ரைட்டர்

சாதிப் படமல்ல, ஒடுக்குமுறைக்கெதிரான படம்! - பிராங்க்ளின் ஜேக்கப்
ராகவ்குமார்“தமிழகக் காவல் துறை என்றாலே அராஜகம், ஊழல் என்ற பேர் நிலைத்திருக் கிறது. அந்தக் காவல் துறைக்குள் பல ஒடுக்கு முறைகளும், அதிகார பேதங்களும் உள்ளன. நான் பார்த்த, கேள்விப்பட்ட விஷங்களைப் படமாக்க எண்ணினேன். இதன் முயற்சிதான் ‘ரைட்டர்’ திரைப்படம்” என்கிறார் இயக்குநர் பிராங்க்ளின் ஜேக்கப். இவர் பா. ரஞ்சித்தின் சினிமா பட்டரையில் இருந்து வந்தவர். இந்தப் படத்தை ‘நீலம்’ நிறுவனம் தயாரிக் கிறது.

’ரைட்டர்’ காவல்துறை அதிகார அடக்குமுறை பற்றிப் பேசுகிற படமா?

“நம் வாழ்க்கையில் போலீஸ் என்ற விஷயத்தைக் கடக்காமல் இருக்க முடியாது. போலீஸ்காரர்களின் கோபத்தை, வன்மத்தை, ஏக்கத்தை, பரிதாபத்தை நாம் கடக்காமல் இருக்கமுடியாது. பாஸ்போர்ட் ஒப்புதல் பெற, போக்குவரத்து விதிமீறல்கள் என பல கட்டங்களில் காவல் துறையை எதிர்கொண் டிருப்போம். காவல் துறை என்பது அரசின் முகமாக இருக்கிறது. நமது வாழ்வின் தவிர்க்க முடியாத ஓர் அங்கமாக இருக்கும் காவல் துறையைப் பற்றிப் பதிவு செய்ய நினைத் தேன். ரைட்டர் உருவானது.”

கமிஷனர், இன்ஸ்பெக்டர் என பல சுவாரசியமான விஷயங்கள் இருக்க, அதிகம் பேர் அறிந் திடாத ரைட்டர் பற்றிச் சொல்ல வந்தது ஏன்?

“காவல் துறையினரின் செயல்பாடுகளைப் பற்றியும், போலீஸ் ஸ்டேஷனுக்கு அடிக்கடி சென்று வருபவர்களுக்கும் ரைட்டர் பணி பற்றி நன்றாகத் தெரியும். காவல் நிலையங் களுக்கு வரும் வழக்கின் முடிவையும் போக் கின் தன்மையையும் ஆய்வாளர்தான் முடிவு செய்வார். இருந்தாலும் காவல் நிலைய எழுத்தர் எழுதும் வழக்கின் ஷரத்துக்கள் பல விஷயங்களுக்குப் பயன்படுகின்றன. இந்தப் படத்திற்காகப் பல்வேறு கேஸ் கட்டுகளைப் படிக்க நேர்ந்தது. அப்போது எழுத்தரின் பணி பற்றி நன்றாகப் புரிந்தது. காவல் துறையின் யதார்த்தத்தை எழுத்தர் கதாபாத்திரம் வழி யாகச் சொல்ல நினைத்தேன். இதனால் யதார்த்த காவல் நிலையத்தை ரசிகனின்

கண்முன் கொண்டுவரமுடியும் என்று நம்புகிறேன்.”

நாயகனாகச் சமுத்திரக்கனி தேர்வு ஏன்?

“இந்தக் கதையை முதலில் பல்வேறு நடிகர்களிடம் சொன்னேன். பெரிய அளவில் ரெஸ்பான்ஸ் இல்லை. ரஞ்சித் சாரை அணுகிய போது, ‘காலா படத்தில் சமுத்திரக்கனி சாருடன் ஏற்பட்ட நட்பு இன்னமும் அப்படியே இருக்கிறது. போய் உன் கதையைச் சொல்லிப் பார்’ என்றார். என் ஸ்க்ரிப்ட் புத்தகத்தைப் படித்துவிட்டு, கனி சார் ரைட்டராக மாறிச் சந்தேகங்களைக் கேட்க ஆரம்பித்துவிட்டார். ரைட்டர் கேரக்டரில் 58 வயதானவராக நடிக் கும்போது, தன் வயதை மீறிய, உடல் மொழி யில் சிறப்பாக நடித்துக் கொடுத்திருக்கிறார்.”

கதாநாயகிகள் பற்றிச் சொல்லுங்களேன்?

“இனியா முக்கிய ரோலில் நடிக்கிறார். மகேஸ்வரி மற்றும் லிசி என்ற இரண்டு டி.வி. பிரபலங்களை நடிக்க வைத்திருக்கிறேன்.”

நீலம் நிறுவனப் படங்களில் வரும் தலித் பிரச்னைகள் பற்றி இப்படமும் பேசுமா?

“தலித் என்ற சொல்லுக்கு நொறுக்கப்பட்ட வர்கள் என்று பொருள். உலகம் முழுக்க இப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்கள். நிலத் திற்கு நிலம், தலித்துகள் மாறுபடுகின்றனர். நமது மண்ணில் இது ஜாதிரீதியாக ஒடுக்கப் படும் மக்களைக் குறிக்கலாம். முதன்முதலில் தலித் என்ற சொல் ஒரு பெண்ணை அடை யாளப்படுத்தி இருக்கலாம். ரைட்டர் படம் ஜாதிப் பிரச்னையைப் பேசும் படம் இல்லை. ஆனால் அதிகார வர்க்கத்தின் உள்ளே நடக்கும் ஒடுக்குமுறைகளைப் பற்றிப் பேசுகிறது.”

உலக சினிமா எங்கேயோ பறந்து விரிந்து கொண்டிருக்க உங்களைப் போல, புதிதாக வரும் இளைஞர்கள் இந்த இசங்களுக்குள் சிக்கிக் கொள்ளலாமா?

பெருநகரங்கள், நகரங்கள் தாண்டி கிராமத் திற்குள் சென்றால், இந்தத் தத்துவங்களுக்கான தேவை பற்றிப் புரியும். இரட்டைக்குவளை முறை இருப்பதை அவ்வப்போது பேப்பரில் பார்க்கிறோம். ஆணவக் கொலை செய்தவர்களை ஏதோ போர் வீரர்களைப் போல் சித்திரித்து மகிழும் அவலத்தைச் சமூக வலை தளங்களில் காண்கிறோம். தேர்தலில் வெல் லும் தலித் தலைவர்களுக்குப் பல ஊராட்சிகளில் நாற்காலி கூட தருவதில்லை. இதை சினிமாவில் பேசும்போது விவாதப் பொருளாக மாறுகிறது. இதை இங்கே பேசாமல் வேறு எங்கே போய் பேசுவது? உலக சினிமா என்று கொண்டாடப்படுவதெல்லாம் அந்த நாட்டு மக்களின் மண்சார்ந்த பிரச்னைகளைப் பற்றிப் பேசிய படங்கள்தான். இதை வணிகத் துடன் கலந்து சொல்லும்போது வெற்றி அடைகிறது.”

உங்களின் அடுத்த படம் எது சம்பந்தப்பட்டது?

“மண்சார்ந்த பிரச்னைகளைப் பற்றியதாக, கமர்சியல் தளத்தில் இருக்கும்.”
Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :