தித்திக்கும் திகட்டாக்கனி


ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு



முக்கனிகளில் முதல் கனி மாம்பழம்தான். தெய்வங்களுக்கு வைத்துப் படைப்பதில் ஆகட்டும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து ருசித்து உண்பதிலாகட்டும் மாம்பழ@ம முதலிடம் வகிக்கிறது. மாம்பழங்களில் பலப்பல ரகங்கள் அவ்வப்போது அந்தந்தப் பகுதிகளில் விளைந்து கொண்டுதான் இருக்கின்றன. அவற்றில் இமாம் பசந்து மாம்பழம் தனித்துவம் ஆனது. தனிச்சுவை யினைக் கொண்டது. இமாம்பசந்து மாம்பழம், திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீமான் தாத்தாச்சாரியார் தோட்டங்களில் மட்டுமே விளைந்து வருகிறது.

இதற்கு (KING OF MANGOES) மாம்பழங்களில் அரசன் என்கிற சிறப்புப் பட்டமும் உண்டு. காரணம், அதன் இனிப்பு. தித்திப்@பா தித்திப்பு! (சர்க்கரை நோய் சம்பந்தப்பட்டவர்கள் அந்தப் பக்கம் எட்டியே பார்க்கக் கூடாது). சில மாம்பழ வகைகளில் இனிப்புடன் சற்றே புளிப்புச் சுவையும் மிதமாகக் கலந்திருக்கும். இமாம்பசந்து அப்படி யல்ல. நூற்றுக்கு நூறு இனிப்புச் சுவை கொண்டதாகும்.

ஸ்ரீரங்கத்தில் மூலத்தோப்பு பகுதியிலும் மேலும் சில பகுதிகளிலும் தாத்தாச்சாரியார் தோட்டங்கள் உள்ளன.

“மொத்தம் சுமார் ஆயிரத்து ஐநூறு மா மரங்கள் உள்ளன. அவற்றில் எழுபது சதவிகித மா மரங்கள் இமாம்பசந்து மற்றும் பங்கனபள்ளி வகை மரங்கள்தான். மாம்பழச் சுவைதனில் பந்தயத்தில் இமாம்பசந்துக்கு அடுத்த வரிசையில் வந்து நிற்கக் கூடியது, பங் கனபள்ளி. மாங்கன்றுகள் வைத்ததில் இருந்து நான்கு வருடங்களில் காய்க்கத் தொடங்கி விடும். கோடை காலங்களில் இவற்றுக்குத் தண்ணீர் விட்டுக் கொண்டே இருக்க வேண் டும். மார்கழி, தை மாதங்களில் மாம்பூக்கள் பூக்கத் தொடங்கும். அப்போது இவற்றுக்கு பனியும் வெயிலும் நண்பர்கள். பெரு மழையானது பெரும் பகைவன். பெரு மழைக் காலங்களில் மாம்பூக்கள் தரையில் உதிர்ந்து விடும். மாசி, பங்குனி, சித்திரை மாதங்களில் காய்கள் காய்க்கத் தொடங்கும். சித்திரை பதினைந்து தேதிக்கும் மேல் மாங்காய் அறுவடை செய்யலாம். மாங்காய் அறுத்து அவற்றைப் பழுக்க வைக்க லாம். ஓரளவுக்கு ஆடிப் பதினெட்டு வரை மாம்பழங்களின் தனியான வாசம் வீசிக் கொண்டேயிருக்கும்” என்கிறார் தோட்டத்தின் வேளாண் ஆலோசகர் அக்ரி ராமலிங்கம்.

“பெட்டிகளில் வைக்கோல் போட்டு பேக் பண்ணித் தரப்படும் இமாம் பசந்து மாங்காய்கள் மூன்று நான்கு நாட்களில் நன்றாகப் பழுத்து விடும். அதனை நான்கைந்து நாட்களுக்கு வைத்துச் சாப்பிடலாம். மாம்பழம் விரும்பிச் சாப்பிடுபவர்களில் நூற்றுக்குத் தொண்ணூறு நபர்கள் இந்த இமாம்பசந்து மாம்பழமே கேட்டு வாங்கிச் செல்கின்றனர். மேலும், இங்கு தாத்தாச்சாரியார் தோட்டத்தில் ஆப்பிள் பச்சரிசி, மால் பச்சரிசி எனும் மாங்காய்கள் விளைந்து வருகின்றன. இந்த இரண்டு வகை மாங்காய்களும் வேறு எங்கும் கிடையாது. மாங்காய்னா புளிக்கணும் இல்லியா? மேற் கண்ட இரண்டு வகை மாங்காய்களும் புளிக் கவே புளிக்காது. ஆப்பிள் பச்சரிசி மாங்காயைக் கடித்துத் தின்று பார்த்-தால், ஆப்பிள் மாதிரியே இருக்கும். இதனை ‘கிரீன் ஆப்பிள்’ என்றும் சொல்வதுண்டு. இந்த இரண்டு ரகங்களையும் காயாகத்தான் சாப்பிட வேண்டும். அவற்றைப் பழுக்க வைக்கக் கூடாது” என்கிறார் தோட்டத்தின் நிர்வாகியான சதிஸ்குமார் மருதமுத்து.

ஸ்ரீரங்கம் தாத்தாச்சாரியார் தோட்டத்திலும், மாபழச்சாலை கடைகளிலும் இமாம்பசந்து, பங்கனபள்ளி, ருமானி, செந்தூரம், கல்லா மணி, நீலம் மற்றும் நிறைய வகை மாம்பழங்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. “எங்கள் தோட்டத்தில் மா மரங்களுக்கு இயற்கை உரமே (தழை யுரம்) அதிகமாகப் பயன்படுத்துகிறோம். இமாம்பசந்து என்பது எங்கள் சித்தப்பா தானாகவே தனியாக உருவாக்கிய ஒட்டுரக மாங்கன்று ஆகும். அவர் காலத்திலும் அதற்குப் பின்னரும் எங்கள் தோட்டங்களில் ஒட்டுரகமான ‘இமாம்பசந்து’ மாங்கன்றுகள் நிறையவே வைத்து வளர்க்கத் தொடங்கிவிட்டோம். எங்கள் தோட்டத்து இமாம்பசந்து மாம்பழத்தின் தனி ருசிக்கு களிப்புக் கலந்த வண்டல் மண்தான் முக்கியக் காரணம். அது மட்டுமல்லாது; எங்களின் தொய் வில்லாத நேரடி கண்காணிப்பும் மிக மிக முக் கியம் ஆகும். இங்கு விளையும் இமாம்பசந்துக்கு ‘ஸ்ரீரங்கத்துக் கல்கண்டு’ என்கிற அடை மொழியும் உண்டு.” என்கிறார் ஸ்ரீரங்கம் தாத்தாச்சாரியார் தோட்டங்களின் உரிமையாளர் மற்றும் பொறுப்பாளருமான நந்தகுமார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :