சிவாய நம விளக்கம்


கீதா வீரப்பன், காஞ்சீபுரம்
ஓவியம் : சேகர்ஒரு முறை நாரதர் தன் தந்தை பிரம்மாவிடம் சென்று, “தந்தையே! ‘சிவாய நம’ என்பதன் பொருளை எனக்கு விளக்கிக் கூறுங்கள்” என்று வேண்டினார்.

பிரம்மா, “நாரதா அதோ அங்கே ஒரு வண்டு அமர்ந்துள்ளது. அதனிடம் போய் உன் சந்தேகத்தைக் கேள்” என்றார்.

நாரதரும் அதன்படியே அந்த வண்டு அருகில் சென்று தனது சந்தேகத்தைக் கேட்டார். அடுத்த விநாடி அந்த வண்டு சுருண்டு விழுந்து இறந்தது.

உடனே தந்தையிடம் வந்த நாரதர், “தந்தையே, என் சந்தேகம் தீர்ந்தது. இந்த நாமத்தை யார் கேட்கிறார்களோ அவர்கள் உடனே இறந்து விடுவார்கள்” என்றார்.

“நாரதா! நீ தவறாகப் புரிந்துகொண்டாய். அதோ அந்த மரத்தில் இருக்கும் ஆந்தையிடம் உன் வினாவை கேட்டு வா” என்று பிரம்மா கூற, அப்படியே செய்தார் நாரதர்.

உடனே அந்த ஆந்தையும் இறந்து விட்டது.

அதிர்ச்சியடைந்த நாரதரிடம் “மகனே! கலங்காதே! அதோ ஒரு பசு இப்@பாதுதான் ஒரு கன்றை ஈன்று உள்ளது. அந்த கன்றுக் குட்டியிடம் உன் @கள்வியைக் @கள்” என்று கூறினார் பிரம்மா. நாரதர் மனதிற்குள் பயந்தபடி@ய அந்த கன்றுக்குட்டியிடம் சென்று, தன் சந்தேகத்தைக் கேட்க, அந்தக் கன்றும் உடனே இறந்துவிட்டது.

பதைபதைத்த நாரதர், “இதென்ன தந்தையே! பூச்சி, பறவை, விலங்கு அனைத்தும் இறந்து விட்டன. என் கேள்வியை மனிதனிடம் கேட்டால் என்ன நடக்குமோ?” என்று வினவினார்.

பிரம்மா உடனே, “ஆம்... இவை அனைத்திற்கும் விதி முடிந்து விட்டது. அரண்மனையில் ராஜாவுக்கு குழந்தை பிறந்துள்ளது. அந்தக் குழந்தையிடம் போய் உன் கேள்வியைக் கேள். அப்போது உனக்குச் சரியான விளக்கம் கிடைக்கும்” என்று கூறினார்.

மன்னரின் குழந்தைக்கு ஏதேனும் ஆகிவிட்டால் என்ன செய்வது? என்று முதலில் நாரதர் கலக்கம் அடைந்தார். ஆனால், தந்தையின் கட்டளையை மீற முடியாமல் அரசரின் குழந்தையிடம் சென்று தனது கேள்வியைக் கேட்டார்.

அப்போது அந்தக் குழந்தை, “நாரதரே... ‘சிவாய நம’ என்ற மந்திரத்தைக் கேட்டதால் வண்டாக இருந்த நான், பறவை, மிருகம் என பிறப்பெடுத்து இப்போது பிறவியில் உயர்ந்த மானிடப் பிறப்பு எடுத்துள்ளேன். இதுவே என்னை இறைவனிடம் சேர்க்கும் ஒப்பற்ற பிறவியாகும்” என்று பேசியது.

“சிவாய நம என்று உள்ளம் உருகக் கூறினால், இந்தப் பிறவியில் இருந்து அவர் விடுபடுவார்” என்று மேலும் கூறியது. இதைக் @கட்ட நாரதர், சந்தேகம் தெளிந்தார்.

பிறவிப் பிணியில் இருந்து விடுபட ‘சிவாய நம’ என்@பாம். இறைவன் திருவடிகளைச் சேருவோம்.

- ‘சைவ சித்தாந்த வகுப்பில்’ கேட்டது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :