தடுப்பூசி போட்ட பிறகும் கொரோனா தாக்குகிறதே?

ஸ்பெஷல் ஸ்டோரி
ஸாஜஹான், தில்லி



‘கோவிட் தடுப்பூசி போட்ட பிறகும் கோவிட் தொற்று ஏற்படுகிறதே?’ என்பதும் இப்போது புதிதாக எழுந்துள்ள கேள்வி.

உண்மையிலேயே வேக்சின் குறித்து அறிய விரும்புவோருக்கு எனக்குத் தெரிந்த சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் மருத்துவனோ, மருத்துவத் துறை சார்ந்தவனோ அல்ல. ஆர்வத்தாலும் தொழில்ரீதியாகவும் விஷயங்களைக் கற்றுக் கொள் பவன். சுமார் ஒரு மாதத்துக்கு முன்னால் மொழியாக்க வேலை ஒன்று அமெரிக்காவிலிருந்து எனக்கு வந்தது. இன்று இங்கே என்ன கேள்வி எழுப்பப்படுகிறதோ அதே கேள்வி அங்கே அப்போதே எழும்பிவிட்டது போலிருக்கிறது. அதனால், அந்தக் கேள்விகளுக்கான பதில்களை (தமிழிலும்) அளித்து மக்களுக்குப் பரப்பி விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்தார்கள். அந்த மொழியாக்கத்திலிருந்தும், இதரத் தகவல்களி லிருந்தும் இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது.

கோவிட் வேக்சின் என்பது என்ன?

கோவிட் வேக்சினுக்கு நான்கு வகை வேக்சின்கள் பரிசோதிக்கப்பட்டன. - Whole virus vaccine என்பது வைரசைக்கொண்டே தயாரிக் கப்படுவது.

Nucleic acid vaccine என்பது வைரசின் மரபணுவின் (டி.என்.ஏ. அல்லது ஆர்.என்.ஏ.) கூறுகளைக் கொண்டு தயாரிக்கப்படுவது.

Protein subunit vaccine என்பது, வைரசின் புரதத்தி லிருந்து பிரித்தெடுத்த புரோட்டீன்களைக் கொண்டு தயாரிக்கப்படுவது.

Viral vector&based vaccine என்பது, திருத்தப்பட்ட வைரஸைக் கொண்டு தயாரிக்கப்படுவது.

இப்போது பயன்பாட்டில் உள்ள கோவிஷீல்ட், விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள ஸ்புட்னிக் வி ஆகிய இரண்டும் வைரல் வெக்டார் வேக்சின்கள். அதாவது, வேறொரு வைரஸின் திருத்தப்பட்ட வடிவத் தைக் கொண்டு தயாரிக்கப்படுவது. கோவிஷீல்ட், சிம்பன்சி குரங்குகளிடமிருந்து எடுக்கப்பட்ட அடினோவைரஸை பலவீனப்படுத்தி, கொரோனா வைரஸ் போலவே தோற்றமளிக்குமாறு தயாரிக்கப் பட்டது. ஸ்புட்னிக் வி, நுரையீரல் சார்ந்த நோய்களை உருவாக்கும் மனித வைரஸ்களிலிருந்து உருவாக்கப் பட்டது. கோவாக்சின் முதல் வகையைச் சேர்ந்தது - கொல்லப்பட்ட கொரோனா வைரஸிலிருந்து தயாரிக்கப் படுவது. (அமெரிக்காவில் போடப்படும் Pfizer மற்றும் Moderna வாக்சின்கள் மரபணுக்கூறுகளைக் கொண்டு (mRNA வாக்சின்) தயாரிக்கப்படுபவை.) ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் AdV26 என்ற வேக்சினுக்கும் விரைவில் இந்திய அரசு அங்கீகாரம் அளிக்கும் எனக் கூறப்படுகிறது. இதுவும் சேர்ந்தால், கோவிஷீல்ட், ஸ்புட்னிக் வி, AdV26 ஆகிய மூன்று வைரல் வெக்டர் வேக்சின்களாக இந்தியாவில் தரப்படும்.

கோவிட் வேக்சின்கள் எவ்வாறு செயல்படுகின்றன?

எளிமையாகச் சொல்வதானால் கொரோனா வைர ஸைப் போன்ற வலுவற்ற வைரஸைக் கொண்டவைதான் வேக்சின்கள். (வைரத்தை வைரத்தால் அறுப்பது என் பார்களே, அதுபோல, கிட்டத்தட்ட எல்லா நோய்களுக்கான வேக்சின்களும் அந்தந்த நோய்க் கிருமிகளைக் கொண்டே தயாரிக்கப்படு கின்றன.) இவை உடலில் நுழைந்ததும், உடலில் உள்ள நோயெதிர்ப்புச் சக்தி விழித்துக் கொண்டு இவற்றை எதிர்த்துப் போராடி அழிக்கின்றது. ஒரு முறை அப்படி ஆகிவிட்டால், உடலின் நோயெதிர்ப்புச் சக்தி யில் உள்ள மெமரி செல்கள் இந்த வைரசை நினைவில் வைத்துக் கொள்கின்றன. அடுத்து எப்போது இந்த வைரஸ் தாக்கினாலும் உடனே எதிர்வினை காட்டி, வைரஸை எதிர்த்துப் போராடி அழிக்கும்.

இப்போது சாமானியர்களின் கேள்விகளுக்கு வருவோம்.

வேக்சின் போடப்பட்டவர்களுக்கு கோவிட் வருமா? ஏன் வருகிறது? அப்படியானால் வேக்சின் வேலை செய்யவில்லையா?

கோவிட் மட்டுமல்ல, எந்தவொரு தடுப்பு மருந்தும் உடனடி பலனைத் தராது. கோவி ஷீல்ட் அல்லது கோவாக்சின் தரப்பட்ட பிறகு, உடலில் நோயெதிர்ப்புச் சக்தி உருவாக சில வாரங்கள் ஆகும். இரண்டாவது டோசும் தரப்பட்ட பிறகே முழுமையான தடுப்புத்திறன் கிடைக்கும். (இரண்டாவது டோசும் தரப்பட்ட பிறகு இரண்டு வாரங்கள் கழித்தே பாதுகாப்பு கிடைக்கும் என்கிறார்கள். இதை விண்டோ பீரியட் என்கிறார்கள்.)

ஒருவருக்கு ஏற்கெனவே தொற்று ஏற்பட் டிருந்து, வேக்சின் போடும்போது தெரியாமல் இருந்திருந்தால், அதன்பிறகு பரிசோதனை செய்யும்போது பாசிடிவ் காட்டும் சாத்தியங் கள் உண்டு. தடுப்பூசியின் காரணமாக கோவிட் ஏற்படுவதில்லை. முழுமையான பாதுகாப்பு கிடைக்கும்வரை தொற்று கண்டறியப்பட வாய்ப்பு உண்டு.

தடுப்பூசிகள் நோய்களைத்தான் தடுக்கும், தொற்றினைத் தடுக்காது. அதாவது, தொற் றுக்கு ஆளானாலும் நோயின் தீவிரம் ஏற்படா மல், உயிருக்கு ஆபத்தில்லாமல் காப்பாற்றிக் கொள்ள முடியும்.

பக்கவிளைவுகள் இல்லை என்றால் மருந்து வேலை செய்யவில்லை என்று அர்த்தமா?

நீங்கள் சாதாரணமாகப் பயன்படுத்தும் ஏதேனுமொரு மருந்துக்கான பக்கவிளைவு களைத் தேடிப் படித்துப் பாருங்கள். அதன் பக்கவிளைவுகளின் பட்டியலைப் படித்தால், அந்த மருந்தையே சாப்பிட மாட்டீர்கள்! உதாரணமாக, மீதமுள்ள என் ஆயுள் முழுமைக் கும் தினமும் ஒரு மருந்தை இரண்டு வேளை எடுத்தாக வேண்டும். Mesahenz அல்லது mesalmine போன்ற அந்த மருந்தின் பக்க விளைவுகள்: வாயு பிரிதல், தலைவலி, அரிப்பு, வயிற்றுப்போக்கு, குமட்டல், வயிற்று வலி, தலைச்சுற்றல், மூட்டுவலி, தசை வலி, வாந்தி. இந்தப் பக்கவிளைவு களுக்காக நான் மாத்திரை சாப்பிடுவதை நிறுத்திவிட்டால் பதிவு எழுதமுடியுமா?

ஒரு மருந்தின் பக்கவிளைவுகள் எனப் பட்டியல் இடப்படும் எல்லாம் எல்லாருக்கும் ஏற்படும் என்பதில்லை. கோவிட் வேக்சினைப் பொறுத்தவரை, ஊசி போட்ட இடத்தில் வலி அல்லது வீக்கம், சிவத்தல், அரிப்பு, காய்ச்சல், குளிர் காய்ச்சல், தலைவலி, மூட்டு வலி போன்றவை பக்கவிளைவுகளாக இருக்க லாம். இவை எல்லாம் ஏற்பட்டால்தான் நல்லது என்று நினைத்துவிட வேண்டாம். சிலருக்கு எல்லா பக்கவிளைவுகளும் இருக்க லாம், சிலருக்கு எந்தப் பக்கவிளைவும் இல் லாமலும் இருக்கலாம். பக்கவிளைவுக்கும் மருந்து வேலை செய்வதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

வேக்சின்கள் எந்த அளவுக்குப் பாதுகாப்பு தரும்?

பல்வேறு நோய்களுக்கு உருவாக்கப்பட்ட பல தடுப்பு மருந்துகள் பல்வேறு அளவில் பலன் தந்துள்ளன. சில தடுப்பு மருந்துகள், சில நோய்களை முற்றிலும் ஒழித்துவிட்டன (உதாரணம், சின்னம்மை, போலியோ போன்றவை). இந்தியாவில் கோவிட் வேக்சினைப் பொறுத்தவரை, இரண்டு டோஸ்களும் போட்டால் - கோவிஷீல்ட் திறன் 90 சதவி கிதம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கோவாக்சினைப் பொறுத்தவரை, மத்திய அரசின் அவசரகோல நடவடிக்கைகளின் காரணமாக, முழு பரிசோதனை முடியாமலே அங்கீகரிக்கப்பட்டது. இப்போது மூன்றாம் கட்டப் பரிசோதனையின் இடைக்கால அறிக்கை வந்துவிட்டது. இதன் திறன் 81

சதவிகிதம் எனக் கூறப்படுகிறது.

ஸ்புட்னிக் வி வேக்சின் திறன் 92 சதவிகிதம் என மதிப்பிடப்பட்டுள்ளது.(அமெரிக்காவின் கஞூடித்ஞுணூ மற்றும் Mணிஞீஞுணூணச் வேக்சின்களின் திறன் 94 சதவிகிதம் என மதிப்பிடப்பட்டுள்ளது.)

அப்படியானால், எல்லாருக்குமே பயன் கிடைக்காதா?

ஒருவர் விடாமல் மக்கள் அனைவருக்குமே தடுப்பூசி போட்டாக வேண்டும் என்பதில்லை. போதுமான அளவுக்கு மக்கள் இOஙஐஈ-19 லிருந்து பாதுகாக்கப்பட்டுவிட்டால், பிறகு மக்கள் திரளிடையே நோய் எளிதாகப் பரவ இயலாது. இதுதான் ‘மக்கள் திரள் நோயெதிர்ப்புச் சக்தி’ (ஏஞுணூஞீ டிட்ட்தணடிtதூ) என அழைக்கப்படுகிறது; இது ஏற்பட்டுவிட்டால், மருத்துவமனைகளின் மீது பாரம் குறையும், இயல்பு நிலைக்குத் திரும்ப முடியும். அமெரிக்காவைப் பொறுத்தவரை, யு.எஸ். ஸில் மக்கள் திரள் நோயெதிர்ப்புச் சக்தி ஏற்பட வேண்டுமானால், குறைந்தது 70

சதவிகிதம் பேருக்கு வேக்சின் போடப்பட வேண்டும் என்று வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

இப்போது இந்தியாவில் டபுள்-ம்யூடன்ட் (பிறழ்வுற்ற வைரஸ்) வைரஸ்கள் பரவி வருகிறதாமே? இப்போது போடப்படும் வேக்சின், புதிய வகை வைரஸுக்கு எதிராகவும் வேலை செய்யுமா?

இந்தியாவில் மட்டுமல்ல, எட்டு நாடுகளில் பிறழ் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள் ளது. இரட்டைப் பிறழ்வு வைரஸ் எனப்படும் வைரஸும்கூட 15 வகைகள் உள்ளன என் கிறார்கள். கொரோனா வைரஸைப் பொறுத்த வரை இன்னும் பல வகை பிறழ்வுகள் ஏற்பட் டிருக்கின்றன, இன்னும் ஏற்பட்டிருக்கலாம், இன்னும் கண்டறியப்படாமலும் இருக்கலாம். இந்தியாவில் கோவிட் திடீரென அதிகரிப்ப தற்கு இந்தப் பிறழ் வைரஸ்தான் காரணம் என்று கருத இடமிருக்கிறது. அறிவிய லாளர்கள் இதை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். மேலே கண்ட கேள்விக் கான பதிலைக் கண்ட றிய முனைந்திருக்கி றார்கள்.

நோயெதிர்ப்புச் சக்தி என்பது சிக்க லான ஒரு விஷயம். நமது உடல் பல் வேறு வகையான ஆன்டிபாடிக்களை உருவாக்குகிறது. பல் வேறு ஆன்டிபாடிக்கள் வைரஸின் பல்வேறு பாகங் களைத் தாக்குகின்றன. எனவே, கோவிட் வேக்சின் வேலை செய்யுமா என்பது, கொரோனா வைரஸின் ஸ்பைக் புரோட்டீன் மீது ஆன்டிபாடிக்கள் எந்த அளவுக்குத் தாக்குதல் நடத்துகின்றன என்பதைப் பொறுத்து இருக்கிறது. அதற்காக, இப்போதைய வேக்சின் புதிய பிறழ் வைரஸிட மிருந்து பாதுகாப்புத் தராது என்றும் சொல்லி விட முடியாது. எல்லா வேக்சின்களும் கொரோனா வைரஸிலிருந்தே தயாரிக்கப்படு வதில்லை. முதலில் குறிப்பிட்டதுபோல, கொரோனா வைரஸ் என்ன பாதிப்புகளை ஏற்படுத்துகிறதோ அதேபோன்ற பாதிப்பு களை ஏற்படுத்திய இதர வைரஸ்களையும் கலந்தே இந்த வேக்சின்கள் தயாரிக்கப் பட்டுள்ளன. எனவே, பிறழ் வைரஸிலிருந்தும் இவை பாதுகாக்கும் என்று நம்பலாம்.

நம்மிடம் இருப்பது இப்போதைக்கு இந்த வேக்சின்தான். கண்டவர்களும் பரப்பும் வதந்திகளை நம்பி தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் விட்டால், இன்னும் பரவல் அதிகரிக்கவே செய்யும். இன்னும் பல்லாயிரம் பேர் இறக்க நேரிடும். எனவே, தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வயது / வாய்ப்பு உள்ளவர்கள் அவசியம் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்.

தடுப்பூசி போட்டதால் மாரடைப்பு போன்ற பாதிப்புகள் நேர் கிறதா?

இந்தியாவில் மட்டு மல்ல, அமெரிக்காவி லும் இதுபோல சிலர் கிளப்பிவிட்டதால் தான் தடுப்பூசி விழிப்புணர்வுக் காக ஆரம்பத்தில் குறிப்பிட்ட மொழி யாக்க வேலை எனக்கு வந்தது. தடுப் பூசியால் மலட்டுத் தன்மை ஏற்படுகிறது, நோயெதிர்ப்புச் சக்தி பாதிக்கிறது போன்ற வதந்தி கள் அங்கே சுற்றுகின்றன.

கொரோனா வைரஸால் பல்வேறு சிக்கல் கள் வரலாம். நுரையீரலை, சுவாச மண்டலத் தைத் தாக்குவது தவிர, மற்ற சில நோய்கள் உள்ளவர்களும் அதிக பாதிப்புக்கு உள்ளா கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். கொரோனா இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ளப்படவில்லை.

வைரஸ்தான் பிரச்னைகளை ஏற்படுத்துமே தவிர, வைரஸுக்கு எதிரான வேக்சின் பிரச்னைகளை ஏற்படுத்தாது. ஏனென்றால், வேக்சினின் வேலை வைரஸை அடையாளம் கண்டு தாக்குவதற்கான ஆன்டிபாடிக்களை உருவாக்கச் செய்வதுதான். ஏற்கெனவே பார்த்ததுபோல சில வேக்சின்கள் வைரஸின் ஸ்பைக் புரோட்டீனைத் தாக்கும். வேறு சில மரபணு அமைப்பைத் தாக்கும்.

தடுப்பூசி போட்டுக் கொண்டாயிற்று. பிறகு எதற்கு மாஸ்கும் இடைவெளியும்?

தடுப்பூசி போட்டுக்கொண்டது உங்களைப் பாதுகாத்துக்கொள்ள. மாஸ்க் அணிவது உங்களிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவாமல் இருக்க. வேக்சின் போடப்பட்ட மக்களும் அறிகுறிகள் இல்லாமலே தொற்றுக்கு ஆளாகி யிருக்கவும் கூடும். தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் தொற்றுக்கு ஆளாகக் கூடும் என்பதை மேலே பார்த்தீர் கள் அல்லவா? எனவே, மாஸ்க் அணிவதும் இடை வெளியைப் பராமரிப் பதும் உங்களிடமி ருந்து மற்றவர்களுக் குப் பாதிப்பு ஏற்படா மல் இருப்பதற்காக.

ஒரு வாதத்துக்காக, இப்போதைய வேக்சின் புதிய வகை வைரஸ்களுக்கு வேலை செய்யாது என்றே வைத்துக் கொள் வோம். அப்படியா னால் நமக்குப் பாது காப்புதான் என்ன? இதற்கான தீர்வினை அறிவியலாளர் கண்டறியும் வரை மாஸ்க் அணிவதும், கூட்டங் களைத் தவிர்ப்பதும், இடைவெளி பராமரிப்பதும், சானிடைஸ் செய்வதும்தான். எச்சரிக்கை

மருத்துவமனைகள் நிரம்பிக் கொண்டிருக் கின்றன. நோய் கண்டறியப்பட்டவர்களுக்கு இடம் கிடைக்க அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள்.

கோவிட் டெஸ்ட் எடுக்கவும் டிமாண்ட் கடுமையாக அதிகரித்து வருகிறது. சில லேப் களில், இன்று புக் செய்தால் அடுத்த வாரம் தாம் டெஸ்ட் எடுக்க வருவார்கள். (தில்லியில் அரசு நடத்திவந்த சில பரிசோதனை மையங் களை மூடிவிட்டது.)

கோவிட் பாசிடிவ் எனக் கண்டறியப்பட்ட தமிழக நண்பர் ஒருவர், தான் தனியாக இருப்பதால் மருத்துவமனைக்குச் சென்று தங்கிவிடலாம் என்று சத்தர்பூர் சென்றிருக் கிறார். அங்கே மருத்துவமனைக்கான அடை யாளமே இல்லை. இந்தியாவிலேயே மிகப் பெரிய கோவிட் சிறப்பு மருத்துவ மனை என்று படம் காட்டப் பட்ட சில தற்காலிக மருத் துவமனைகள் பிரிக்கப் பட்டுவிட்டன. குஜராத் நிலைமை பற்றி யெல்லாம் சொல் லவே வேண்டாம்.

இன்னும் சில நாட்களில் தடுப்பூசிக்குக் கடும் தட்டுப்பாடு வரப் போகிறது. இரண் டாவது டோஸ் போட வேண்டியவர் களுக்காவது தட்டா மல் கிடைக்குமா என்ற கேள்வி பிரம்மாண் ட மாக நிற்கிறது.

கொரோனா என்பது இல்லுமி னாட்டிகளின் சதி, தடுப்பு மருந்துகளே தேவையில்லை, இயற்கை மருத்துவத்தில் தீர்வு இருக்கிறது என்னும் வாட்ஸாப் வாயர் களின் உளறல்களை நம்பிக்கொண்டு இருந் தீர்கள் என்றால், உங்கள் சுற்றத்தாரையும் பிள்ளைகளையும் அபாயத்தில் தள்ளுகிறீர் கள் என்றுதான் பொருள். ஒரு சிலருக்கு ஏற்பட்ட பாதிப்புகளைக் கணக்கில் கொண்டு பல கோடிப் பேருக்கு ஏற்படக்கூடிய பயனைப் புறக்கணித்து விடக் கூடாது..




Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :