிகிச்சைக்கு மத்திய அரசு அறிமுகப்படுத்தி இருக்கும் 2DG பவுடர் பற்றி?

2&Deoxy&D Glucose அல்லது சுருக்கமாக 2DG என்கிற மருந்தை நம் நாட்டின் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் D.R.D.O. ஆய்வு மற்றும் மேம்பாட்டுக் கழகம் (Defence Research and Development Organisation) தயாரித்திருக்கிறது.

பவுடராகயிருக்கும் இதைத் தண்ணீரில் கலக்கிக் குடித்தால் போதுமானது. ஆக்ஸிஜன் சிலிண்டர் தேவைப்படும் அளவில் பாதிக்கப்பட்டிருக்கும் கொரோனா நோயாளிகளைக்கூடக் காப்பாற்றி விடுகிறது என்பதைக் கடந்த நவம்பர் முதல் பல கட்ட ஆய்வுகளில் உறுதி செய்திருக்கிறார்கள். இது எப்படி வேலை செய்கிறது?

கொரோனா வைரஸ் என்பது Enveloped Virus. அதாவது மேலே ஒரு உறை இருக்கிறது. உள்ளே போனதும் இந்த உறை ரத்த அணுக்களில் சேர்ந்துகொண்டு வைரஸை கலந்து விடுகிறது. அது மிக வேகமாக அதிகரித்து உடலின் செல்களைச் செயலிழக்க வைக்கிறது.

இந்த பவுடர், உறை கழற்றப்பட்ட அந்த வைரஸ்கள் மீது ஒரு குளுகோஸ் உறையைத் திரும்பப் போட்டு விடுகிறது. இதன் மூலம் அந்த வைரஸ் சில மணிநேரம் செயலிழக்கிறது. இறுதிக்கட்ட சோதனையாக இப்போது சில அரசு மருத்துவமனைகளில் சோதிக்கப்படவிருக்கிறது. இதுவரை முடிவுகளில் மருத்துவர்கள் திருப்தி அடைந்திருக்கிறார்கள். இந்த பவுடர் ஜூன் மாதம் வணிகரீதியாக வரக்கூடும் என்கிறார்கள். உலகிலேயே கொரோனாவுக்கென்றே தயாரிக்கப்பட்ட இந்த முதல் மருந்தைத் தயாரிக்கப் போகிறவர்கள் டாக்டர் ரெட்டீஸ் லேப். இந்த மருந்து விற்பனைக்கு வந்ததும் பெருமளவில் மரணங்கள் குறையும். நோய் குணமாகும் வேகமும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.

மாடக்கண்ணு, ரோஸ்மியாபுரம்

? புதிய கல்விக் கொள்கை சம்பந்தமான மத்திய அரசின் ஆலோசனைக் கூட்டத் தைத் தமிழக அரசு புறக்கணித்தது பற்றி?

தேசிய அளவில் ஒரு கொள்கையை அமல்படுத்தும்போது முதல் கட்டமாக மாநிலங்களில் அரசியலமைப்பில் அதிகாரம் பெற்றவர்களிடம் ஆலோசிக்க வேண்டும், விவாதிக்க வேண்டும் என்பது தான் நடைமுறை. அதிகாரவர்க்கத்துடன் ஆலோசனை என்பது அதற்கு அடுத்த கட்டம். மத்திய அரசு முதல் கட்டத்தைப் புறந்தள்ளி இரண்டாம் கட்டத்தை முதலாவ தாகச் செய்ய முயல்கிறது. இந்த நிலையில் தமிழக அரசின் கடிதத்துக்கு மதிப்பளித்துப் பதிலளிக்காமல் செயலாளர்கள் மட்டும் அழைக்கப்பட்ட கூட்டத்தைப் புறக்கணித் ததில் தவறேதுமில்லை.

கல்கி நேசன், சேலம்

? காங்கிரஸ் கட்சிக்கு இனி எதிர்காலமே இல்லையா?

ஒரு அரசியல் கட்சியின் எதிர்காலம் என்பது அதன் தலைவர்களையும் அவர்கள் எடுக்கும் வியூகங்களையும் பொறுத்தது. காங்கிரஸை பொறுத்தவரையில் அவர்களுடைய ஒரே பிரச்னை அதன் தலைமை... தலைமை மட்டும்தான்.

காயத்திரி, ஈரோடு

? ஷைலஜா டீச்சருக்கு கேரள அமைச்சரவையில் ஏன் இடம் கொடுக்கப்படவில்லை?

அவர் ஒரு ஆசிரியையாக இல்லாவிட்டாலும் கேரள மக்களால் அப்படி அன்புடன் அழைக்கப்படுபவர். நமது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மாதிரி தேர்ந்தெடுக்கப்படாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்றெல்லாம் மிரட்டாமல் தன் செயல்பாட்டால் மக்களின் நன்மதிப்பைப் பெற்றுத் தேர்தலில் வென்றவர். கொரோனா முதல் அலையில் அவரது பணிக்காக க்Nஆல் பாராட்டப்பட்டவர். ஆனாலும் அவரது கட்சி இப்போது அவரை அமைச்சராக்க விரும்பவில்லை. எங்க ஊர் அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்கிறார் கேரள நண்பர்.

சிவசங்கரன், நாகர்கோவில்

? தடுப்பூசி போட ஏன் சிலர் தயங்குகிறார்கள்?

விழிப்புணர்வு இல்லாததும், அறிவி யலை அலட்சியப்படுத்தும் மூடநம்பிக்கைகளும், அதை ஆதரித்து வீணாகப் பரவும் வாட்ஸாப் வதந்திகளும்தான் காரணம். தன்னைத் தடுப்பூசி போட்டுக்கொள்ளக் கட்டாயப்படுத்தினால் தற்கொலை செய்து கொள்வேன் என்று

சொன்ன தன் வீட்டுப் பணியாளரைப் பெரும் பாடுபட்டுச் சம்மதிக்க வைத்தேன் என்கிறார் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளார் ரத்னா. அறிவியலைப் பொறுத்தவரை நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ, அது உண்மையாகவே இருக்கிறது என்பதைத் தயங்குபவர்களுக்குப் புரியவைக்க வேண்டியது நம் கடமை.

வண்ணை கணேசன், சென்னை

? முதல்வர் கொரோனா தடுப்பு நிதிக்கு நன்கொடை குவிகிறதே?

மகிழ்ச்சியான விஷயம்தான். ஆனால் முதல்வரைச் சந்தித்து செக்கைக் கொடுத்துப் போட்டோ எடுத்துக்கொள்ளத்தான் வேண் டுமா? என்ற கேள்வி எழுகிறது. (இம்மாதிரி படங்களை விளம்பரங்களில் பயன்படுத்தக் கூடாது என்று விதிமுறைகளுமிருக்கிறது.) ஒவ்வொரு நாளும் முதல்வரின் நன்றியுடன் நன்கொடைப் பட்டியலை அரசு அறிவிப்பாக வெளியிட்டால் போதுமே. மேலும் இவர்கள் இப்படிச் செய்வதன் மூலம் முதல்வரின் நேரத்தை வீணாக்குகிறார்கள். அண்மையில் ஒரு சமையல் மசாலா தயாரிப்பு நிறுவனம் பெருந்தொகையை ஆன்லைனில் அனுப்பியிருக்கிறார் கள். இதை மற்றவர்களும் பின்பற்ற வேண்டும்.

தெய்வநாயகி, நெல்லை

? தமிழ்த் திரைப்படங்கள் தயாரிப்பு குறைந்து வருகிறதாமே?

இல்லை. மாறாக அதிகரித்திருக்கிறது. அதிகம் மக்களை அடையமுடியவில்லை என்பதுதான் பரிதாபம். பல நூறு கோடிகளில் பிரம்மாண்டத் தயாரிப்பு என்ற டிரென்ட் குறைந்து வருகிறது.

சிறிய பட்ஜெட் (அதுவே இப்போது 5 கோடி) துணிவான, திறமையான இளைஞர் பட்டாளங் களால் உருவாகிக் கொண்டுதான் இருக்கின்றன. கொரோனா, தியேட்டர்கள் கிடைக்காமல் போவது போன்ற காரணங்களால் பல நல்ல படங்கள் சாமானிய திரைப்பட ரசிகனை அடை யாமல் போய்விடுகிறது.

மஹாலஷ்மி, திருமங்கலம்

? லேட்டரல் திங்கிங் என்கிறார்களே, அது என்ன என்று சொல்லுங்களேன்?

வழக்கமான சம்பிரதாயச் சிந்தனைகளிலிருந்து மாற்றி யோசிப்பதுதான் லேட்டரல் திங்கிங். ஒரே நாளில் கிரிகெட் ஆட்டத்தை முடிக்கலாம். அதை யும் இரவு பகலாக மின் விளக்கில் ஆடலாம், வண்ண உடையணிந்து ஆடலாம், தூக்கிக் கொண்டுபோக வேண்டிய பெட்டிக்கு அதிலேயே சக்கரம் வைத்து இழுக்கலாம். பிரஷர் குக்கரில் அல்வா பண்ணலாம் போன்ற ஐடியாக்கள் எல்லாம் இதில் உதித்தவைதான்.

நடராஜன், சிதம்பரம்

? ரெம்டெசிவிர் மருந்து விற்பனையில் ஏன் இந்தக் குழப்பம்?

மக்களின் அச்சமும் அதை மேலும் அதிகரிக் கும் சில தனியார் மருத்துவமனைகளும்தான் காரணம். இது உயிர் காக்கும் மருந்து இல்லை. இதைப் போடுவதால் கொரோனாவிலிருந்து மீண்டுவிட முடியாது என்று உலகச் சுகாதார நிலையத் தலைமை விஞ்ஞானியிலிருந்து உள்ளூர் அரசு மருத்துவமனை தலைவர் வரை சொல்லியாகிவிட்டது. ஆனாலும் சில தனியார் மருத்துவமனைகளில் இந்த மருந்தைக் கொண்டு வரக் கட்டாயப்படுத்தியதால் எழுந்த பதற்றத்தின் விளைவு இது. இந்த நிலை மத்திய அரசின் அனுமதியில் விற்கப்படும் மருந்தில் மிகப் பெரிய கறுப்புச் சந்தைக்கு வழிவகுத்துவிடும் என்று கருதிய மாநில அரசு அதைத் தடுக்க நேரடி விற்பனையைக் கையில் எடுத்தது. அரசே விற்பனை செய்கிறது என்ற செய்தி மக்களுக்கு அந்த மருந்தின் மீதான நம்பிக்கையை மேலும் அதிகரித்தது. அதன் விளைவே இந்த நீண்ட வரிசை, காத்திருப்பு எல்லாம். இப்போது நிலைமை சீராகிவிட்டது.

கிருஷ்ணன், மதுரை

? நாயன்மார் பாடல்கள் அனைத்தும் ஒரே தொகுப்பாக வெளியாகியிருக்கிறதா?

இணையத்தில் மதுரை திட்டம் (கணூணிடீஞுஞிt Mச்ஞீதணூச்டி) என்று தேடுங்கள் கிடைக்கும். இது மட்டுமில்லை, அந்தச் சுரங்கத்தில் பல பொக்கிஷங்கள் இருக்கின்றன.
Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :