சமூக ஊடகம் திறன் வெளிபாட்டின் உச்சம்!


உஷா ராம்கிசமூக ஊடகம்னா வீடியோ பார்ப்போம், சில நேரம் ‘யாம் பெற்ற துன்பம் பெறுக மற்றவர்’னு அப்படியே அதை ஃபார்வர்ட் செய்வோம். சமூக ஊடகம் பல பேருக்கு ஒரு பொழுதுபோக்குத் தளமா மட்டும் இருக்க, இன்னும் பல பேர், குறிப்பாக பெண்கள் இதன்மூலம் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், வியாபாரத்தை விரிவடையவும் செய்கிறார்கள். இவர்கள் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்று சர்வதேச தொழில் முனைவோர் அல்ல, நம்ம ஊர் இல்லத்தரசிகள். குடும்பத்துக்கான நேரத்தையும் கவனத்தையும் விட்டுக்கொடுக்காமல் பிடித்ததை வீட்டிலிருந்தபடி செய்யலாம்.

ஒரு ஐம்பது வயதுக்குப் பிறகு கிட்டத்தட்ட முழுநேர ஆர்வமாகவும் இது மலர்கிறது.

மஹாரஸா - சாரா ப்ரேம்குமார்

மஹாரஸா என்னும் ஆன்லைன் வர்த்தகத் தொழிலை நடத்தும் சாரா ப்ரேம்குமார்க்கு கல்லூரி நாட்களிலிருந்தே உணவில் அதீத ஆர்வமிருந்தது. “பெரும்பாலும் நல்ல உணவுன்னா நாம பந்தி கட்டி உட்காருவோமே, இதிலென்ன அதிசயம்” என்கிறீர்கள் இல்லையா? உணவு சாப்பிட ஆர்வம் ஓகே... அதை அதீத ஆர்வத்தோடு செய்யறவங்க கம்மி தானே! சாராவைப் போல மிகச் சில பெண்கள் தான் நண்பர்கள், உறவினர், தெரிந்தவர் என்று தன் உலகத்தை கைமணத்தால் விரிவாக்கி சமூக ஊடகம் மூலம் பிரமாதப்படுத்துகிறார்கள்.

சாராவின் திருமண வாழ்க்கையில் முழுநேர ஹோம்-மேக்கர் ஆனதில் அவருக்கு கொள்ளை மகிழ்ச்சி. எப்போதும் விதவிதமாக சமைத்து குடும்பத்தில் இருப்பவர்களுக்கு பரிமாறுவார்.

இந்த ஆர்வத்தின் அடுத்த கட்டம், தெரிந் தவர்களுக்கெல்லாம் வகை வகையான பொடிகள், ஊறுகாய், தொக்கு எல்லாம் செய்து கொடுப்பதில் தொடங்கி, பிறகு வெளிநாட்டிற் கெல்லாம் பிரயாணம் செய்யத் தொடங்கியது சாராவின் பொடி வகைகள்.

இப்படி மெல்ல மெல்ல வட்டம் வளர, 2019ல் ஒரு சின்ன ரெஸ்டாரென்ட் தொடங்கும் ஆசை வந்தது. பிரத்யேக தென்னிந்திய உணவு வகைகள் - அதாவது காஞ்சிபுரம் இட்லி, மோர்க்களி, ஃபில்டர் காபி போன்றவை (ஆஹா... இதெல்லாம் எனக்கு ரொம்பப் பிடிக்குமே!). சுற்றியிருந்தவர்கள் கஃபே நடத் துவது மிகவும் சிரமமான வேலை என்று

சொன்னதால் யோசிக்கத் தொடங்கினார். “ஆனால், அது தொடங்காததும் நல்லாதா யிற்று” என்கிறார். ஏனென்றால், இந்த எண் ணம் வந்தது 2019ம் ஆண்டு இறுதியில். தொடங்கியிருந்தால் நம்ம அண்ணன் கொரோனா (இவ்வளவு மோசமான கிருமி பெண்ணாக இருக்க வாய்ப்பில்லை) எல்லாவற்றையும் நாசமாக்கியிருப்பாரே.

அதற்குப் பிறகு உலகமே ஆன்லைன் மயமாக, சாராவின் மஹாரஸாவும் சமூக வளை தளங்களில் பிரவேசமானாள். பிரபலமான பொடி வகைகள் தவிர மைசூர் ரசப் பொடி, மசாலா பால் மிக்ஸ், அடை மாவு மிக்ஸ், அங்காயப் பொடி எல்லாம் இவரது சிக்னேச்சர் வகைகள். வலைதளம் குறித்து விஷயம் தெரிந்த தோழி ஜெயஷ்ரீ அவரை ஊக்குவிக்க, முகநூல் மற்றும் இன்ஸ்ட்டாவில் அவரது தயாரிப்புகள் விளம்பரப்படுத்தப்பட்டன. தெரிந்தவர்கள், குறிப்பாக இவரது தயாரிப்பை வாங்கி ருசி கண்டவர்கள், இவரைப் பற்றி ஆத்மார்த்தமாக “ஆஹா ஓஹோ” சொல்ல, சமூக ஊடகத்தில் பிரபலமாகி வருகிறது மஹாரஸா.

“உணவுப் பொருள்களுக்கு ஒரு வருட எக்ஸ் பைரி போடுவது என்னால் ஏற்றுக் கொள்ள முடியாத விஷயம். அதன் குணம் மணம் என் பதே இருக்காதே. ஆர்டரின் பேரில், உடனுக் குடன் செய்வதுதான் எனக்குப் பிடிக்கும். பக் கத்து கோடம்பாக்கம் ஆகட்டும், அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் ஆகட்டும், கேட்டவுடன் வேலையில் இறங்கிடுவேன். மூன்று உதவி யாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் சுத்தம் செய்து, மெல்ல மின்விசிறிக் காற்றில் கறிவேப் பிலை, கொத்துமல்லி போன்றவற்றை ஆற வைத்து, அவரவர்க்கு தேவையான சுவையில் மணமாக செய்து கொடுப்பது என் கையால்தான். சுவைப்பவர்கள் மகிழ்ந்தால் எனக்குத் திருப்தி. எனக்கு வரும் ஒவ்வொரு பாராட்டும் நான் பொக்கிஷமாக நினைக்கும் மெடல். அதை யெல்லாம் பணத்தால் ஈடுகட்ட முடியாது உஷா.”

சமூக ஊடக செல்வாக்கு மிக்கவர் என்ற வகையில், புதிதாக தன் திறமைகளை அல்லது வியாபாரத்தை வலைதளத்தில் விளம்பரப் படுத்த வேண்டுமென்றால், எதை செய்தாலும் அதை சூப்பராக செய்யவேண்டும் என்பது தான் இவரது டிப்.

திலோடஸ்ஷக்தி- ஹேமா கண்ணன் சின்ன வயதில் அம்மாவோடு வாசலில் கோலம் போட்ட அனுபவம் நம்மில் நிறைய பேருக்கு இருக்கும். ஆனா, வாழ்க்கைக் கோலம் மாற மாற, ‘கோலமெல்லாம் போட நேர மில்லை... ஸ்டிக்கரை ஒட்டுவியா’ என்ற ரீதியில் வாழ்க்கை பலருக்கும் மாறியிருக்கும்.

மும்பையில் வசிக்கும் ஹேமா கண்ணன், 2014ம் வருடத்திலிருந்து தினமும் வாசலில் வித விதமான கோலங்கள் போடுகிறார். அவர் ஃப்ளாட் டின் வாசலில் இருக்கும் காரிடார், தினமும் இவர் கோலங்களால் பொலிவடைகிறது. சில நாட்கள் இரண்டு வேளைகளும் கோலங்கள் போடுகிறார். திருமணமான புதிதில், வாசலில் கோலம் போட்டாலும், அதை பெறுக்குபவர்கள் கருமமே கண்ணாகினார் என்று அழித்துவிட்டுப் போக, அவருக்கு ஆர்வம் இல்லாமல் இருந்தது. அதன் பிறகு, அம்மா மார்கழி மாதக் கோலங்கள் பற்றியும் தான் வாசலில் போடு வதற்குமுன் காகிதத்தில் போட்டுப் பழகு வதைப் பற்றியும் சொன்னபோது, ஹேமா வினுள் தூங்கிக் கொண்டிருந்த கோலராணி ஹேமா புதிய உற்சாகத்தோடு புறப்பட்டார்.

“கோலங்கள் போடத் தொடங்கியதிலிருந்து என் வாழ்க்கை அவ்வளவு பாஸிடிவ் ஆகிவிட்டது. மனதை சாந்தப்படுத்து கிறது. இசையும், நடனமும் போல அற்புதமான கலை வடிவம் இது. 2016ல் திருப் பாவையின் ஒவ்வொரு பாசுரத்தையும் என் கோலத்தின் மூலம் விளக்கினேன். சின்ன வயதில் ஓவியம், கைவேலை, தையல் என்று நிறைய செய்வேன். இப் போது கோலத்தைத் தவிர எதிலும் மனது லயிப்ப தில்லை.

2016ல் முகநூலில் திலோடஸ்ஷக்தி பக்கத்தைத் தொடங்கினேன். போன வருடம் கொரோனா வந்த பிறகு எனக்குத் தெரிந்த வகையில் பாஸிடிவிட்டி கொண்டுவர வேண்டுமென்று இன்ஸ்ட்டா கணக்குத் தொடங்கி, ஆயிரம் கோலங்கள் போஸ்ட் செய்துவிட்டேன். நிறைய பேர் இது ஒரு தெய்வீகமான உணர்வைத் தந்ததாகச்

சொன்னார்கள். கோயில்களில் கூப்பிட்டால் போடுவேன். சமூக ஊடகத்திலிருந்து நான் வருமானம் எதிர்பார்ப்பதில்லை. பட்டறை களும் இப்போது ஆன்லைன் வகுப்புகளும் எடுக்கிறேன்.

இந்த கொரோனா காலம் முடிந்து, ஒரு பள்ளியிலாவது கோலத்தை ஒரு பாடமா அறிமுகப்படுத்தி, சிறியவர்களைப் போட வைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. சமூக ஊடகத்தில் நம் திறனை வெளிப்படுத்துவதில் ஒண்ணு முக்கியம். எத்தனை ஃபாலோ யர்ஸ் வருவார்கள் என்பது குறிக்கோளாக இருக்கக் கூடாது, எனக்குப் பிடித்ததை பெஸ்ட்டாக, மகிழ்ச்சியாக செய்ய வேண்டும் என்பதே நோக்கமாக இருக்க வேண்டும்.”

சமூக ஊடக நிபுணர் ஜனனி நாகராஜன்:

ஒரு திறனோ, ஆர்வமோ இருக்கும் உங்களை, இணையதளம் “நான் இருக்கிறேன் உங்கள் ஆர்வத்தை விரிவாக்க” என்று வரவேற்கிறது. பிரபல மாவது, இலவச பரிசுகள் மழை பொழி வது, யுட்யூப் மூலம் பணம் சம்பாதிப்பது என்று நம்மூர் இல்லத்தரசிகள் சக்கைப்போடு போடு கிறார்கள். சமூக ஊடகத்தில், ‘நானும் கணக்கு வைத்திருக்கிறேன் அல்லது சேனல் நடத்துகிறேன்’ என்று பெயருக்கு இல் லாமல் ஜெயிப்பதற்கு, உழைப்பு, ஆர்வம், தரமான வெளியீடு ஆகியவை முக்கியம்.

யுட்யூபிற்கு நல்ல ஒலி/ஒளி சாதனங்கள் அவசியம் - சேனலுக்குள் நுழைந்தால் பார்க்கணும் என்ற ஆவலைத் தூண்டணும் இல்லையா!

ஒரு சாதாரண எடிட்டிங் மென்பொருள் உபயோகத்தைப் புரிந்துகொண்டு வீடியோவை கச்சிதமாக தொகுத்து வழங்கலாம். நிலைத் தன்மை (ஞிணிணண்டிண்tஞுணஞிதூ) முக்கியம். முடிந்தபோது செய்வோம் என்றில்லாமல், குறிப்பிட்ட காலத்தில் தொடர்ந்து போட வேண்டும்.

இன்ஸ்டாக்ராம் உங்கள் திறமையையும், தயாரிப்புகளையும் விளம்பரப்படுத்த நல்ல ஊடகத்தளம். மக்கள் ஆர்வம் இருக்கும் விஷ யத்தைப் புரிந்துகொண்டு, லேட்டஸ்ட்டான அம்சங்களையும் கற்றுக்கொண்டு உபயோகி யுங்கள். பட்டறைகள் அல்லது வகுப்புகள் நடத்தினால் அதைப் பற்றிய சாராம்சம் மற்றும் பங்கேற்றவர்களின் நல்வார்த்தைகள் போடுவது பார்ப்பவர் கவனத்தை ஈர்க்கும்.

இது பற்றி தெரிந்தவர்களிடம் பேசுங்கள். தொழில்நுட்பத்தை படு சீக்கிரம் கற்றுக் கொண்டு உங்கள் திறமைகளுக்கு வடிகால் தேடுவது எளிது. உங்கள் இடத்தை நிறைய காலம் தக்கவைத்துக்கொள்ள நேர்மையையும் நிலைத்தன்மையையும் கெட்டியா புடிச்சுக் கங்க. ஆன்லைனில் இருக்கும் நல்ல விஷயம், கிடைத்த நேரத்தில் உங்கள் சௌகரியத்திற் கேற்ப செய்யலாம் என்பதே!
Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :