மின் கம்பம் ஏறி.. சிகரங்கள் எட்டி..

சாதனை
ராஜி ரகுநாதன்‘பெண்களுக்கு மரம் ஏறவே தெரியாது...! மின்கம்பம் ஏறுவார்களா என்ன?’ என்பது பலரது எண்ணம்.

“ஓ, ஏறுவோமே” என்றார்கள் பாரதியும் சிரீஷாவும். “கம்பத்தின் மீதேறி மின்சாரக் கம்பிகளை ஒழுங்கில் அமர்த்துவோம்” என்று அமைத்துக்காட்டி நிரூபித்தார்கள். ‘உமன் பவர்’ என்பது இதுபோன்ற பெண்கள் காட்டும் துணிவே! மகளிரின் வெற்றி கிரீடத்தில் வைரக் கல் பதித்துள்ளார்கள் பாரதியும் சிரீஷாவும்.

கிராமத்தில் பிறந்து வளர்ந்த இரு இளம் பெண்கள் புது வரலாற்றுக்கு வடிவம் கொடுத்துள்ளார்கள். மின்சாரத் துறையில், பெண்கள் செய்ய இயலாத பணி என்று கூறப்படும் லைன் மேன் உத்தியோகத்திற்கு தெலங்கானா மாநிலத்தில் முதல் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு எதிர்காலத் தலைமுறைக்கு வழிகாட்டி

யுள்ளார்கள். எத்தனை தடைகள் வந்தாலும் இலக்கை அடையும் வரை முயற்சியை விடாமல் முன்னேறினார்கள். நீதிமன்றத்தைப் புகலடைந்து நினைத்ததைச் சாதித்தார்கள்.

மெகபூபாபாத் மாவட்டம், தொர்ரூரு மண்டலம் ‘தேஸ்யா தண்டா’ என்ற பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த 32 வயது, ‘வாங்குடோது பாரதி’, சித்திபேட்டை மாவட்டம், மர்காக் மண்டலம் கணேஷ்பல்லி கிராமத்தைச் சேர்ந்த 20 வயது ‘பப்பூரி சிரீஷா’ ஆகிய இவ்விருவரின் வெற்றிக் கதை இது.

இவர்களிடமே கேட்டறிவோம்:

இத்தனை காலமாக ஆண்களுக்கு மட்டுமே உரித்தான மின்கம்பம் ஏறும் லைன்மேன் வேலையைப் பெண்கள் நீங்கள் முதல் முறையாகப் பெற்றது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பாரதி: மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. முதலில் வேலைக்காக கடுமையாக முயற்சி செய்தேன். இன்று அனைவரின் பாராட்டும் கிடைக்கும்போது பெருமையாக உள்ளது.

சிரீஷா: நாங்கள் பட்ட கஷ்டங்களுக்கு பலன் கிடைத்தது திருப்தியாக உள்ளது.

இந்தப் பணியை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?

பாரதி: நான் பழங்குடி கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள். மலை ஜாதியினரான எங்களுக்கு விவசாயம்தான் தொழில். ஆனாலும், எம்.காம்., வரை படித்தேன். ஐ.டி.ஐ. படித்தால் வேலை வாய்ப்புகள் அதிகம் என்று அதையும் படித் தேன். அரசாங்கப் பணிக்காக முயற்சித்துக் கொண்டே இருந்தேன். அப்போதுதான் லைன் மேன் நோட்டிபிகேஷன் பற்றி அறிந்து கொண்டேன். சிறு வயதிலிருந்தே வயல்களில் மரமேறுவேன், நாற்று நடுவேன், களை எடுப்@பன். வெயில், மழை பாராமல் உழைப்பேன். லைன்மேன் வேலை ஒன்றும் பெரிய கஷ்டம் இல்லை என்றுதான் தோன்றியது.

சிரீஷா: என் அப்பா, அம்மாவுக்கு நான் ஒரே பெண். எங்களுக்கு எந்த சொத்து சுகமும் இல்லை. உழைத்தால் தான் உணவு. ஊரில் வேலை கிடைக் காமல் சிறு வயதிலேயே என் பெற்றோர் மேட்சல் நகருக்குப் புலம் பெயர்ந்தார்கள். அங்கு கம்பெனிகளில் கூலி வேலை செய்து வாழ்க்கை ஓடியது. மேட்சலில் உள்ள அரசுப் பள்ளியில் பத்தாவது வரை படித்தேன். அதன் பிறகு மீண்டும் கிராமத்துக்குச் சென்று விட்டோம். அங்கேயே இருந்து ஐ.டி.ஐ. முடித்து, அதன்பின் அம்பேத்கர் யூனிவர்சிட்டியில் டிகிரி படித்து இந்த வேலைக்கு அப்ளை செய்தேன். இந்த வேலையைப் பெண்கள் செய்ய முடியாது என்று நான் நினைக்க@வயில்லை.

லைன் மேன் வேலைக்குப் பெண்கள் விண்ணப் பிக்க வாய்ப்பே இல்லை என்கிறார்களே! அந்தத் தடைகளை எவ்வாறு எதிர்கொண்டீர்கள்?

பாரதி: 2019 செப்டம்பரில் நோட்டிபிகேஷன் வந்தது. அதில் பெண்கள் அப்ளை செய்வதற் கான ஆப்ஷனே இல்லை. ‘அனைத்துத் துறை களிலும் மகளிருக்கு 33% வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. பின் இதற்கு மட்டும் ஏன் இல்லை?’ என்று கேட்டு நீதிமன்றத்தை நாடி னேன். கோர்ட்டு அனுமதி அளித்தது. எழுத்துத் தேர்வு முடிந்தது. மின் கம்பம் ஏறும் தேர்வுக்கு மீண்டும் தடை. மறுபடியும் நீதிமன்றத்துக்குச் சென்றோம். ‘எதிர்காலத்தில் நீதி கிடைக்கச் செய்ய வேண்டும்’ என்று பென்ச் தீர்மானித்தது. அந்தக் காப்பியை எடுத்துக் கொண்டு சம்பந்தப் பட்ட அதிகாரிகளிடம் காட்டினோம். “கோர்ட் தீர்ப்பில் ‘எதிர்காலத்தில்...’ என்று உள்ளது. அப்புறம் பார்க்கலாம்” என்று கூறி ஒதுக்கி விட்டார்கள். மீண்டும் நீதிமன்றத்தை நாடி னோம். முடிவு நாளுக்குள் மின்கம்பம் ஏறும் தேர்வை நடத்தி முடிக்கும்படி கோர்ட் உத்தர விட்டது. அந்த டெஸ்டில் ஒரு நிமிடத்துக்குள் மின்கம்பம் ஏறி இறங்க வேண்டும். அதில் நான் பாஸ் செய்தேன். அதிகாரிகளும் பாராட்டி தேர்ச்சிப் பெற்றதாக அறிவித்தார்கள்.

சிரீஷா: இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் போது மகளிருக்கு ஆப்ஷன் இல்லாதது மிகவும் வருத்தம் அளித்தது. இன்றும்கூட ஆண் பெண் வேறுபாடு பார்க்கும் உத்தியோகங்கள் உள்ளனவா என்று தோன்றியது. கோர்ட்டுக்குச் சென்றதால் பர்மிஷன் கிட்டியது.சென்ற மாதம் 2020 டிசம்பர் 23ல் ஹைதராபாத் யூசுப்குடாவில் உள்ள சி.பி.டி.ஐ. (சென்ட்ரல் பவர் ட்ரெய்னிங் இன்ஸ்டிடியூட்)ல் மின்சாரத் துறை உயர் அதிகாரிகள் முன்னிலையில் மின் கம்பம் ஏறும் தேர்வு நடைபெற்றது. அதில் வெற்றிகரமாகத் தேர்வு பெற்றேன்.

மின்கம்பங்கள் ஏறவும் இறங்கவும் எப்படி கற்றுக் கொண்டீர்கள்?

பாரதி: நான் இரண்டு குழந்தைகளின் தாய். மகனுக்கு எட்டு வயது. மகளுக்கு நான்கு வயது. பழங்குடிக் கிராமத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு மரம் ஏறுவதும் இறங்குவதும்

சிறு வயதிலிருந்தே பழக்கம்தான். அந்த தைரியத்தில்தான் என்னால் மின் கம்பம் ஏற முடியும் என்று கோர்ட்டுக்கு விண்ணப் பித்தேன். ஆயினும், கம்பம் ஏறும் தேர்வுக்கு முன்பு வாரங்கலில் உள்ள என்.பி.சி.எல்.

கிரவுண்டில் ஒரு மாத காலம் தினமும் காலையும் மாலையும் பயிற்சி செய்தேன்.

சிரீஷா: என் தாய்மாமா சேகர் கௌட் எனக்குப் பயிற்சி அளித்தார். வீட்டில் கயிறு கட்டிக் கொண்டு கம்பம் ஏறும் முறையையும் அதன்பின், பிரஞாபூரில் உள்ள சப்-ஸ்டேஷனில் ணீணிடூஞு ஏறுவதற்கும் கற்றுக்கொடுத்தார். ரேஷன் அரிசியைத் தவிர வேறு எந்த சத்தான உணவும் கிடைக்காத பரிதாபமான நிலையில் இருந்த எனக்கு, பிசிகல் ஃபிட்னசுக்காக என் மாமா

சத்துணவுக்கு ஏற்பாடு செய்தார். சுமார் ஆறு மாதங்கள் பயிற்சி செய்தேன். ஏழ்மையில் பல இன்னல்களை அனுபவித்தேன். அந்தச் சிரமங்களுக்கு முன்பாக, கம்பம் மீது ஏறி மின்சார வேலைகள் செய்வது ஒன்றும் பெரிதாகத் தோன்றவில்லை. எத்தனை தடைகள் எதிர்ப்பட்டாலும் மனம் தளரவில்லை. பிடிவாதமாக நீதிமன் றத்தைச் சுற்றி வந்தேன். தெலங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் என்னைப் பாராட்டியதை மறக்க முடியாது. வேலைக் கான உத்தரவில் ‘ஜூனியர் லைன் மேன்’ என்றிருந்தாலும், பல சிரமங்களை வெற்றிகண்டு நாங்கள் இந்தப் பணியைப் பெற்றுள்ளோம். மேலும் போராடி ‘லைன் உமன்’ என்ற

அத்தாட்சியையும் பெற்றே தீருவோம்.

‘வாங்குடோது’ பாரதி! உங்கள் முயற்சிகளைப் பற்றிக் கூறுங்கள்.

பாரதி: என் சிறுவயதில் பழங்குடித் தண்டாவில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த பள்ளிக்கூடத்திற்கு நடந்தே சென்று வருவேன். தேருட்ல கல்லூரியில் இன்டர், பத்ராசலம் அரசுக் கல்லூரியில் டிகிரி, கேயூ யுனிவர்சிடியில் எம்.காம்., படித்தேன். 18 வயதிலேயே எனக்குத் திருமணம் ஆனது. குழந்தைகள் பிறந்த பிறகு மாமியார் வீட்டில் விவசாயப் பணி öŒ#து கொண்டு இருந்தேன்.

ஆயினும், ஒவ்வொரு அரசாங்க வேலைக்கும் அப்ளை செய்து முயற்சித்துக்கொண்டே இருந்தேன். லைன் மேன் வேலை இப்போதுதான் கிடைத்தது. நாள் முழுவதும் விவசாய வேலை செய்து வந்ததால் ஒரே நிமிடத்தில் போலில் ஏறி இறங்குவது பெரிய கஷ்டமாகத் தெரியவில்லை. ஒருபுறம் வட துருவத்தைத் துளைத்து

சான்பிரான்சிஸ்கோவில் இருந்து பெங்களூரு வரை நான்ஸ்டாப் ஏர் இந்தியா விமானத்தை ஓட்டிய ஆல்உமன் டீமில் ‘பாப்பகாரி தன்மயா’ என்ற கேப்டன் கூட உள்ளார். மகளிரின் வெற்றி கிரீடத்தில் இது ஒரு மைல்கல் என்றால், அதே போல் தெலங்கானாவில் ஒரு அற்புதம்...!

சிரீஷா, பாரதி என்ற இரு இளம்பெண்கள் தள ராத நிரந்தரப் போராட்டம் நடத்தி முதல் முறை யாக எலக்ட்ரிசிட்டி போர்டில் ஜூனியர் லைன் மேன் உத்தியோகம் பெற்று

சாதித்து உள்ளார்கள். இது மற்றுமொரு மைல்கல்.

ஒன்று பெருமைக்கான அங்கீகாரம். அடுத்தது, வயிற்றுப்பாட்டுக்கான போராட் டம். ஆனால் வெற்றியில் சிறிய, பெரிய என்ற வேறுபாடு கிடையாது.

இரண்டுமே உயர்ந்த சிகரங்களை எட் டிய சம்பவங்களே. பெண் களை உற்சாகப் படுத்துவோம்... அற்புத வெற்றி களைச் சாதித்ததற்குப் பாராட்டுவோம்.

மிகவும் தன்னம்பிக்கையோடும் அதையும் மீறிய தைரியத்தோடும் லைன் மேன் வேலையில் சேர்ந்த இவர்களை நாம் மனதார வாழ்த்துவோம்.
Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :