வாய் மணம்


லதானந்த்
ஓவியம் : பிரபுராம்மங்கை இவள் வாய் திறந்தால் மல்லிகைப் பூ வாசம்.’ புன்னகை மன்னன் அப்படிங்கிற படத்திலே கமலஹாசனும் ரேகாவும் பாடற பாட்டுல ஒரு வரி இது.

Face is the index of mind அப்படினு ஒரு பழமொழி இருக்கு! முகத்திலேயும் வாய் அப்படிங்கிறது குறிப்பிடத்தக்க பார்ட். வாயால பல வேலைகளையும் செய்யலாம். பேசுறது, சாப்பிடுறது, பலூன் ஊதறது

இப்படி... அப்படிப்பட்ட வாயைச் சுத்தமா வெச்சிருக்க வேண்டாமா?

நாற்றம் அப்படிங்கிற சொல் முதல்ல ‘நறுமணம்’கிற பொருளிலதான் புழங்கி வந்திருக்கு.

கடவுள் வாயின் நறுமணத்தைச் சொல்றப்போ,

‘கருப்பூரம் நாறுமோ கமலப் பூ நாறுமோ

திருப் பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ’

என்று கண்ணபிரானின் வாய் மணத்தைப் பாடிப் பரவசமடைந்த ஆண்டாளின் பாடல் வரிகள் இவை. நம்ம சம காலக் கவிஞர் முடியரசு,

‘காவியப் பாவை’ங்கிற தன்னோட கவிதை நூலில் ‘ஆற்றங்கரைக் காதலி’ன்ற கவிதையில,

“ஆற்றங்கரையினிலே - ஒரு நாள்

ஆடி அமர்ந்திருந்தேன்

நாற்ற மலர்வீச நடந்து

நங்கை ஒருத்தி வந்தாள்” அப்படிங்கிறார்.

ஆனா, இந்தக் கட்டுரையில நாற்றம் என்ப தற்கு இப்பப் புழங்கிற துர்மணம் என்பதையே அர்த்தப்படுத்திக்குவோம்.

கட்டுரை ஆரம்பத்திலே சொன்ன மாதிரி வாயத் திறந்தா நறுமணம் வந்தா எவ்ளோ சொகமா இருக்கும்? ஆனா, நெசத்தில அப்பிடியா இருக்கு?

எதனால வாய் நாற்றம் ஏற்படுது? எப்படி இது வராம தடுக்கிறது? வந்திட்டா எப்படிப் போக்கிறதுன்றதைப் பத்தி லேசாப் பார்ப்@பாம்.

டாக்டருங்க வாய் நாற்றத்தை ‘ஹாலி டோஸிஸ்’ (halitosis) அப்படினு சொல்லுவாங்க.

வாய் நாற்றம் ஏற்பட பேக்டீரியாக்களே முக்கியக் காரணம். வாய்க்குள்ளாற அதுங்க வளர்றதுக்குத் தேவையான ஈரம், வெதுவெதுப்பு, உணவு எல்லாம் கெடைக்கிறதால மில்லியன் கணக்கிலே ஒவ்வொருத்தர் வாயிலேயும் பேக்டீரியாக்கங்க இருக்கு.

அதுவும் காலைல எந்திரிச்சதும் அநேகமா எல் லாருக்கும் வாய் நாற்றம் இருக்கும். ஏன்னாப் பகல்ல உமிழ்நீர் அதிக மாச் சுரக்கும். இது பேக்ட்டீரியாக்களைக் கழுவிட்டுப் போயிடும். ராத்திரி உமிழ்நீர்ச்

சுரப்புக் குறைவு. அதனால விடிஞ்சு எந்திருச்சதும் ஸ்மெல் அடிக்கும்.

சரி! பொதுவா என்னென்ன காரணங்கள்?

முதல் காரணம்: நெறையப் பேரு ஒழுங்காப் பல்லே வௌக்கிறதில்லீங்க. ‘எடுத்தது கண்டனர் இற்றது கேட்டனர்’ அப்படிங்கிற மாதிரி வேகமாப் பல்லை விளக்கிடுவாங்க. ஈறுகளைத் தேய்க்க மாட்டாங்க. நாக்கைக் க்ளீன் பண்ண மாட்டாங்க.

நல்லாக் கேட்டுக்கோங்க! ஒரு நாளைக்குக் கொறைஞ்சது ரெண்டு தடவையாவது பல்லை வௌக்குங்க. குறிப்பா, படுக்கப் போறதுக்கு முன்னாடி ரொம்ப அவசியம். அதுவும் எதாவது கலாச்சார நிகழ்வுகளில் ஈடுபடற உத்தேசம் இருந்தா, நல்லா விளக்கிடுங்க. புதுசா கல்யாணம் ஆகிறவிங்க டபுள் சாக்கிரதை. First impression is the best impression!

ரெண்டாவது காரணம்; வாயில புண் இருக்-கிறது அல்லது ஈறுகளிலே இன்ஃபெக்க்ஷன் இருக்கிறது... தொண்டை, நுரையீரல் வியாதிகள் இருந்தாலுங்கூட வாய் நாறும். குடல்ல புண் இருந்தாலும் வாய் நாறும்.

சில வெளிக்காரணிங்களும் இருக்கு. வெங்-காயம், பூண்டு, இதெல்லாம் தின்னா அந்த

வாசனை ரொம்ப நேரம் இருக்கும். அதே மாதிரி பொடி போடுறது, வெத்தலை, புகையிலை, ஜர்தா இந்த மாதிரி ஐட்டங்களை யூஸ் பண்றதும் வாசனை வீசச் செய்யும். சிகரெட் - கேக்கவே வேண்டாம். எத்தனை தடவை வாய் கொப்-புளிச்சாலும் நிகோட்டின் நாற்றம் போகவே போகாது. ட்ரிங்க்ஸ் நிச்சயமா தன்னோட

வாசனையைக் காட்டிடும்.

மூணாவது காரணம்: வாய் ஒலர்ந்து போயிடறது. இதை டாக்டர்கிட்டக் காட்டிச் சரியான மருந்து

சாப்பிட்டா குணமாயிடும்.

நாலாவது - சிஸ்டமிக் நோய்கள்ங்கிற நீரிழிவு, கிட்னி சம்பந்தமான நோய் கள் இருந்தாலும் வாய் நாறும்.

பொதுவாவே, நமக்கெல்லாம் ஒரு வழக்கம். பல்லிலே ஏதாவது கோளாறுனாத்தான் பல் டாக்டரைப் பாப்போம். ஒரு கம்ப்ளைன்ட்டும் இல்லைனாலுங்கூட ரெண்டு வருசத்துக்கொரு தடவையாச்”ம் பல் டாக்டரைப் பாத்து செக்கப் பண்ணிக்கணும்.

நெறைய தண்ணி குடிக்கிறது நல்லது.

அடிக்கடி வாயக் கொப்புளிச்சுத் துப்பலாம். முடியாட்டி முழுங்கிரலாம். ஒண்ணும் தப் பில்லே! ஏதாச்சும் இடையில தின்னா வாயை அவசியம் கொப்புளிக்கணும்.

ஏலக்காயை மெல்றது தற்காலிக ரிலீஃப் தரும். அங்கீகரிக்கப்பட்ட மவுத் வாஷும் யூஸ் பண்ணலாம்.

வாய் சுத்தம் என்பது வாயின் சுத்தம் மட்டும் அல்ல; வாயிலிருந்து வரும் வாக்கின் சுத்தமும் கூட.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :